• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    உதவி செய்ய அதிகாரம் செய்ய தேவையில்லை..!! மாணவர்களுக்கு சிவகுமார் சொன்ன அறிவுரை... 47-வது ஆண்டு விழாவில் பல லட்சம் உதவி..!

    உதவி செய்ய அதிகாரம் செய்ய தேவையில்லை என சிவகுமார் அறிவுரை கூறியிருக்கிறார்.
    Author By Bala Mon, 12 Oct 2026 11:12:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-sivakumar-and-suriya-donates-13-78-lakhs-to-education-welfare-tamilcinema

    ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா, தியாகராயா நகரில் உள்ள அகரம் ஃபவுண்டேஷன் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பிளஸ்-டூ முடித்து கல்லூரியில் சேர்ந்துள்ள 25 மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மேலும், மூத்த ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ.1 லட்சம் விருதும், விளிம்புநிலை மக்களின் கல்வி மேம்பாட்டிற்காகச் செயல்பட்டு வரும் மூன்று அமைப்புகளுக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டன. மொத்தமாக ரூ.13.78 லட்சம் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், நடிகர் சிவகுமார் தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட வறுமை, கல்விக்காகத் தனது குடும்பம் பட்ட கஷ்டங்கள் மற்றும் மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேறக் கல்வியும் ஒழுக்கமும் எவ்வளவு முக்கியம் என்பது குறித்துப் பேசினார். அவரது பேச்சு விழாவில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்தது.

    நடிகர் சிவகுமார் திரைத்துறையில் சம்பாதித்த பணத்தின் ஒரு பகுதியை மாணவர்களின் கல்விக்காகப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டதுதான் ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை. கடந்த 1979-ஆம் ஆண்டு, சிவகுமார் நடித்த 100-வது திரைப்படமான ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்திற்காக அவர் பெற்ற முழுச் சம்பளமான ரூ.25,000-ஐ வங்கியில் முதலீடு செய்து, அதிலிருந்து கிடைக்கும் வட்டித்தொகையின் மூலம் மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டது.

    ஆரம்பத்தில் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர், சிவகுமார் தனது சொந்த நிதியிலிருந்தும் மாணவர்களுக்கு உதவித்தொகைகளை வழங்கினார். இந்நிலையில், 2006-ஆம் ஆண்டு முதல் அகரம் ஃபவுண்டேஷன் இந்த அறக்கட்டளையின் பொறுப்பை முழுமையாக ஏற்று, ஆண்டுதோறும் கல்வி உதவிகளையும் விருதுகளையும் வழங்கி வருகிறது. கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிப்பதுடன், ஓவியத் துறையில் நீண்ட காலம் பங்களித்த மூத்த கலைஞர்களைக் கௌரவிப்பதும் இந்த அறக்கட்டளையின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக உள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டுடன் 47 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அறக்கட்டளையின் ஆண்டு விழா, கல்விச் சேவையின் தொடர்ச்சியை எடுத்துக்காட்டும் நிகழ்வாக அமைந்தது.

    இதையும் படிங்க: Reel's Life-ல இருந்து Real Life-க்கு மாறுங்க..!! இல்லைனா நாசமா போயிடுவீங்க.. நடிகர் சூர்யா பேச்சால் ஷாக்கில் இளசுகள்.!

    இந்த ஆண்டு விழாவில் ஓவியத் துறையில் சிறப்பாகப் பங்களித்து வரும் மூத்த கலைஞர் ஜீவானந்தனுக்கு ரூ.1 லட்சம் பொற்கிழியுடன் சிவகுமார் கல்வி அறக்கட்டளை விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. ஓவியத் துறையில் நீண்ட காலம் பணியாற்றி வரும் மூத்த கலைஞர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக ஓவியர்கள் அம்புலிமாமா சங்கர், ராமு, ஜெயராஜ், மாயா, மணியம் செல்வன் உள்ளிட்டோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.

