• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    கொலை பழியுடன் சுற்றும் முத்து.. ஸ்ருதி குடும்பத்தின் மீது கோபத்தில் ரவி..! அனல் பறக்கும் 'சிறகடிக்க ஆசை'யில் இன்று..!

    தொடர்ந்து மக்களை பரபரப்பில் வைத்தியிருக்கும் 'சிறகடிக்க ஆசை'யில் இன்று அதிரடி திருப்பம் நிகழ்ந்துள்ளது.
    Author By Bala Tue, 03 Feb 2026 11:46:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-siragadikka-aasai-3nd-to-7th-february-2026-promo-tamilcinema

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியல், கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பரபரப்பான திருப்பங்களுடன் ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளது. குடும்ப உறவுகள், உணர்ச்சி போராட்டங்கள், தவறான புரிதல்கள், பழிவாங்கும் எண்ணங்கள் என பல அடுக்குகளில் கதை நகர்ந்து வரும் நிலையில், 2026 பிப்ரவரி 3ஆம் தேதிக்கான எபிசோடு பார்ப்பவர்களின் மனதை கனக்கச் செய்துள்ளது. ஒரே எபிசோடில் அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள், ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த எபிசோடு, நீத்துவின் ரெஸ்டாரண்ட் தாக்குதல் சம்பவத்தை மையமாக கொண்டு தொடங்குகிறது. கடந்த எபிசோட்களில், நீத்துவின் ரெஸ்டாரண்டை ஆள் வைத்து அடித்து உடைத்ததும், நீத்துவை நேரடியாக தாக்கியதும் முத்து தான் என ரவி நினைத்துக் கொண்டிருந்தார். அதனால் முத்துவிடம் கடும் கோபத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரவி, அவரை கடுமையாக குற்றம் சாட்டினார். குடும்பத்தினரும் முத்துவே இதற்கு காரணம் என சந்தேகப்பட்ட நிலையில், இன்றைய எபிசோடில் அந்த உண்மை மெதுவாக வெளிச்சத்திற்கு வருகிறது. இந்த தாக்குதலுக்குப் பின்னால் முத்து இல்லை என்பது தெரிந்ததும், குடும்பத்தில் ஒரு பக்கம் நிம்மதியும், மறுபக்கம் புதிய பிரச்சனைகளும் உருவாகின்றன.

    ஒருபுறம் நீத்து தொடர்பான பிரச்சனை சற்று தெளிவாகத் தொடங்கிய நேரத்தில், மற்றொரு புறம் முத்துவின் மன உளைச்சல் மிகுந்த ஒரு பெரிய விபத்துக்கு வழிவகுக்கிறது. நீத்து விவகாரம், ரவி உடனான மனக்கசப்பு, குடும்பத்தில் எழுந்த குற்றச்சாட்டுகள் ஆகியவற்றால் மன அழுத்தத்தில் இருந்த செல்வம், காரில் செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்து அருணின் அம்மா மீது மோதி விபத்தை ஏற்படுத்துகிறார். இந்த விபத்து கதையில் மிகப் பெரிய திருப்பமாக அமைந்துள்ளது. ஏனெனில், அந்த விபத்தில் அருணின் அம்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிடுகிறார். இந்த காட்சி ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

    இதையும் படிங்க: 'சிறகடிக்க ஆசை' சீரியல் திடீர் பரபரப்பு..! முத்துவின் சட்டையை பிடித்து அடிக்க சென்ற ரவி.. குடும்பமே ஷாக்கான புரொமோ..!

    siragadikka aasai

    இந்த சம்பவத்தை தொடர்ந்து, போலீசார் செல்வத்தை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். ஒரு தவறான சூழ்நிலை எப்படி ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை முழுவதுமாக மாற்றி விடுகிறது என்பதைக் காட்டும் விதமாக இந்த காட்சி அமைந்திருந்தது. செல்வத்தின் குடும்பத்தினர் துயரத்தில் மூழ்க, அருணின் குடும்பம் பேரிழப்பை சந்திக்கிறது.

    அருணின் அம்மா உடலுக்கு அஞ்சலி செலுத்த பலரும் வருகிறார்கள். அந்த நேரத்தில் முத்துவும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் இறுதி அஞ்சலி செலுத்த வருகிறார். ஆனால், வாசலிலேயே அருண் முத்துவை தடுத்து நிறுத்துகிறார். “என் அம்மாவின் சாவுக்கு நீ தான் காரணம். செல்வத்தை இப்படி மனநிலைக்கு கொண்டு வந்ததே நீ தான். எல்லாத்துக்கும் நீ தான் காரணம்” என்று அருண் முத்துவை கடுமையாக குற்றம் சாட்டுகிறார். பலரும் இடையில் தலையிட்டு சமாதானப்படுத்த முயன்றாலும், அருண் யாருடைய பேச்சையும் கேட்கவில்லை. கடைசியாக ஒருமுறை தன் அம்மாவின் முகத்தை பார்க்க அனுமதிக்குமாறு முத்து கெஞ்சும் காட்சி பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. ஆனால், அருண் அந்த கோரிக்கையையும் நிராகரித்து முத்துவை அனுப்பிவிடுகிறார்.

