தமிழ் சினிமா ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் தான் ‘கூலி’.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம், ஆரம்பத்திலிருந்தே பல்வேறு காரணங்களுக்காக கவனம் பெற்றது.
இதையும் படிங்க: என்ன தான் இருந்தாலும் அப்பா இல்லையா.. இப்படியா சொல்லுவாங்க - நடிகை ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்..!

மிகுந்த நட்சத்திர பட்டாளம், வித்தியாசமான கதைக்களம், ஆக்ஷன் மற்றும் திரில்லர் கலந்து உருவாக்கப்பட்ட திரைக்கதை என, இது வரையிலான ரஜினியின் படங்களில் மாறுபட்ட ஒரு முயற்சி என கருதப்படுகிறது.

இந்த ‘கூலி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா படம் வெளியாவதற்கு முன்பு சமீபத்தில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த இசை வெளியீட்டோடு சேர்த்து, ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கிய ட்ரெய்லரும் அன்று வெளியானது.

அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கும் இந்த படத்தில், பல மாஸ் மற்றும் மெலோடியான பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

இது அனிருத்தின் ரஜினி மற்றும் லோகேஷ் கூட்டணியில் மூன்றாவது படம். இந்த திரைப்படத்தில் அமீர்கான், நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சவுபின் ஷாயிர், உபேந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதுபோன்ற பான்-இந்தியா நட்சத்திர கூட்டணி, தமிழ்ப் படங்களில் தற்போது ஒரு புதிய உயர்நிலையாக பார்க்கப்படுகிறது.

‘கூலி’ படத்திற்கு இந்திய திரைப்பட தணிக்கை வாரியத்திலிருந்து ‘ஏ’ சான்றிதழ் வழங்கியது முதலில் பிரச்சனை ஆனாலும் தற்பொழுது மாறியுள்ளது.

இது, படத்தில் இடம் பெற்றுள்ள அதிரடி சண்டைக் காட்சிகள் மற்றும் தீவிரமான திரைக்காட்சிகள் காரணமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்பொழுது இந்த படத்தின் வசூலானது ரூ.500 கோடிகளுக்கு மேல் தாண்டி இருக்கிறது.

படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்தாலும் படம் ஹிட் கொடுத்துள்ளது.

குறிப்பாக ஸ்ருதி ஹாசன் கதாபாத்திரம் பெருமளவில் ரசிகர்களால் புகழப்பட்டது.

பல நாட்கள் காத்திருப்புக்கு பின் வெளியான 'கூலி' இன்றும் பலரது மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

இந்த நிலையில் படபிடிப்பின் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை ஸ்ருதி ஹாசன் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: அடி தூள்... கோலிவுட் வரலாற்றில் சாதனை படைத்த கூலி திரைப்படம்... முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?