    கலைத்துறையில் தங்களுடைய வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்துக் கலைச் சேவையாற்றும் கலைஞர்களைக் கௌரவிப்பது, அவர்களின் பங்களிப்பை அடுத்த தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துவதற்கும் உதவுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருது ஓவியர் ஜீவானந்தனுக்கு வழங்கப்பட்டது. பொருளாதாரச் சவால்களையும் பல்வேறு தடைகளையும் கடந்து, பிளஸ்-டூ பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று கல்லூரியில் சேர்ந்துள்ள 25 மாணவ, மாணவிகளுக்கு இந்த விழாவில் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.2.50 லட்சம் வழங்கப்பட்டது. மேலும், அவர்களின் சாதனையைப் பாராட்டிச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    sivakumar-and-suriya-donates

    பள்ளிப் படிப்பை முடித்துவிட்டுக் கல்லூரிக்குச் செல்வது என்பது பல மாணவர்களின் வாழ்க்கையில் முக்கியமான கட்டமாகும். குறிப்பாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உயர்கல்வியைத் தொடர்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. கல்லூரிக் கட்டணம், புத்தகங்கள், போக்குவரத்து மற்றும் அன்றாடச் செலவுகள் போன்றவை அவர்களின் கல்விப் பயணத்தில் தடைகளாக அமையலாம். இத்தகைய சூழலில் மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி, அவர்களின் கல்வியைத் தொடர்வதற்கான ஊக்கமாக அமைகிறது. மாணவர்கள் தங்களுடைய முதல் வெற்றியுடன் நின்றுவிடாமல், உயர்கல்வியிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதே இதுபோன்ற உதவிகளின் முக்கிய நோக்கமாகும்.

    விழாவில் கல்விச் சேவையில் ஈடுபட்டு வரும் மூன்று அமைப்புகளின் பணிகளைப் பாராட்டி அகரம் ஃபவுண்டேஷன் சார்பில் நிதியுதவிகள் வழங்கப்பட்டன. திண்டிவனம் ரோசனை பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வரும் தாய் தமிழ் தொடக்கப்பள்ளிக்கு ரூ.6,28,000 நிதியுதவி வழங்குவதற்கான உறுதியேற்பு கடிதம் அளிக்கப்பட்டது. ‘தாய்மொழிக் கல்வியே சிறந்த கல்விமுறை’ என்ற சிந்தனையை முன்னிறுத்திச் செயல்பட்டு வரும் இந்தப் பள்ளி, மாணவர்களுக்கு இலவசக் கல்வியுடன் மதிய உணவுத் திட்டத்தையும் வழங்கி வருகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் கல்வியைத் தொடர உதவும் வகையில் பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்தப் பள்ளியின் பணிகளுக்கு அகரம் ஃபவுண்டேஷன் கடந்த 16 ஆண்டுகளாகத் துணைநின்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, 2026–2027 கல்வியாண்டில் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் மாதச் சம்பளத்திற்கான பங்களிப்பாக ரூ.6.28 லட்சம் வழங்க உறுதியளிக்கப்பட்டுள்ளது.கிராமப்புறங்களில் குழந்தைகளுக்குக் கல்வி கிடைப்பதை உறுதிசெய்வதில் பள்ளிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. குறிப்பாக, இலவசக் கல்வியுடன் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் கிடைக்கும்போது, மாணவர்கள் கல்வியைத் தொடர்ந்து பயில்வதற்கான வாய்ப்புகள் மேம்படுகின்றன. ஈரோடு மாவட்டத்தில் பழங்குடி குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக கடந்த 20 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் சுடர் அமைப்புக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. இந்த அமைப்பின் நிறுவனர் நடராஜனிடம் அதற்கான காசோலை வழங்கப்பட்டது.

    சத்தியமங்கலம் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில் பள்ளிப் படிப்பை இடைநிறுத்திய குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவதற்கும், அவர்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைப் போக்குவதற்கும் சுடர் அமைப்பு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக 25 மாலை நேரப் படிப்பகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிக்குச் செல்வதில் சிரமங்களை எதிர்கொள்ளும் குழந்தைகளுக்குக் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதும், அவர்கள் தொடர்ந்து படிப்பதை உறுதிப்படுத்துவதும் இந்தப் படிப்பகங்களின் முக்கிய நோக்கமாக உள்ளது. பழங்குடி மக்கள் வசிக்கும் மலைப்பகுதிகளில் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு உள்ளூர் சூழலைப் புரிந்துகொண்டு செயல்படும் அமைப்புகளின் பங்களிப்பு அவசியமாகிறது. அந்த வகையில், சுடர் அமைப்பின் பணிகளுக்குத் துணையாக இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

    மூன்றாவது அமைப்பாக, அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகச் செயல்பட்டு வரும் வாழை அமைப்புக்கு ரூ.3 லட்சம் வழங்குவதற்கான உறுதியேற்பு கடிதம் அளிக்கப்பட்டது. சென்னை மாநிலக் கல்லூரியின் முன்னாள் மாணவர்களால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, தருமபுரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டும் பணிகளை மேற்கொண்டு வந்தது. தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் அய்யூர் வனப்பகுதியில் உள்ள ஏழு அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமித்து கல்வி மேம்பாட்டுப் பணிகளை முன்னெடுத்து வருகிறது.

