பாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள புதிய திரைப்படம் என்றால் அதுதான் ‘சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி’. இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் முன்னணி நடிகர் வருண் தவான் மற்றும் அனைவருக்கும் பிடித்த நடிகை ஜான்வி கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் வருண் தவான் ‘சன்னி சன்ஸ்காரி’ எனும் புதுமையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரம் பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் தரும் குடும்பத்தைச் சேர்ந்த, நகைச்சுவைத் தன்மை கொண்ட பாசம் மிகுந்த அழகான கதாநாயகன் என சொல்லப்படுகிறது.
நடிகை ஜான்வி கபூர், இப்படத்தில் ‘துளசி குமாரி’ என்ற கதாபாத்திரத்தில், அழகும் புத்திசாலித்தனமும் நிறைந்த பெண்ணாக வருகிறார். இப்படிப்பட்ட இந்த ரொமாண்டிக் கலந்த காமெடி திரைப்படத்தில் இவர்களுடன் இணைந்து சன்யா மல்ஹோத்ரா, ரோஹித் சரப், மனீஷ் பால் மற்றும் அக்ஷய் ஒபராய் போன்ற பிரபல நடிகர்கள் முக்கிய வேடங்களில் மிகவும் அருமையாக நடித்துள்ளதால் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இப்படம் வேறுபட்ட கதாபாத்திரங்களையும், மாறுபட்ட கதைக்களத்தையும் கொண்ட ஒரு முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்பட்டு வருவதுடன் தர்மா புரொடக்சன்ஸ் நிறுவனம் மிகுந்த படிஜெட்டில் தயாரிக்கும் இப்படத்தை, இயக்குநர் ஷஷாங்க் கைதன் என்பவர் இயக்கி இருக்கிறார். இவர் முன்னதாக 'ஹம் பி கி துல்சி குமார்', 'பத்னி பத்னி ஓர் வோ' போன்ற வெற்றிப் படங்களை இயக்கி மக்கள் மத்தியில் செல்வாக்கை பெற்றவர். 'சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி' படம், வரும் 2025-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் வெளியிடப்படவுள்ளது.

இந்த சூழலில் படமானது இந்திய விடுமுறை நாள்களில் முக்கிய நாளாக பார்க்கப்படும் காந்திஜியின் பிறந்த நாள் அன்று வெளியாவதால் படத்திற்கு பெரிய வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர். இப்படி இருக்க, வருண் தவான் தற்போது 'பார்டர் 2' எனும் அதிரடி படத்திலும் நடித்துவருகிறார். இந்த படத்தின் மூலம் அவர் இந்திய ராணுவ வீரராக வேறு முழுக்க முழுக்க மாறுபட்ட வேடத்தில் தோன்ற இருக்கிறாராம். இதன் பின்னணியில் நாட்டுப்பற்றும், வீரத்தையும் முன்னிலைப்படுத்தும் வகையில் படம் இருக்குமாம்.. சொல்ல போனால் சிவகார்த்திகேயனின் அமரன் போல.
இதையும் படிங்க: விவாகரத்து வழக்குடன் இலவச இணைப்பாக வந்த அடுத்த வழக்கு..! ரூ.6 கோடியால் சிக்கித் தவிக்கும் நடிகர் ரவிமோகன்..!
இதே நேரத்தில், ஜான்வி கபூரும், சித்தார்த் மல்ஹோத்ராவுடன் இணைந்து நடித்துள்ள ‘பரம் சுந்தரி’ எனும் காதல் படத்தின் வெளியீட்டிற்கான தயாரிப்புகளில் முழுவதுமாக ஈடுபட்டு வருகிறார். இந்த திரைப்படம் வருகிற ஜூலை 25ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஜான்வியின் தோற்றம், நடிப்பு மற்றும் இசை, ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெறும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதற்கு முந்தையதாய், வருண் தவான் மற்றும் ஜான்வி கபூர் இருவரும் 2023ம் ஆண்டு வெளியான ‘பவால்’ திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். அந்த படம், ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், இருவரின் கெமிஸ்ட்ரியை பார்த்து மிரண்டுபோயினர். இந்த புதிய திரைப்படம், ரசிகர்களுக்கு ஒரு உற்சாகமான, பொழுதுபோக்கு நிறைந்த திரைப்பட அனுபவத்தை வழங்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் பாடல்கள், டிரெய்லர் மற்றும் புரமோஷன்கள் பின்வரும் நாட்களில் வெளிவரவுள்ளதால், ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த சூழலில், ‘சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி’ திரைப்படம், வெறும் காமெடியுடன் மட்டும் நிறுத்தாமல் பல ஒழுக்கமுள்ள சிந்தனைகளைச் சொல்லும் படம் என படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள். தற்பொழுது வெளியான இந்த படத்தின் போஸ்டர்கள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: ஜோதிகாவுக்காக ECR-ல பிரமாண்ட வீடாம்..! சூர்யா-வின் பிளானை உடைத்த மூத்த பத்திரிகையாளர்..!