தமிழ் திரையுலகில் தொடர்ந்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி, வெற்றிப்படங்களை அடுத்தடுத்து கொடுத்து வருபவர் தான் நம்ப நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது, பிரபல இயக்குநரும், இந்திய சினிமாவின் முன்னணி ஆக்சன் கதைகளின் மன்னனான ஏ.ஆர். முருகதாஸ் அவர்களின் இயக்கத்தில் உருவாகும் 'மதராஸி' என்ற திரைப்படத்தில் தான் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ளார். 'மதராஸி' திரைப்படம், சிவகார்த்திகேயனின் 23-வது படமாகும், மேலும் இது அவரது திரையுலக பயணத்தில் புதிய பரிமாணமாக பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் ரஜினியின் கூலி படத்தை போலவே வெவ்வேறு மொழிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளதால், இப்படம் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக எழுந்துள்ளது. இந்தப் படத்தில், சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், பாலிவுட் மூலம் பிரபலமான வித்யூத் ஜம்வால், மலையாள சினிமாவின் கிங்கான பிஜு மேனன் மற்றும் 'டான்சிங் ரோஸ்' சபீர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தானாகவே முன்வந்து தயாரிக்கின்ற இந்தப் படத்திற்கு, அனிருத் ரவிச்சந்திரன் தான் இசை அமைத்துள்ளார். அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் இதற்கு முன் வெளியான எத்தனையோ சந்திப்புகள், ரெமோ, டாக்டர் போன்ற திரைப்படங்களின் பாடல்கள் பாக்ஸ்அபிஸ் வசூல்களில் சாதனை படைத்துள்ளதோடு பலரது கவனத்தையும் பெற்றது. இதனால், மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்திருக்கும் இப்படம் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், ‘மதராஸி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டது.

அதில் சிவகார்த்திகேயன் புதிய லுக்கில், செம்ம ஆக்சன் மாஸ் தோற்றத்தில் இருப்பதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வந்தனர், மேலும் மதராஸி டீசர் வெளியான சில மணி நேரங்களிலேயே, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. ஆகவே, இப்போது, ‘மதராஸி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 5 -ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது வெறும் தமிழில் மட்டுமல்லாது, மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியிடப்படும் வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட்-ப்ரொடக்ஷன் பணிகள் மிகுந்த வேகத்துடன் நடைபெற்று வருகின்றன. ஒளிப்பதிவு, எடிட்டிங், சிஜிஐ, டப்பிங் உள்ளிட்ட அனைத்து பணிகளும், உயர் தரத்துடன் தயாராகி வருகிறது. இப்படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகும் என படக்குழு தரப்பில் தகவல் வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: அரங்கத்தை அதிரவைக்க காத்திருக்கும் “பவர் ஹவுஸ்” பாடல்...! அனிரூத் கச்சேரியில் கூலி படத்தின் அடுத்த பாடல் வெளியாகிறதாம்..!
இந்த அறிவிப்பு, சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அனிருத் இசையமைப்பில் வெளியாகும் இந்த பாடலுக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை. மேலும், திரைப்படம் வெளியாக இன்னும் 50 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அந்த நாட்களை குறிப்பிட்டு, படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தப் போஸ்டர் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. அதில், “50 DAYS TO GO FOR MADARASI” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சிவகார்த்திகேயனின் மாஸ் லுக் மற்றும் பின்புலத்தில் ஏதோ பெரிய குண்டுவெடிப்பு நடந்தது போன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த போஸ்டர், படத்தில் இருக்கும் ஆக்சன் காட்சிகளின் வலிமையை மேலும் உறுதி செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. அதேவேளையில், ‘மதராஸி’ என்பது வெறும் ஆக்சன் படம் மட்டுமல்ல, ஒரு நகரத்தின் அடையாளத்தை சித்தரிக்கும் கதையோட்டத்தை கொண்டிருக்கும் என்பதையும் உணர்த்துகிறது. இந்தப் படத்தின் மூலம், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தனது நீண்டகால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தன்னுடைய மாஸ்ஸான இடத்தை அடைந்திருப்பது தெளிவாக தெரிகிறது. 'மதராஸி’ திரைப்படம், அனைத்து தரப்பினரையும் காக்க வைத்திருக்கும் படமாக பார்க்கப்படுகிறது.

எனவே செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் 'மதராஸி’ படத்தின் புகழ் ஒலிக்குமா அல்லது அனிருத் இசையில் வெளியாகவிருக்கும் பாடலுக்கான சத்தம் ஒலிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆகவே மதராஸி படத்தின் இந்த கவுண்டவ்ன் போட்டோ இணையத்தை தன்வசப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஹிட் கொடுத்த வெற்றிமாறனின் ‘Bad Girl’ பட பாடல்..! பாடலே இப்படின்னா படம் எப்படி இருக்குமோ..!