    இந்தப் பணிகளுக்கான நிதிப் பங்களிப்பாக, மாதந்தோறும் ரூ.25,000 வீதம் ஓராண்டுக்கு மொத்தம் ரூ.3 லட்சம் வழங்க உறுதியளிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைப்பதுடன், அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதலும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் வாழை அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பின் மூலம் மாணவர்களின் கல்வி அனுபவத்தை மேம்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    sivakumar-and-suriya-donates

    இந்த மூன்று அமைப்புகளுக்கும் வழங்கப்பட்ட நிதியுதவிகள், மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதிலும், கல்விச் சேவையில் ஈடுபட்டு வரும் அமைப்புகளின் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதிலும் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவில் பேசிய நடிகர் சிவகுமார், மாணவர்களுக்கு மிகவும் முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்கினார். “கல்வியும் ஒழுக்கமும் இருந்தால், உலகத்திலே எந்த மூலையில் போய் வேண்டும் என்றாலும் நீங்கள் சாதிக்க முடியும். அந்த ஒன்றுதான் அடிப்படை” என்று அவர் தெரிவித்தார்.

    மாணவர்கள் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், பெற்றோரை இழந்திருந்தாலும் அல்லது கிராமப்புறங்களில் வளர்ந்திருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்று குறிப்பிட்ட சிவகுமார், கல்வியையும் ஒழுக்கத்தையும் வாழ்க்கையின் அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். தனது வாழ்க்கையையே இதற்கு ஓர் உதாரணமாகக் குறிப்பிட்ட அவர், சிறுவயதில் கல்வி கற்பதற்காகத் தான் எதிர்கொண்ட சிரமங்களை நினைவுகூர்ந்தார். இன்றைய தலைமுறை மாணவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் கல்வி வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார். தனது பள்ளிப் பருவத்தை நினைவுகூர்ந்த சிவகுமார், அப்போது தங்கள் கிராமத்தில் முறையான பள்ளிக் கட்டடங்களும் போதிய வசதிகளும் இல்லாத சூழல் நிலவியதாகக் கூறினார்.

    தனது கிராமத்திலிருந்து சுமார் நான்கு பர்லாங் தொலைவில் இருந்த கலங்கள் பகுதியில் உள்ள திறந்த மண்டபத்தில் கல்வி கற்றதாக அவர் தெரிவித்தார். அந்த மண்டபத்தின் தரையில் தூசி அதிகமாக இருந்ததால், மாணவர்களே மாட்டுச் சாணத்தை எடுத்துவந்து தண்ணீரில் கரைத்து, தரையை மெழுகி, அதன் பிறகு அமர்ந்து படிப்பார்களாம். வெளியில் இருந்து பார்ப்பவர்கள் கவனத்தைச் சிதறடிக்காமல் இருக்க மூங்கில் தட்டிகளைக் கொண்டு சுற்றிலும் மறைத்திருந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்தார். அந்தச் சூழலில் தங்களுக்குப் பாடம் கற்பித்த கல்யாணசுவாமி நாயுடு என்ற ஆசிரியர், கணிதத்தில் சிறந்து விளங்கியவர் என்றும் சிவகுமார் குறிப்பிட்டார். குறைந்த வசதிகளுடன் கல்வி கற்ற அந்தக் கால அனுபவங்கள், கல்வியின் மதிப்பைத் தனக்கு ஆழமாக உணர்த்தியதாக அவரது பேச்சு வெளிப்படுத்தியது.

    இன்றைய மாணவர்களுக்குக் கல்வி கற்பதற்கான வசதிகள் பல கிடைத்தாலும், பல்வேறு பகுதிகளில் இன்னும் சவால்கள் நீடிக்கின்றன. இத்தகைய சூழல்களை நினைவில் கொண்டு, கிடைக்கும் வாய்ப்புகளை மாணவர்கள் மதித்துப் பயன்படுத்த வேண்டும் என்பதே அவரது உரையின் மையக் கருத்தாக இருந்தது. சிவகுமார் தனது குடும்பத்தின் பொருளாதார நிலை குறித்துப் பேசியபோது, தமக்குப் பத்து மாதக் குழந்தையாக இருந்தபோதே தந்தையை இழந்ததாகத் தெரிவித்தார். அதன் பிறகு, குடும்பத்தின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு தங்களை வளர்த்ததுடன் கல்வி கற்கவும் வைத்தவர் தனது தாய்தான் என்று அவர் நினைவுகூர்ந்தார்.

