மலையாள சினிமாவின் அழகான அறிமுகத்துடன் திரையுலகத்தில் காலடி எடுத்து வைத்தவர் தான் கவர்ச்சி நடிகை மாளவிகா மோகனன். 2017-ம் ஆண்டு வெளியான 'பட்டம் போலே' என்ற திரைப்படம் மூலமாக தனது பயணத்தை தொடங்கிய மாளவிகா, தனது அடுத்தடுத்த படங்கள் மூலம் தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் விரிவாக நடித்து, இன்று பன்முக நடிகையாக வலம் வருகிறார்.
இப்படி இருக்க, தற்போது அவர் தமிழில் 'சர்தார் 2', தெலுங்கில் 'தி ராஜா சாப்', மற்றும் மலையாளத்தில் 'ஹிருதயபூர்வம்' உள்ளிட்ட முக்கியமான திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு மொழியிலும் தனது நடிப்பை தன் அழகுடனும், பங்களிப்புடனும் இணைத்து ரசிகர்களை கவர்ந்துவரும் மாளவிகா, தற்போது பிரபல விருதுகளை கைப்பற்றி மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். அதன்படி, சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற ஒரு பிரமாண்டமான இரவு விருந்து மற்றும் விருது வழங்கும் விழாவில் மாளவிகா மோகனன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த விழாவில் அவருக்கு "Hotstepper of the Year" மற்றும் "Hottest Star of the Year" என்ற இரு முக்கிய விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகள், திரையுலக அழகு மற்றும் ஸ்டைல் அடிப்படையில் வழங்கப்படுபவை. ஆகவே இந்த விருதினை அவர் தன் வசப்படுத்தி இருக்கிறார். மேலும் விழா மேடையில் தனது தனிச்சிறப்பை வெளிப்படுத்திய மாளவிகா, வெள்ளை நிற ஃப்யூஷன் கவுனில் தோன்றி அனைவரின் பார்வையையும் திருப்பியதோடு, ரசிகர்களிடையே ஸ்டைல் ஐகானாக வலம் வந்தார்.

இப்படியாக விருது பெற்ற பின்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அந்தச் சந்தோஷத்தையும் பெருமையையும் பகிர்ந்துகொண்ட மாளவிகா, "These awards are sizzling too!" என எழுதி தனது ஹாட்டான கமெண்டால் இணையவாசிகளை உற்சாகப்படுத்தினார். இந்த பதிவு ஒரு சில மணிநேரங்களிலேயே வாழ்த்து மெசேஜ்களால் சூழப்பட்டு, லைக்களும் கமெண்ட்களும் குவிந்து வருகிறது. இந்த சூழலில் மாளவிகாவின் ரசிகர்கள் மட்டும் அல்லாது, திரையுலக பிரபலங்களும் இந்த வெற்றிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அவருடைய வசீகரமான தோற்றம், ஸ்டைல் சென்ஸ், மற்றும் திரை முன்னிலையில் அட்டகாசமான நடிப்பு திறன் ஆகியவை, இவ்விருதுகளை பெற்றதற்கு காரணமாக அமைந்துள்ளன.
இதையும் படிங்க: அமிதாப்பச்சனின் படத்தில் இனி நடிக்க போவதில்லை..! தீபிகா படுகோனே முடிவால் ஆட்டம் கண்ட பாலிவுட்..!
இதுவரை வித்தியாசமான கதாப்பாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்த மாளவிகா, தற்போது வணிக ரீதியில் அதிக எதிர்பார்ப்புகள் கொண்ட திரைப்படங்களில் பிஸியாக இருப்பது, அவரது நடிப்பு வாழ்க்கையின் அடுத்த கட்டமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இணையத்தில் வைரலாகும் அவரது புகைப்படங்களும் வீடியோக்களும், மாளவிகாவின் ஸ்டைல் மற்றும் தனித்துவமான கம்பீரத்தை வெளிப்படுத்துகின்றன. தனக்கு கிடைத்த விருதுகளை மிக சந்தோஷமாக பகிர்ந்த மாளவிகாவின் "இந்த விருதுகளும் சூடாகவே இருக்கின்றன" என்ற கமெண்ட், நெட்டிசன்களிடையே பாராட்டுகளை பெற வழிவகுத்துள்ளது. திரைத்துறையில் மட்டும் அல்லாமல், ஃபேஷன் மற்றும் பப்ளிக் பிரஸனாலிட்டியாகவும் திகழும் மாளவிகா மோகனன்,

இவ்வாறு இரட்டை விருதுகளை வென்று, மீண்டும் ஒருமுறை தனது சினிமாவில் தனது செல்வாக்கையும், வருங்கால வெற்றிகளுக்கும் வழிவகுக்கும் தன்னம்பிக்கையை பெற்றுள்ளதோடு தான் யார் என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு நிரூபித்துள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் திகிலூட்ட வருகிறது "வதந்தி 2" வெப் தொடர்..! அதிரடி அப்டேட்டால் ஆடிப்போன ரசிகர்கள்..!