தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக மின்னும் த்ரிஷா, இன்றும் 42 வயதை எட்டிய நிலையிலும் டாப் ஹீரோயின் பட்டியலில் உறுதியாகவே திகழ்கிறார். 96, பொன்னியின் செல்வன் போன்ற படங்களின் மூலம் தனது நடிப்புத் திறனை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ள அவர், தற்போது பெரிய பட்ஜெட் படங்களிலும், ஓடிடி திட்டங்களிலும் தொடர்ந்து பிஸியாக உள்ளார்.
சமீபத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து ஒரு திருமண விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளிவர, அது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும், சில சர்ச்சைகளையும் எழுப்பியது. விஜயின் மனைவி சங்கீதா அளித்ததாக கூறப்படும் புகாரைத் தொடர்ந்து, இந்த நிகழ்வு ஒரு கட்டத்தில் சினிமா வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியிருந்தது. ரசிகர்கள், மீடியா, சமூகவலைத்தள பயனர்கள் என பலரும் இதைப் பற்றிக் கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், த்ரிஷா இதுகுறித்து எவ்வித பதிலும் அளிக்கவில்லை. அவரின் அமைதியே புதிய விவாதங்களை உருவாக்கியிருந்தது.

இந்நிலையில், தற்போது நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட புதிய பதிவு மீண்டும் ரசிகர்களை ஈர்த்ததோடு, இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இப்போது த்ரிஷா பேசும் பொருள் சினிமா இல்லை — உலகம் முழுவதும் தற்போது heartwarming content ஆக மாறியிருக்கும் Punch என்ற குட்டி குரங்கு பற்றியது.
இதையும் படிங்க: சர்ச்சைகள் இருக்கட்டும்.. தொண்டர்கள் கலங்கட்டும்..! ஆனாலும் போட்டோஸ் நிக்காது.. திரிஷாவின் அடுத்த பதிவு வைரல்..!
ஒரு மாதத்திற்கு முன்பு சமூக வலைதளங்களில் உலகம் முழுவதும் வைரலான ஒரு வீடியோ, Punch என்ற குட்டி குரங்கை மையமாகக் கொண்டது. பிறந்த சில நாட்களிலேயே அம்மாவால் நிராகரிக்கப்பட்ட அந்த சிறிய குரங்கு மன உளைச்சலால் தவிக்கும் நிலையில் இருந்தது. யாரும் தன்னைக் ஏற்றுக்கொள்ளாத சூழலில், Punch ஒரு குழந்தை பொம்மையைத் தன்னுடைய ‘அம்மா’ போல கட்டிப்பிடித்து, எந்நேரமும் அதைத் தூக்கிக்கொண்டு சுற்றும் காட்சிகள் பலரது மனத்தையும் உருக்கின. “அம்மா இல்லாத பஞ்ச்”, “Lonely baby monkey” போன்ற தலைப்புகளோடு வெளியான அந்த வீடியோ, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்றது.

அந்த வீடியோவைப் பார்த்த அனைவரும் Punch-க்கு ஒரு தடவையாவது அன்பு கொடுக்க வேண்டும் போல ஒரு உணர்வு அடைந்தனர். சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் அந்த குட்டி குரங்குக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்தனர். சமீபத்தில் Punch-க்கு ஒரு புதிய தோழி.. ஒரு சிறிய பெண் குரங்கு.. அறிமுகப்படுத்தப்பட்டதாக caretakers வெளியிட்டுள்ளனர். Punch, அந்த குட்டி குரங்கிற்கும் அன்பாக பழகிக் கொண்டிருக்கும் காட்சி இணையத்தில் பரவியது. இதற்கிடையில் மற்றொரு குரங்கு அந்த புதுத் தோழிக்குச் சேதம் செய்ய முயன்றபோது, Punch தன்னுடைய முழு ஆவலுடன் அந்த தோழியை பாதுகாக்க முனைந்தது.
சண்டை கூட போடத் தயங்காமல் தைரியமாக முன் நின்ற Punch-ன் காட்சி பலரது மனங்களை உருக்கியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இதே வீடியோவுக்குத் தான் நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாவில் ரீஷேர்/கமெண்ட் செய்து கவனம் ஈர்த்துள்ளார். “Now thatz a gentleman” என்று த்ரிஷா எழுதியுள்ளார். Punch தனது தோழியை பாதுகாக்க முன்னோடியது, ஒரு ‘ஜென்டில்மேன்’ காட்டும் குணத்தைப் போல இருந்ததாகப் பாராட்டியுள்ளார்.

த்ரிஷாவின் இந்த பதிவு சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகள், ரீபோஸ்ட்கள் பெற்றிருக்கிறது. சிறு விலங்குகளுக்கான அக்கறை போன்றவற்றை தொடர்ந்து பகிர்ந்து வருவதால், த்ரிஷாவுக்கு விலங்கு நேசிகளிடையே கூடுதல் ரசிகர்கள் உருவாகி வருகிறார்கள். ஆனாலும் சிலர் இதனை காரணமாக வைத்து மறைமுகமாக விஜயை சொல்லிக்கிறாரோ எனவும் பதிவு செய்து வருகின்றனர். ஆகவே Punch தொடர்பான இந்த பதிவு வைரலாகிக் கொண்டிருந்தாலும், த்ரிஷா தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: சென்னை ஏர்போர்ட்டில் திரிஷா..!! விஜய் பற்றி எழுந்த கேள்வி..!! சட்டென வந்த ரியாக்ஷன்..!! வைரல் வீடியோ..!!