மங்களூரில் பிறந்து, பெங்களூரில் வளர்ந்து, யோகா ஆசிரியராக அவதாரம் எடுத்து பின் 2005ம் ஆண்டு தெலுங்கில் வெளியான "சூப்பர்" என்ற படத்தில் நாகர்ஜுனாவுடன் இணைந்து நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் அனுஷ்கா. அதன் பின் தமிழில் இதுவரை ரெண்டு, அருந்ததி, வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத்திருமகள், சகுனி, தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், சிங்கம் 2, இரண்டாம் உலகம், லிங்கா, என்னை அறிந்தால், ருத்ரமாதேவி, பாகுபலி, இஞ்சி இடுப்பழகி, தோழா, பாகுபலி 2, எஸ் 3,பிரமாண்ட நாயகன், பாகமதி, சைலன்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அனுஷ்கா ஷெட்டியின் உழைப்பு குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமானால் பல வருடங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியை பார்த்தால் தெரியும். அதில் எமோஷனலாக பேசியிருக்கும் நடிகை அனுஷ்கா, தனது சினிமா கெரியரில் பெரிய திருப்புமுனை ஏற்படுத்திய படம் என்றால் அது அருந்ததீ தான். அந்த படத்தில் நான் கமிட் ஆனபோது பலர், இது மிகவும் அருமையான படம் அந்த படத்தில் வரும் கதாநாயகி ரோலுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன் என கூறிவந்தனர். அதிலும் மிகவும் முக்கியமான ஒருவர் அப்படத்தின் இயக்குனரிடம் "இவ்வளவு பெரிய படம் எடுக்கிறாய். அதில் எதற்கு அனுஷ்கா.
இதையும் படிங்க: கோடி கணக்கில் பேசப்பட்ட பேரம்... ஓடிடி வசமானது அனுஷ்காவின் "காட்டி" திரைப்படம்..!

அவர் எல்லாம் கவர்ச்சி காட்ட மட்டும் தான் லாயக்கு" என பேசினார். ஆனாலும் எனது இயக்குனர் என் மீது நம்பிக்கை வைத்து படத்தில் நடிக்க வைத்தார். ஆதலால் என் முழு திறமையையும் படத்தில் காண்பித்து அவருக்கு பெருமை சேர்த்தேன் என அனுஷ்கா கூறியிருந்தார். அப்படி தன்னை நம்பி வரும் இயக்குனர்களுக்கு உண்மையாக முழு திறமையையும் காண்பித்து நடித்து கொடுப்பவர் தான் அனுஷ்கா. இப்படி பட்டவரது கெரியர் சிதைந்து போக காரணமும் படம் தான். 'இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக அனுஷ்கா தனது உடல் எடையை அதிகரித்தார். அதன்பிறகு உடற்பயிற்சி, யோகா என பல்வேறு முயற்சிகள் செய்தார். ஆனால் எதுவும் அவருக்கு பலனளிக்க வில்லை.

உடல் எடையும் குறைந்த பாடில்லை. குறிப்பாக, பாகுபலி முதல் பாகத்தில் இருந்தது போல, பாகுபலி-2ம் பாகத்தில் அனுஷ்கா ஒல்லியாக வரவேண்டும் என இயக்குனர் ராஜமௌலி எண்ணினார். ஆனால் அனுஷ்கா எவ்வளவோ முயற்சித்தும் ஒல்லியாக முடியாததால் வேறு வழியின்றி அவரை கிராஃபிக்சில் ஒல்லியாக காண்பித்து இருப்பார். இதனால் மிகவும் மனவேதனையிலும் மன அழுத்தத்திலும் இருந்த அனுஷ்கா. "அவ்வளவு தான் இனி நம் வாழ்க்கை" என நினைத்து கொண்டிருந்த வேளையில் அவர் வாழ்க்கையில் கடவுளாய் வந்தார் ஒருவர். இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டுமானால் அறுவை சிகிச்சை செய்து கொள்ளுங்கள் என கூற, முதலில் தயங்கிய அனுஷ்கா அதன் பின் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டு, நீண்ட நாள் மருத்துவ ஒய்வு பெற்று தற்பொழுது பழைய அனுஷ்காவாக ரசிகர்களுக்கு காட்சியளிக்க தயாராகி இருக்கிறார்.

இந்த நிலையில், கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் நடிகை அனுஷ்காவின் 50-வது படமான 'காட்டி' திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ளார். முழுக்க முழுக்க போதை பொருள் கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வருகின்ற ஜூலை மாதம் 11ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில் தற்பொழுது இப்பட வெளியீட்டை முழுவதுமாக நிறுத்தியுள்ளார் இயக்குநர்.

அதன்படி, இப்படத்தின் எடிட்டிங் சமயத்தில் ஒரு சில காட்சிகள் சரிவர இல்லாமல் இருப்பதால் அது படத்தை கண்டிப்பாக பாதிக்கும் என்பதால் அந்த காட்சிகளை மீண்டும் ரிஷுட் எடுக்க முடிவெடுத்துள்ளாராம் இயக்குநர். ஆதலால் படத்தின் வெளியிட்டு தேதியை குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் படத்தின் மீதமுள்ள காட்சிகள் கிமற்றும் ராஃபிக்ஸ் அனைத்தும் முழுவதுமாக படமாக்கப்பட்ட பின்பு, ஓடிடி ரிலீஸ் தேதி முதலானவைகளை கருத்தில் கொண்டே இனி அனுஷ்காவின் 'காட்டி' படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள், அனுஷ்காவின் ரீ-எண்ட்ரிக்கு இத்தனை தடுங்கள் வந்தால் என்ன செய்வது என சோகத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: 'கைதி 2' படத்தில் நடிகை அனுஷ்கா... தமிழில் ரீஎண்ட்ரிக்கு வழிவகுத்த லோகேஷ் கனகராஜ்..!