பாலிவுட் மற்றும் கோலிவுட் மார்க்கெட்டில் நடிகை தமன்னா பாட்டியா கலக்கி வருபவர். சிறிது காலம் தமிழ் சினிமாவில் காணாமல் போன தமன்னா திடீரென ஜெயிலரில் "காவாலையா" பாடலில் நடனம் ஆடி ரசிகர்ளை குஷி படுத்தினார். சமீபத்தில் வெளியான அரண்மனை 4ல் குழந்தைகளுக்கு தாயாகவும் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.

பார்க்கவே பக்தி மையமாகவும், மந்திரவாதிக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கும் மரணத்தை கண்களுக்கு முன்பாக காட்டும் அளவிற்கான தோற்றத்தில் தமன்னாவின் ஒடெலா 2 போஸ்டர் முதலில் வெளியானது. சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் தயாரிப்பில், அசோக் தேஜா இயக்கியத்தில் அஜனீஷ் லோக்நாத் இசையமைப்பில் 2022ல் வெளியான 'ஒடேலா' ரயில் நிலையத்தின் தொடர்ச்சி கதை தான் இந்த "ஒடெலா 2". ஒடேலா மல்லண்ண சுவாமி தனது கிராமத்தை தீய சக்திகளிடமிருந்து எவ்வாறு பாதுகாக்கிறார் என்பதை சித்தரிக்க கூடிய இப்படத்தின் படப்பிடிப்பு 2024 மார்ச் அன்று வாரணாசியில் தொடங்கிய நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்து எடிட்டிங் வேலைகளும் முடிக்கப்பட்டு வெளியீட்டுக்காக காத்திருக்கிறது.
இதையும் படிங்க: தமன்னாவை ஐஸ்கிரீமுடன் ஒப்பிட்ட விஜய் வர்மா...! சூசகமாக காதல் பிரிவை அறிவித்து வருத்தம்..!

இந்த சூழலில், பிப்ரவரி 22ம் தேதி கும்பமேளாவில் இப்படத்திற்கான டீசரை வெளியிட்டனர் படக்குழுவினர். இப்படத்திற்கான டீசரை பார்த்த தமன்னாவின் ரசிகர்கள் அதிர்ந்து போயினர். ஏனெனில் இப்படத்தின் ட்ரெயிலர் பயங்கர புயலை கிளப்பியது. யுவா, நாக மகேஷ், வம்சி, ககன் விஹாரி, சுரேந்தர் ரெட்டி, பூபால் மற்றும் பூஜா ரெட்டி, ஹெபா பட்டேல், வசிஷ்ட என். சிம்ஹா ஆகியோருடன் இப்படத்தில் நடித்திருக்கும் தமன்னா பாட்டியாவை பார்க்கவே பயங்கரமாக இருந்தது.

குறிப்பாக, நார்னியாவில் சிங்கத்தின் கர்ஜனைக்கு தண்ணீர் எழுந்து நிற்கும் காட்சி போல், இந்த டீசரில் பஞ்ச பூதங்களை அடக்கி வைப்பவள் என தண்ணீர் எழுந்து ஐந்து முகங்களுடன் பேசும் வசனம் புல்லரிக்கும் வகையில் இருந்தது. மேலும், மொத்த மந்திரவாதியாக மாறிய தமன்னா ஆன்மிக உடையில் எதிரிகளிடம் சண்டை போட்டு மிரட்டி இருப்பார்.

இந்த நிலையில், தமன்னா நடித்துள்ள 'ஒடேலா 2' படத்தின் அடுத்த அப்டேட் எப்பொழுது வரும் என காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு முக்கியமான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளனர் படக்குழுவினர். அதன்படி, 'ஒடேலா 2' படத்தின் டிரெய்லர் நிகழ்ச்சி வரும் 8ம் தேதி மாலை 3 மணிக்கு மும்பையில் நடைபெற உள்ளதாக படக்குழு எக்ஸ் தளம் மூலமாக அறிவித்துள்ளனர்.

இதனை பார்த்த நெட்டிசன்கள், தமன்னாவின் ஆன்மிக படத்தினை எப்பொழுது வெளியிடுவார்கள் என்பதை குறித்து இந்த நிகழ்ச்சியில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என கூறி வருகினறனர்.
இதையும் படிங்க: காதல் தந்த வலிகளை மறக்க.. பஞ்சுமிட்டாய் சேலையில் வலம் வரும் தமன்னா பாட்டியா..!