    தங்களுடைய குடும்பத்திற்குச் சொந்தமாக இருந்த நிலம் வறண்ட பூமியாக இருந்ததாகவும், அதில் கடுமையாக உழைத்தே தாயார் குடும்பத்தை நடத்தி வந்ததாகவும் கூறினார். அந்தக் காலத்தில் பள்ளிக் கட்டணம் என்பது ஏழைக் குடும்பங்களுக்கு எவ்வளவு பெரிய சுமையாக இருந்தது என்பதையும் அவர் விளக்கினார். தான் இரண்டாம் வகுப்பிலும், தனது அக்கா மூன்றாம் வகுப்பிலும் படித்தபோது, இருவருக்குமான மாதக் கட்டணம் குடும்பத்தின் பொருளாதார நிலைக்கு மிகப்பெரிய சுமையாக இருந்ததாம். அந்தக் காலத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.12 ஆக இருந்த நிலையில், தனக்கான இரண்டாம் வகுப்புக் கட்டணம் ரூ.2 என்றும், தனது அக்காவின் மூன்றாம் வகுப்புக் கட்டணம் ரூ.3 என்றும் அவர் தெரிவித்தார்.

    குடும்பத்தின் நிதி நெருக்கடியால் மாதம் ரூ.5 செலவழிக்க முடியாத சூழல் ஏற்பட்டதால், தனது அக்காவின் கல்வி மூன்றாம் வகுப்புடன் நிறுத்தப்பட்டதாகவும் வேதனையுடன் குறிப்பிட்டார். இந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட சிவகுமார், கிராமப்புறங்களில் ஏழ்மையான குடும்பங்களில் பிறந்து கல்விக்காகப் போராடும் மாணவர்களின் சிரமங்களைத் தன்னால் நன்றாகப் புரிந்துகொள்ள முடிவதாகக் கூறினார். தான் கடந்து வந்த பாதையை நினைவுகூர்ந்த அவர், தன்னைப் போன்ற பொருளாதாரப் பின்னணியில் இருந்து வரும் மாணவர்கள் கல்வி கற்று முன்னேற உதவுவதில் தனக்கு மிகுந்த மனநிறைவு கிடைப்பதாகவும் தெரிவித்தார்.

    விழாவில் உதவித்தொகை பெற்ற மாணவர்களிடம் உரையாற்றிய சிவகுமார், அவர்கள் பெற்றுள்ள வெற்றி ஒரு தொடக்கம் மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். பிளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று கல்லூரியில் சேர்ந்திருப்பது பாராட்டத்தக்க சாதனை என்றாலும், வாழ்க்கையில் இன்னும் பல கட்டங்களைக் கடக்க வேண்டியிருப்பதாக அவர் கூறினார். மாணவர்கள் தங்களுடைய இலக்கில் உறுதியாக இருந்து, ஒழுக்கத்துடன் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கல்வி மூலம் கிடைக்கும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி, தங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்துவதுடன் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதும் அவரது அறிவுரையாக அமைந்தது.

    sivakumar-and-suriya-donates

    மொத்தத்தில், ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா, மாணவர்களுக்கான நிதியுதவி, மூத்த கலைஞருக்கான அங்கீகாரம் மற்றும் கல்விச் சேவை அமைப்புகளுக்கான ஆதரவு எனப் பல்வேறு அம்சங்களைக் கொண்டிருந்தது. அதைவிட முக்கியமாக, வறுமையையும் கல்விச் சவால்களையும் கடந்து முன்னேறிய தனது வாழ்க்கைப் பயணத்தை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்ட சிவகுமார், கல்வியும் ஒழுக்கமும் இருந்தால் எத்தகைய பின்னணியில் இருந்து வந்தவர்களும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை அவர்களிடம் விதைத்துள்ளார்.

    இதையும் படிங்க: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.. மயிலுக்கு ஆண் குழந்தை பிறந்தாச்சு.!! அக்கறையாக கவனித்துக்கொள்ளும் சரவணன்.. மீண்டும் இருவரும் இணைவார்களா?

