சில நாட்களாகவே நடிகை சமந்தாவின் வாழ்வில் பல ஆச்சரியமான சம்பவங்கள் நடந்து வருகிறது என்றே கூறலாம். அந்த வகையில் தற்பொழுது பல நாடுகளுக்கு சோலோவாக பயணம் செய்து வரும் அவருக்கு ரசிகர்களின் வரவேற்பு அமோகமாக கிடைத்து உள்ளது.

அதுமட்டுமல்லாமல் நடிகையாக இருந்த சமந்தா தற்பொழுது தயாரிப்பாளராகவும் களமிறங்கி படங்களில் கெஸ்ட் ரோல்களிலும் நடித்து மீண்டும் தன்னை முன்னனி நடிகையாக மாற்றி வருகிறார். இப்படி தனது சினிமா கெரியரில் யாராலும் அசைக்க முடியாதபடி இருந்த நடிகை சமந்தா சினிமாவில் இருந்து விலகி இருக்க காரணமே நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா தான் என்பது பலருக்கும் தெரிந்த உண்மை. இப்படிப்பட்ட இவர்கள் இருவரது வாழ்வில் என்ன நடந்தது என பார்த்தால்,
இதையும் படிங்க: நடிகை சமந்தாவின் அந்த விஷயத்தை சொல்லி கிண்டலடித்த ரசிகர்..! கடுப்பில் அவர் கொடுத்த ரிப்ளேவை பாருங்க..!

நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகனான நாகசைதன்யாவும் நடிகை சமந்தாவும் காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு, இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021ம் ஆண்டு திருமண பந்தத்தில் இருந்து இருவரும் பிரிந்தனர். இந்த சூழலில் நடிகை சமந்தாவுக்கு நாக சைதன்யா தரப்பில் இருந்து ஜீவனாம்சமாக ரூ.200 கோடி கொடுத்த நிலையில் அதனை சமந்தா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

சமந்தாவுடனான பிரிவுக்கு பின், நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலிக்கிறார் என்ற செய்தி வெளியான நிலையில், இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். அதன்பின் முதலில் இருவருக்குமான நிச்சயதார்த்தம் சிம்பிளாக நடைபெற்று, ரூ.200 கோடி பட்ஜெட்டில் இவர்களது திருமணம் நடைபெற்றது. முதலில் ராஜஸ்தானில் நடக்கவிருப்பதாக இருந்த இவர்களது திருமணம், ஒரு சில காரணங்களுக்காக ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டு, அங்கிருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோவில், நாகேஸ்வர ராவ் சிலைக்கு முன்பு ஏகப்பட்ட சடங்குகளுடன் 8 மணி நேரம்வரை நடைபெற்றது.

இதனால் மனமுடைந்து போன சமந்தா, இனி தன் வாழ்வில் யாருக்கும் இடமில்லை என்று சொல்லி மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுத்து இன்று ஆயிரம் கோடி பட்ஜெட்டில் படம் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாக இருக்கும் அடுத்தடுத்த படங்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் வேளையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சமந்தாவின் எக்ஸ் கணவரான நாகசைய்தன்யாவின் சகோதரனுக்கு திருமணம் நடைபெற்றது. அதன்படி, நாகர்ஜூனாவின் இளையமகனான அகில் அக்கினேனிக்கு அவரது நீண்ட நாள் காதலியான ஸைனாப்பை என்பவருடன் காதல் திருமணம் நடைபெற்றது. இதில் சமந்தாவை அழைக்கவில்லையே என பலரும் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், நடிகை சமந்தா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. அதில் பேசிய அவர், "என் வாழ்க்கையில் டாட்டூ குத்திக்கொள்வது என்பது வழக்கமான ஒன்று தான். ஆனால் இப்பொழுது இல்லை ஆனால் ஒரு காலத்தில் டாட்டூ போட்டு வந்தேன். எனக்கு சரியாக 18 வயது இருக்கும். அந்த சமயத்தில் நான் ஒருவரை காதலித்தேன். அதுதான் என் வாழ்வில் நான் மறக்கமுடியாத முதல் காதல். அவரை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என நான் உறுதியாக நம்பியதால், அவருக்காக டாட்டூவை முதலில் போட்டுக் கொண்டேன். அந்தக் காதல் என்னவானது, அந்த டாட்டூ என்னவானது என்பது குறித்தெல்லாம் இப்பொழுது கேட்காதீர்கள் அதனை நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்" என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க: ஒரு வழியாக மீண்டும் இணைந்த நாக சைதன்யா, சமந்தா..! மகிழ்ச்சியில் துள்ளிகுதிக்கும் ரசிகர்கள்..!