மும்பையைச் சேர்ந்த நடிகை சித்தி இத்னானி, தற்போது தென்னிந்திய சினிமாவில் கவனம் பெறும் இளம் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

சிறிய வயதிலிருந்தே கலை மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்ட இவர், குச்சிபுடி நடனத்தில் பயிற்சி பெற்று, பின்னர் மாடலிங் உலகில் காலடி எடுத்து வைத்தார்.
இதையும் படிங்க: இப்படி அழகால் அடித்தால் என்ன செய்ய..! சிரிப்பால் மயக்கும் நடிகை ருக்மணி வசந்த்..!

தன்னுடைய கவர்ச்சி நிறைந்த தோற்றமும், அழகிய சிரிப்பும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் “டிம்பிள் க்வீன்” என்ற பெயரை பெற்றுத் தந்தது..

சித்தி இத்னானி 1996 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி மும்பையில் பிறந்தார். அவரது தந்தை அசோக் இத்னானி ஒரு வோய்ஸ் மாடுலேஷன் பயிற்சியாளர்.

திரைப்பட துறைக்குள் வருவதற்கு முன் சித்தி மாடலிங் துறையில் தன்னை நிலைநாட்டிக் கொண்டார். 2017 ஆம் ஆண்டில் “Miss TGPC West” பட்டத்தை வென்றார்.

அதனைத் தொடர்ந்து 2018 இல் “Miss Supertalent India” என்ற பட்டம் பெற்று இந்தியாவை சர்வதேச அளவில் பிரதிநிதித்துவம் செய்தார்.

சித்தி இத்னானி 2017 இல் குஜராத்தி மொழியில் வெளிவந்த Grand Hali திரைப்படத்தின் மூலம் திரை உலகில் தனது பயணத்தைத் தொடங்கினார்.

2018 இல் தெலுங்கு சினிமாவில் Jamba Lakidi Pamba என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். சித்தி இத்னானிக்கு திருப்புமுனையாக அமைந்தது வெந்து தனிந்தது காடு திரைப்படம் தான்.
இதையும் படிங்க: பிரபல யூடியூபரான ஹர்ஷத் கானுக்கு இவ்வளவு மவுசா..! 'ஆரோமலே' படத்தின் உரிமத்தை போட்டிபோட்டு பெற்ற நிறுவனம்..!