தமிழ் சினிமா உலகில் இசை என்பது ரசிகர்களின் உயிர்நாடியாக வளர்ந்துள்ளது. திரைப்படங்களின் வெற்றிக்குக் காரணமாக இருக்கக்கூடிய விஷயங்களில் மிகவும் முக்கியமாக பார்க்கப்படும் ஒன்று இசை என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தில்லை. சமீப காலமாக மேடை இசை நிகழ்ச்சிகளுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு ஏற்பட்டு வரும் நிலையில், தமிழ் இசையமைப்பாளர்களும் தங்களது இசை கச்சேரியை நேரடியாக ரசிகர்களுடன் பகிரும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில், தமிழ் சினிமாவில் தனித்துவமான இசையமைப்பாளர்களாக வலம் வரும் வித்யாசாகர் மற்றும் விஜய் ஆண்டனி, ஆகிய இருவரும் ஒரே வாரத்தில், ஒரே நகரத்தில், ஒத்த இடத்தில், தனித்தனியான நேரடி இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். இந்த அரிய இசை விருந்துக்கு கோவை மாநகரக மக்கள் தங்களை தயார் படுத்தி வருகின்றனர். இந்த இசை நிகழ்ச்சிகள் செப்டம்பர் 20-ம் தேதி மற்றும் செப்டம்பர் 21-ம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறுகின்றன. குறிப்பாக செப்டம்பர் 20ம் தேதி, இசை அமைப்பாளர் வித்யாசாகர் தனது மழலை இசை மற்றும் மென்மையான மெலடிகளால் இசை ரசிகர்களை மயக்கும் நேரடி நிகழ்ச்சியில் களமிறங்குகிறார். அடுத்த நாளான செப்டம்பர் 21-ம் தேதி, தனித்துவமான பீட், இசை மற்றும் பாடல்களால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த விஜய் ஆண்டனி, அவரது பிளாக்பஸ்டர் பாடல்களுடன் மேடையை பறிக்கிறார். இப்படி இருவரும் தனித்தனியாக நிகழ்ச்சி நடத்தினாலும், நிகழ்ச்சி மேடை, ஏற்பாட்டு நிறுவனம் மற்றும் தொகுப்பு வடிவமைப்பு ஆகியவை ஒரே மாதிரியாக இருக்கிறது.

இது ஒரு வாடிக்கையாளருக்கேற்ப தனித்துவ அனுபவத்தை கொடுப்பதாக இருக்கிறது. இந்த இரு நிகழ்ச்சிகளிலும் தமிழ் திரையுலகில் பிரபலமான முன்னணி பாடகர்கள் மற்றும் பாடகிகள் கலந்துகொண்டு பாடவிருக்கின்றனர். சினிமா ரசிகர்கள் பரிச்சயமாக அறிந்த, பல காலமாக ஹிட் பாடல்களை வழங்கிய குரல்கள், வித்யாசாகர் மற்றும் விஜய் ஆண்டனி இசையில் மீண்டும் ஒலிக்கவிருக்கின்றன. இந்த மேடைகள் மூலம் அவர்களின் பாடல்களும், இசைகளும் நேரில் கேட்கும் அதிரடியான அனுபவத்தை மக்கள் பெறவுள்ளனர். இசை ரசிகர்களுக்கு இந்த இரு நாட்களும் நீண்ட இசை கொண்டாட்டமாக அமையப்போகிறது. இந்த இசை நிகழ்ச்சிகளில் தமிழ் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திரங்கள், இயக்குநர்கள் மற்றும் பிரபலங்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.
இதையும் படிங்க: திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த நடிகை பிந்து மாதவி..! ரீ-என்ட்ரி கொடுப்பதால் உற்ச்சாகத்தில் ரசிகர்கள்..!
அவர்களது பங்கேற்பு, நிகழ்ச்சியின் பிரமாண்டத்தையும், சினிமா உலகின் இசைக்கு அளிக்கும் மதிப்பையும் வெளிப்படுத்துகிறது. இந்த இரு நிகழ்ச்சிகளும் கோவையின் கலாசார, இசை பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதும் வகையில் இருக்கிறது. மெல்லிசைக் கலைஞர் என்று போற்றப்படும் வித்யாசாகரும், பாப் மற்றும் மாஸ் ஹிட் இசையில் வலம் வரும் விஜய் ஆண்டனியும், தங்கள் ரசிகர்களுடன் நேரில் சந்திக்கும் இந்த வாய்ப்பு, ஒரு இசை திருவிழாவாகவே இருக்கப்போகிறது. தமிழ் இசையின் இரண்டு தனித்துவமான ஒலிகள் ஒரே மேடையில், ஒவ்வொரு நாளும் ஒலிக்கவிருக்கின்றன. இப்படியாக இரவு நேரங்களை இசையின் அலைகளில் மூழ்கச் செய்யும் இந்த நிகழ்வுகள், தமிழ் சினிமா இசையின் வெற்றிப்பாதையை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கும். இசையை நேசிக்கும் ஒவ்வொருவரும், இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று தங்களின் இசை அமைப்பாளர்களை நேரில் காணும் வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்த இருக்கின்றனர்.

ஆகவே கோவை, செப்டம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் இசை மழையில் நனையப்போகிறது.
இதையும் படிங்க: கதாநாயகனாக அறிமுகமாகும் அபிஷன் ஜீவிந்த்..! 'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குநருக்கு அடித்த ஜாக்பாட்..!