    இந்த மனதை நொறுக்கும் காட்சிக்கு இணையாக, மற்றொரு பக்கம் நீத்துவின் ரெஸ்டாரண்ட் தாக்குதல் விவகாரத்தில் மிக முக்கியமான உண்மை வெளிச்சத்திற்கு வருகிறது. நீத்துவின் ரெஸ்டாரண்டை அடித்து நொறுக்கிய ரௌடிகள், ஸ்ருதியின் வீட்டிற்கு வந்து பணம் வாங்குகிறார்கள். இதை பார்த்து அதிர்ச்சியடையும் ஸ்ருதி, நேரடியாக தனது தந்தையிடம் உண்மையை கேட்கிறாள். அப்போது, “என் மகள் வாழ்க்கையை கெடுக்கும் ஒருத்தியை நான் சும்மா விட மாட்டேன்” என்று கூறி, நீத்துவின் ரெஸ்டாரண்டை அடித்து நொறுக்க ஆள் அனுப்பியது நான் தான் என்று ஸ்ருதியின் தந்தை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்.

    siragadikka aasai

    இந்த ஒப்புக்கொள்ளல் ஸ்ருதியின் வாழ்க்கையை ஒரே நிமிடத்தில் சிதைக்கிறது. ரவியுடன் தனது எதிர்காலம் இனி சாத்தியமில்லை என்ற உண்மை அவளுக்கு புரிகிறது. தன் தந்தையின் தவறான செயல், தன் காதலை அழித்து விட்டதே என்ற வேதனையில் ஸ்ருதி உடைந்து போகிறாள். இந்த உண்மையை அவள் மீனாவுக்கு தொலைபேசியில் சொல்ல, மீனா அதனை வீட்டிலுள்ள அனைவரிடமும் கூறிவிடுகிறார். இதனால், குடும்பத்தில் இன்னொரு பெரிய பரபரப்பு உருவாகிறது.

    இதற்கிடையில், செல்வத்தின் மனைவி முத்துவை சந்தித்து, தன் கணவரை ஜாமீனில் வெளியே கொண்டு வர உதவுமாறு கெஞ்சுகிறாள். அருண் தற்போது முத்துவின் மீது கடும் கோபத்தில் இருப்பது தெரிந்திருந்தும், மனிதாபிமானம் மேலோங்கி, முத்து உதவ சம்மதிக்கிறார். வக்கீலை சந்திக்க அவர் புறப்படும் காட்சி, முத்துவின் குணத்தை ரசிகர்கள் மீண்டும் ஒருமுறை பாராட்டும் வகையில் அமைந்துள்ளது.

    அதே நேரத்தில், நீத்துவை தாக்கியதற்கு ஸ்ருதியின் தந்தையே காரணம் என்று தெரிந்ததும், ரவி நேரடியாக அவரிடம் சென்று சண்டை போடுகிறார். “வேறு யாராவது இதை செய்திருந்தால் நான் வேற மாதிரி டீல் பண்ணியிருப்பேன். ஸ்ருதியின் அப்பா என்பதால்தான் நிதானமாக பேசுகிறேன்” என்று ரவி கூறும் வசனம், எபிசோடின் முக்கிய ஹைலைட்டாக அமைந்தது. நீத்துவின் மருத்துவ செலவுக்கு 4 லட்சம் ரூபாயும், ரெஸ்டாரண்ட் சேதத்தை சரி செய்ய 5 லட்சம் ரூபாயும் சேர்த்து மொத்தம் 9 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று ரவி கண்டிஷன் வைக்கிறார்.

    siragadikka aasai

    இப்படியாக, உணர்ச்சி, கோபம், குற்ற உணர்வு, மனிதாபிமானம் என அனைத்தும் கலந்த ஒரு பரபரப்பான கட்டத்தில் இன்றைய ‘சிறகடிக்க ஆசை’ எபிசோடு முடிவடைகிறது. அடுத்த எபிசோடில் அருணின் கோபம் குறையுமா? செல்வம் ஜாமீனில் வெளியே வருவாரா? ஸ்ருதி–ரவி உறவு முற்றிலும் முடிவுக்கு வருமா? நீத்து இந்த தாக்குதலிலிருந்து எப்படி மீளப் போகிறார்? என்ற பல கேள்விகளுடன் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது இந்த எபிசோடு.

