ஒரு காலத்தில் நடிப்பிற்காக இணைந்த ஜோடிகள் வரிசையில் பலரது கவனத்தையும் ஈர்த்தவர்கள் என்றால் அதுதான் சூர்யா ஜோதிகா தம்பதி. பெரியவர்கள் கூறியது போல அழகான மனைவி, அன்பான கணவன், அருமையான பிள்ளைகள் இருந்தால் வாழ்க்கை அழகாக மாறிவிடும் என சொன்னதைப் போல இன்று இவர்களது வாழ்க்கையும் அவ்வாறாகவே இருக்கிறது என்றால் மிகையாகாது. அப்படிப்பட்ட இவர்களது வாழ்க்கை பலரும் பொறாமை படும் வகையில் அமைந்து இருக்கிறது. நடிகர் சூர்யா 1997-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான "நேருக்கு நேர்" திரைப்படத்தில் விஜயுடன் துணை நாயகனாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர்.
அதனை தொடர்ந்து தனது காதல் மனைவியான ஜோதிகாவுடன் 1999-ம் ஆண்டு "பூவெல்லாம் கேட்டுப்பார்" என்ற திரைப்படத்தில் நடித்தார். இதிலிருந்து இவர்களது காதல் வாழ்க்கை தோன்றியது. அதன் பின், 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி இருவரும் பெற்றவர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் சில நாட்கள் சினிமாவிற்குள் வராத ஜோதிகா தனது குழந்தைகள் மற்றும் குடும்ப நலனில் அக்கறை காட்டி வந்தார். இப்படி பட்ட ஜோதிகாவின் நலனிலும் அவரது கெரியரிலும் அக்கறையில் உள்ள சூர்யா சமீபத்தில் தனது மனைவியான ஜோதிகா மற்றும் அவரது குழந்தைகள் அனைவருடனும் மும்பையில் உள்ள ஜோவின் அம்மாவீட்டில் குடியேறி இருக்கிறார். இந்த சூழலில், கடைசிப் பல ஆண்டுகளாக சென்னை – மும்பை என இரண்டு இடங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை போல் வலம் வந்துகொண்டு இருக்கின்றனர் சூர்யா ஜோதிகா தம்பதியினர்.

கேட்டால் பிள்ளைகளின் கல்விக்காக மும்பையில் குடியேறியதாக இருவரும் தெரிவித்து வருகின்றனர்.இப்படி இருக்க, மூத்த பத்திரிகையாளரான அந்தணன் "சூர்யா தனது மனைவி ஜோதிகாவுக்காக கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்டமான புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார்.” என உறுதிபட தெரிவித்து இருக்கிறார். ஏற்கனவே சூர்யா, ஜோதிகா தம்பதி 2023ம் ஆண்டு மார்ச் மாதம் மும்பையில் ரூ. 70 கோடி செலவில் 9,000 சதுர அடியில் ஒரு பிரம்மாண்டமான வீட்டை வாங்கியதாக செய்திகள் வெளியாகின.
இதையும் படிங்க: என்னை போல் தயவு செய்து நடிக்காதே.. ப்ளீஸ்..! நடிகர் சஞ்சீவை பங்கமாக கலாய்த்த விஜய்..!
அந்த வீட்டில் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் வண்ணமயமான தோட்டம், பல காருகளுக்கான பார்க்க்கிங் வசதி உட்பட, பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் வாழும் பகுதியில் இந்த பிரமாண்ட வீட்டை கட்டி வசித்து வருகின்றனர். இப்படி இருக்க, சென்னையில் நடிகர் சிவகுமார் குடும்பத்துடன் கூட்டுக் குடும்பமாக வாழும் இந்த வீட்டிற்கு இருவரும் சரியாக வருவதில்லையாம். இதற்கிடையில் மும்பை வீடு வாங்கும் காரணம், பிள்ளைகளின் கல்வி மற்றும் ஜோதிகாவின் வேலை வாய்ப்புகள் மும்பையிலேயே அதிகமாக கி இருப்பது தானாம். இப்படி இருக்க, மும்பையில் இருந்து சென்னைக்கு வந்தாலும் ஜோதிகா சிவகுமார் வீட்டுக்கு செல்வதில்லையாம். மாறாக அவர் ஜோதிகா சென்னை வந்தால் தங்குவதற்கு என புதிய வீட்டை பிரமாண்ட செலவில் கட்டி வருகிறாராம் சூர்யா. இப்படி இருக்கையில் இது உண்மையா? பொய்யா? என பலரும் குழப்பத்தில் உள்ளனர்.

மேலும் சிலர், அவரது மனைவிக்காகவும் பிள்ளைகளுக்காகவும் வீடு கட்டுவதில் என்ன தவறு இருக்கிறது என அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 'எனது காதலன் எப்படி இருக்கனும் தெரியுமா'..! நடிகை ஹனிரோஸ் பேச்சால் மகிழ்ச்சியில் இளசுகள்..!