உலகளாவிய ரசிகர்களின் கண்களை நெட்பிளிக்ஸ் பக்கம் திருப்பிய வெப் தொடர் 'வென்ஸ்டே', தனது இரண்டாவது சீசனுடன் திரும்பி வந்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு வெளியான முதல் சீசனின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது ‘வென்ஸ்டே சீசன் 2’ நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. அமெரிக்க கார்ட்டூனிஸ்டான சார்லஸ் ஆடம்ஸ் உருவாக்கிய ‘ஆடம்ஸ் ஃபாமிலி’ கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு உருவான இந்த தொடர், காமெடியும், திரில்லரும் கலந்ததாக உள்ளது.
இதனை பிரபல ஹாலிவுட் இயக்குநர் டிம் பர்டன் இயக்கியுள்ளார். மொத்தம் 8 எபிசோடுகளை கொண்டுள்ள இந்த தொடரின் முதல் நான்கு எபிசோடுகள் கடந்த மாதம் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. அதன் தொடர்ச்சியாக, மீதமுள்ள நான்கு எபிசோடுகள் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளன. இந்த தொடர், முதல் சீசனில் போலவே இந்த முறையும் மக்களை திருப்திப்படுத்தும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளதாகவும், இதன் திரைக்கதை, காட்சிப்பதிவு மற்றும் நடிப்புத் திறன்கள் முன்னணி தரத்தில் இருப்பதாகவும் விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. இந்த தொடரின் முக்கிய ஹீரோயினாக வெனஸ்டே ஆடம்ஸின் கதாபாத்திரத்தில் மீண்டும் ஜென்னா ஒர்டேகா நடித்துள்ளார். அவரது நடிப்பு, ஸ்டைல், மற்றும் வித்தியாசமான பார்வை, அவரை உலகளாவிய அளவில் பிரபலமாக்கியுள்ளது. வெனஸ்டே கதாபாத்திரம், தனக்கே உரிய இருண்ட நகைச்சுவை உணர்வையும், சுவாரஸ்யமான அதிரடி நிகல்நிகழ்வுகளையும் கொண்டது. இதில் அவருடன் இணைந்து நடித்துள்ளவர்களில், எம்மா மியர்ஸ் (எனிட்), ஜாய் சண்டே (பியான்கா), மூசா மொஸ்டாபா (யூஜின்), ஜார்ஜி பார்மர் (அஜாக்ஸ்), ஹண்டர் டூஹான் (டைலர்), கேத்தரின் ஜீட்டா-ஜோன்ஸ் (மோர்டிசியா ஆடம்ஸ்), லூயிஸ் குஸ்மான் (கோமஸ் ஆடம்ஸ்), ஐசக் ஒர்டோனெஸ் (பக்ஸ்லி ஆடம்ஸ்) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் சில புதிய முகங்களும் இணைந்திருப்பதால், தொடரின் புது சீசன் ரசிகர்களுக்கு புதுமையை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்க ‘வென்ஸ்டே’ தொடர், அதன் முதல் சீசனிலேயே பல சாதனைகள் செய்தது. இது மட்டுமல்லாமல், அமெரிக்க தொலைக்காட்சி உலகின் மிகப் பெரிய விருதான எம்மி விருதுகளை 4 பிரிவுகளில் வென்று பெருமை பெற்றது. அதேபோல, சமூக ஊடகங்களில் இதற்கான ட்ரெண்டுகள் உருவானவை, ரசிகர்கள் ஆடிய டான்ஸ் கவரேஜ்கள், மீம்கள் ஆகியவையெல்லாம் இந்த தொடரின் கலாசார தாக்கத்தை உணர்த்துகின்றன. இந்த தொடரின் முக்கிய வெற்றிக் காரணிகளில் ஒன்று, ஜென்னா ஒர்டேகாவின் நடிப்புடன், டிம் பர்டனின் இயக்கம் மற்றும் அற்புதமான ஒளிப்பதிவாகும். கூடுதலாக, ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவமிக்க விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. இது தொடரை மற்ற தொடர்களில் இருந்து வேறுபடுத்துகிறது. இரண்டாம் சீசனில் வென்ஸ்டே தனது கடந்த காலத்தை சந்திக்க நேரும் சூழ்நிலைகள், புதிய ரகசியங்களை கண்டு பிடிக்கும் முயற்சிகள் மற்றும் அவரது தனிப்பட்ட வளர்ச்சிப் பயணம் போன்றவை முக்கிய அம்சங்களாக உருவாகியுள்ளன.
இதையும் படிங்க: நடிகை என்றால் கேவலமா..! இப்படியா நடத்துவீங்க.. ஆணாதிக்கத்தில் ஆடாதீங்க - கீர்த்தி சனோன் ஆவேசம்..!
முதல் சீசனில் காட்டப்பட்ட 'நெவர்மோர் அகாடமி' மீண்டும் முக்கிய பின்புலமாக அமைகிறது. மேலும், புதிய எதிரிகளும், மர்மங்களும் கதையில் மேலும் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. இந்த தொடரின் முதல் 4 எபிசோடுகள் வெளியான பின்னர், ரசிகர்களிடையே தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. சமூக ஊடகங்களில் தொடரின் சம்பவங்கள், கதாநாயகியின் நடிப்புகள் குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. 'வென்ஸ்டே' ஒருவரின் கதையாக மட்டுமல்லாமல், ஒரு இளம் பெணின் மனசாட்சியும், தனித்துவமுள்ள பார்வையும், சமூகத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளுக்கான விமர்சன பார்வையும் இதில் பிரதிபலிக்கப்படுகின்றன. இசை அமைப்பு, ஒலியியல், காமெரா கேங், விறுவிறுப்பான திரைக்கதை என இவை அனைத்தும் தொடரை உச்ச தரத்தில் கொண்டுவந்துள்ளன. தற்காலிக இளைஞர்கள் மட்டுமின்றி, அனைத்து வயது பிரிவினருக்கும் இந்த தொடர் பிடிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகவே ‘வென்ஸ்டே சீசன் 2’ என்பது ரசிகர்களுக்காக அற்புதமான திரும்பி வருகையாகும்.

முதல் சீசனின் வெற்றியை மீண்டும் மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த தொடரின் இரண்டாவது பகுதியும் அதே வெற்றிச்சுவை சுமக்கின்றது. நெட்பிளிக்ஸ் பாவனையாளர்கள் இதனை தவறவிடாமல் பார்த்து ரசிப்பது நல்ல அனுபவமாக அமையும். இந்த தொடரின் அனைத்து எபிசோடுகளும் தற்போது நெட்பிளிக்ஸில் கிடைக்கின்றன.
இதையும் படிங்க: இதை உங்களிடம் நான் எதிர்பாக்கல..! ரசிகர்களை குறித்து காரசாரமாக பேசிய நடிகை கல்யாணி பிரியதர்ஷன்..!