நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவருமான விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், நடிகை திரிஷா கிருஷ்ணனுடனான அவரது சமீபத்திய பொது தோற்றம் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா சொர்ணலிங்கம் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில், விஜய் தனது திருமண வாழ்க்கையை மீறி மற்றொரு நடிகையுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக சங்கீதா குற்றம்சாட்டியுள்ளார். மேலும், வழக்கு தொடர்ந்தால் வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டேன் என விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: விஜய் திரிஷா விவகாரம்..! பொதுமக்களுக்கு அட்வைஸ் கொடுத்து பேசிய பிரபல இயக்குநர்..!
இந்நிலையில், சென்னை திருவான்மியூரில் உள்ள திரைத் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ். சுரேஷின் மகன் திருமண வரவேற்பு விழாவில் விஜய்யும் திரிஷாவும் ஒரே காரில் வந்து இறங்கி, ஜோடியாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இருவரும் ஒரே நிறத்தில் (பட்டு வேட்டி-சட்டை மற்றும் பட்டு சேலை) உடையணிந்து, மணமக்களை வாழ்த்தி, புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு, ஒரே நேரத்தில் வெளியேறியதாக வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
https://youtube.com/shorts/kv2sK9n8d_w?si=FhOY5a8J9V8XxLH9
சிலர் இதை வெறும் நட்பு அடிப்படையிலான பங்கேற்பு எனக் கருதினாலும், மற்றவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைக்கு மத்தியில் இது தேவையற்ற விமர்சனங்களை ஈர்ப்பதாகக் கருத்து தெரிவித்தனர். தவெகவின் சில தொண்டர்கள் கூட இது கட்சித் தலைவரின் பிம்பத்திற்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக விமர்சித்தனர்.

இந்த சர்ச்சை ஓய்வதற்குள், சென்னை விமான நிலையத்தில் திரிஷா மும்பை செல்லும் வகையில் தோன்றினார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம், "விஜய்யுடன் திருமண விழாவில் ஒன்றாகப் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?" என கேள்வி எழுப்பினர். ஆனால், திரிஷா எவ்வித பதிலும் அளிக்காமல், விரைவாக விமான நிலையத்திற்குள் சென்றுவிட்டார். இந்தக் காட்சிகளும் வீடியோவாகப் பதிவாகி, சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகின்றன.
இந்த நிகழ்வுகள் விஜய்யின் அரசியல் பயணத்திற்கும், அவரது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே உள்ள தொடர்பை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன. ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கருத்துகள் நிலவும் நிலையில், இது தொடர்பான மேலும் விவரங்கள் வெளியாகுமா என எதிர்பார்ப்பு நீடிக்கிறது.
இதையும் படிங்க: சர்ச்சைகள் இருக்கட்டும்.. தொண்டர்கள் கலங்கட்டும்..! ஆனாலும் போட்டோஸ் நிக்காது.. திரிஷாவின் அடுத்த பதிவு வைரல்..!