தமிழ் சினிமாவில் தனது நடிப்பாலும், சண்டை போடும் திறனாலும் அனைவர் மனதிலும் நிலைநிற்கும் ஒரே நடிகை என்றால் அவர் தான் வனிதா விஜயகுமார். இவர் சமீபத்தில், தனது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ராத்திரி சிவராத்திரி’ எனும் பழைய ஹிட் பாடலை புதியதாக பயன்படுத்தியிருந்தது சர்ச்சையை கிளப்பி இருந்தது. இந்த பாடல், இசைஞானி இளையராஜா அவர்களால் இசையமைக்கப்பட்ட, காலத்தை கடந்த ஓர் ஹிட் பாடலாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இளையராஜாவின் பாடலை அனுமதியில்லாமல் தொட்ட படங்களின் மீது கேஸ் போட்ட இளையராஜா இந்த படத்தையும் சும்மா விடுவாரா என்ன..? இந்த படத்திலும் அவரது பாடலை பயன்படுத்துவதற்கு முன்பாக அனுமதி பெறப்படவில்லை என்பதால் இளையராஜா தனது ஸ்டைலில் இந்த விவகாரத்தையும் நீதிமன்றத்தில் வழக்காக தொடர்ந்துள்ளார். இளையராஜா தனது பாடல்களை எந்த ஒரு வணிக நோக்கத்திற்காகவாவது பயன்படுத்த விரும்பினால், அதன் இசை உரிமையை வாங்க வேண்டும் என்பதிலேயே உறுதியுடன் நிற்கிறார். இப்படி இருக்க, 'ராத்திரி சிவராத்திரி' பாடலை வணிக ரீதியில் பயன்படுத்தியதால், வனிதா மற்றும் தயாரிப்பு குழு மீது காப்புரிமை மீறல் எனும் குற்றச்சாட்டை தற்போது நீதிமன்றத்தில் முன்வைத்து இருக்கிறார். இந்த சூழலில், இந்த விவகாரம் குறித்து வனிதா சில நாட்களுக்கு முன் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “நான் இளையராஜா வீட்டுக்கு மருமகளாக போக வேண்டியவள்...” என்ற ஒரு வரியைத் தெரிவித்திருந்தார்.

அவ்வளவு தான்.. இச்சொல்லுக்கு பல்வேறு அர்த்தங்கள் சூட்டப்பட்டு, சமூக வலைதளங்களில் விவாதங்களும், விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்து வருகின்றன. ஆகவே வனிதா, இளையராஜாவைப் பற்றிச் சொல்லுவது எந்த அர்த்தத்தில்? அவர் இசையை அனுமதியின்றி பயன்படுத்துவது நியாயமா? இவற்றைப் பற்றிய சர்ச்சைகளும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில், நடிகை வனிதா, இந்த சர்ச்சைகளுக்கு முடிவுக்கட்டும் வகையில் தனது எக்ஸ் தளத்தில் ஒரு விளக்கப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் “தெளிவுபடுத்த விரும்புகிறேன்… கார்த்திக் ராஜா என் மிகச் சிறந்த நண்பர். அவருடைய மனைவியும் எனக்கு மிக நெருக்கமானவர். தயவு செய்து அவருடைய பெயரை இந்த விவகாரத்தில் கொண்டுவர வேண்டாம். ராஜா அப்பா எனக்கு கடவுள் போல. ஆம், நானும் அவரின் ஒருபேர் போலவே இருக்கிறேன். அந்த குடும்பம் என்னை அப்படியே நடத்துகிறது. எனவே, இந்த விவகாரத்தை நான் சட்டப்படி சமாளிக்கத் தயார்.” என பதிவிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: இசைஞானி பாடலை தொட்டாலே ஷாக் தான்.. ரிலீசான இன்றே வந்த சிக்கல்.. தலையை பிய்த்து கொள்ளும் வனிதா..!
இந்த பதிவு மூலம் வனிதா, இளையராஜா குடும்பத்துடன் தன்னுடைய தனிப்பட்ட உறவை விளக்கி இருக்கிறார். இந்த சூழலில், இந்த காப்பி ரைட்ஸ் விவகாரம் தற்போது சட்ட ரீதியாக சந்திக்க தயாராகியுள்ள வனிதா, நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்து இருக்கிறார். வனிதா விஜயகுமார் மற்றும் இளையராஜா இசை மீதான சட்ட உரிமை என்பதோடு மட்டுமல்லாமல் உணர்வுப்பூர்வ உறவுகள், இவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்து, ஒரு சமூக-சினிமா-சட்டப் பின்னணியுடன் கூடிய விவாதமாக இந்த சம்பவம் தற்பொழுது பரவி வருகிறது. உணர்வுகளை முன்வைக்கும் வனிதாவின் விளக்கங்கள் ஒரு புறம் இருக்க, சட்ட உரிமைகளில் உறுதியுடன் இருக்கும் இளையராஜாவின் தீர்ப்பு மறுபுறம் உள்ளது.

ஆனாலும் இளையராஜா பாட்டை தொட்டவர்களை அவர் சும்மா விட்டதில்லை என்ற வார்த்தை நெட்டிசன்கள் மத்தியில் பழமொழி போலவே மாறிவிட்டது.
இதையும் படிங்க: விஜய் மாதிரி வருவார் சூர்யா சேதுபதி.. ட்ரோல் கிங்குக்கு வனிதா வக்காலத்து..!