    இதையும் படிங்க: என்னடா ட்வீஸ்ட் அடிக்கிறீங்க.. ரவியும் ஸ்ருதியும் பிரியப்போகிறார்களா..! சிறகடிக்க ஆசையில் இன்று திக்.. திக்..!

    மேலும் படிங்க
    விஜய்க்கு ஆதரவா..? திருமா. நாளை முடிவு..! கூடுகிறது உயர்நிலை குழு கூட்டம்..!!

    விஜய்க்கு ஆதரவா..? திருமா. நாளை முடிவு..! கூடுகிறது உயர்நிலை குழு கூட்டம்..!!

    தமிழ்நாடு
    LAST- ஆ ஒருமுறை..! இபிஎஸ் இல்லத்தில் சி.வி சண்முகம், வேலுமணி..! விஜய்க்கு ஆதரவு கொடுக்க நிர்ப்பந்தம்..!!

    LAST- ஆ ஒருமுறை..! இபிஎஸ் இல்லத்தில் சி.வி சண்முகம், வேலுமணி..! விஜய்க்கு ஆதரவு கொடுக்க நிர்ப்பந்தம்..!!

    தமிழ்நாடு
    தொழில்நுட்ப கோளாறால் அரபிக்கடலில் தத்தளிப்பு..!! இந்தியர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய பாக். கடற்படை..!!

    தொழில்நுட்ப கோளாறால் அரபிக்கடலில் தத்தளிப்பு..!! இந்தியர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய பாக். கடற்படை..!!

    உலகம்
    தமிழக முதல்வராகும் விஜய்..! தொங்கு சட்டசபை... பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம்..!

    தமிழக முதல்வராகும் விஜய்..! தொங்கு சட்டசபை... பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம்..!

    தமிழ்நாடு
    காங்கிரஸ்-தவெக கூட்டணி: தமிழக அரசியலில் புதிய மாற்றம்..!! ஓபனாக பேசிய கனிமொழி..!!

    காங்கிரஸ்-தவெக கூட்டணி: தமிழக அரசியலில் புதிய மாற்றம்..!! ஓபனாக பேசிய கனிமொழி..!!

    தமிழ்நாடு
    "C. ஜோசப் விஜய் எனும் நான்"...! தமிழகமே எதிர்பார்த்த தருணம்..! நாளை முதல்வராக பதவி ஏற்கும் விஜய்..!

    "C. ஜோசப் விஜய் எனும் நான்"...! தமிழகமே எதிர்பார்த்த தருணம்..! நாளை முதல்வராக பதவி ஏற்கும் விஜய்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விஜய்க்கு ஆதரவா..? திருமா. நாளை முடிவு..! கூடுகிறது உயர்நிலை குழு கூட்டம்..!!

    விஜய்க்கு ஆதரவா..? திருமா. நாளை முடிவு..! கூடுகிறது உயர்நிலை குழு கூட்டம்..!!

    தமிழ்நாடு
    LAST- ஆ ஒருமுறை..! இபிஎஸ் இல்லத்தில் சி.வி சண்முகம், வேலுமணி..! விஜய்க்கு ஆதரவு கொடுக்க நிர்ப்பந்தம்..!!

    LAST- ஆ ஒருமுறை..! இபிஎஸ் இல்லத்தில் சி.வி சண்முகம், வேலுமணி..! விஜய்க்கு ஆதரவு கொடுக்க நிர்ப்பந்தம்..!!

    தமிழ்நாடு
    தொழில்நுட்ப கோளாறால் அரபிக்கடலில் தத்தளிப்பு..!! இந்தியர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய பாக். கடற்படை..!!

    தொழில்நுட்ப கோளாறால் அரபிக்கடலில் தத்தளிப்பு..!! இந்தியர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய பாக். கடற்படை..!!

    உலகம்
    தமிழக முதல்வராகும் விஜய்..! தொங்கு சட்டசபை... பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம்..!

    தமிழக முதல்வராகும் விஜய்..! தொங்கு சட்டசபை... பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம்..!

    தமிழ்நாடு
    காங்கிரஸ்-தவெக கூட்டணி: தமிழக அரசியலில் புதிய மாற்றம்..!! ஓபனாக பேசிய கனிமொழி..!!

    காங்கிரஸ்-தவெக கூட்டணி: தமிழக அரசியலில் புதிய மாற்றம்..!! ஓபனாக பேசிய கனிமொழி..!!

    தமிழ்நாடு

    "C. ஜோசப் விஜய் எனும் நான்"...! தமிழகமே எதிர்பார்த்த தருணம்..! நாளை முதல்வராக பதவி ஏற்கும் விஜய்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share