    மேலும் படிங்க
    அதிமுகவில் எடப்பாடிக்கு எதிராக மீண்டும் புயல்? இடைத்தேர்தல் தோல்விக்குப் பிறகு வேலுமணி அணி தீவிரம்!

    அதிமுகவில் எடப்பாடிக்கு எதிராக மீண்டும் புயல்? இடைத்தேர்தல் தோல்விக்குப் பிறகு வேலுமணி அணி தீவிரம்!

    அரசியல்
    சவுதி விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்! இந்தியர் உட்பட 13 பேர் பலி; 300-க்கும் மேற்பட்டோர் காயம்!

    சவுதி விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்! இந்தியர் உட்பட 13 பேர் பலி; 300-க்கும் மேற்பட்டோர் காயம்!

    உலகம்
    எதிர்பார்ப்பை எகிற வைக்கும் புதிய கேமிங் ஸ்மார்ட்போன்!! ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட இன்ஃபினிக்ஸ்!!

    எதிர்பார்ப்பை எகிற வைக்கும் புதிய கேமிங் ஸ்மார்ட்போன்!! ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட இன்ஃபினிக்ஸ்!!

    மொபைல் போன்
    தவெக ஆலோசனைக் கூட்டத்தில் கோஷ்டி பூசல்..! வார்டு செயலாளருக்கு ஆதவராக திரண்ட மக்கள்... பரபரப்பு.!!

    தவெக ஆலோசனைக் கூட்டத்தில் கோஷ்டி பூசல்..! வார்டு செயலாளருக்கு ஆதவராக திரண்ட மக்கள்... பரபரப்பு.!!

    தமிழ்நாடு
    நைட்டி அணிந்து நூதனக் கொள்ளை! கேஸ் கட்டரால் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்த கும்பல்..! துணிகரம்..!!

    நைட்டி அணிந்து நூதனக் கொள்ளை! கேஸ் கட்டரால் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்த கும்பல்..! துணிகரம்..!!

    இந்தியா

    'டோரதி' படம் ஒரு அழகான படைப்பு..!! கார்த்திக் சுப்புராஜ் படத்தைப் பாராட்டிய ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா.!

    சினிமா

    செய்திகள்

    அதிமுகவில் எடப்பாடிக்கு எதிராக மீண்டும் புயல்? இடைத்தேர்தல் தோல்விக்குப் பிறகு வேலுமணி அணி தீவிரம்!

    அதிமுகவில் எடப்பாடிக்கு எதிராக மீண்டும் புயல்? இடைத்தேர்தல் தோல்விக்குப் பிறகு வேலுமணி அணி தீவிரம்!

    அரசியல்
    சவுதி விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்! இந்தியர் உட்பட 13 பேர் பலி; 300-க்கும் மேற்பட்டோர் காயம்!

    சவுதி விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்! இந்தியர் உட்பட 13 பேர் பலி; 300-க்கும் மேற்பட்டோர் காயம்!

    உலகம்
    தவெக ஆலோசனைக் கூட்டத்தில் கோஷ்டி பூசல்..! வார்டு செயலாளருக்கு ஆதவராக திரண்ட மக்கள்... பரபரப்பு.!!

    தவெக ஆலோசனைக் கூட்டத்தில் கோஷ்டி பூசல்..! வார்டு செயலாளருக்கு ஆதவராக திரண்ட மக்கள்... பரபரப்பு.!!

    தமிழ்நாடு
    நைட்டி அணிந்து நூதனக் கொள்ளை! கேஸ் கட்டரால் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்த கும்பல்..! துணிகரம்..!!

    நைட்டி அணிந்து நூதனக் கொள்ளை! கேஸ் கட்டரால் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்த கும்பல்..! துணிகரம்..!!

    இந்தியா
    டாஸ்மாக் காலி பாட்டில் டெண்டர்: 10 ஆண்டுகால ஒப்பந்தத்துக்கு தடை? தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

    டாஸ்மாக் காலி பாட்டில் டெண்டர்: 10 ஆண்டுகால ஒப்பந்தத்துக்கு தடை? தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

    அரசியல்
    மர்ம மரணமா? நானா படேகர் இறப்பிற்கு இதுதான் காரணம்! வெளியான பிரேதப் பரிசோதனை அறிக்கை!

    மர்ம மரணமா? நானா படேகர் இறப்பிற்கு இதுதான் காரணம்! வெளியான பிரேதப் பரிசோதனை அறிக்கை!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share