ஆக்ஷன் கிங் என்று அழைக்கக்கூடிய அர்ஜுனுக்கு அசிஸ்டன்டாக இருந்து வந்த நடிகர் விஷால் மட்டும் எப்படி இருப்பார் ஆக்சன் ஹீரோவாக தானே இருப்பார். அப்படி சினிமா துறையில் இன்று வரை ஆக்சன் ஹீரோவாக வலம் வரும் நடிகர் விஷால், சமீப காலமாக கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஒன்று தடுமாறி பேசுகிறார் இல்லையெனில் மயங்கி விழுகிறார் என மக்கள் பரவலாக பேசி வந்தனர். மேலும் அவருடன் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஒரு துணை இருந்தால் அவருடைய வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் இருக்காது எனவும் பலர் பேசி வந்தனர்.

இப்படி இருக்க, சமீபத்தில் நடிகர் விஷால் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியில், ஆகஸ்ட் மாதம், சினிமா சங்கத்தின் கட்டடத் திறப்பு விழா நடைபெறும் என்றும் அதற்கு பின்பாக தன்னுடைய திருமணம் நடைபெறும் எனவும் தெரிவித்து இருந்தார். இந்த சூழலில், இயக்குனர் கௌதம் கிருஷ்ணா இயக்கத்தில் சாய் தன்ஷிகா கதாநாயகியாக நடித்து உருவாகியுள்ள படம் தான் 'யோகி டா'. இப்படம் இன்னும் சில வாரங்களில் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ள நிலையில், இப்படத்திற்கான ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஷால், இயக்குனர் ஆர்.பி உதயகுமார் மற்றும் ராதாரவி என பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: காதலை அறிவித்த விஷால் - சாய் தன்ஷிகா! வைரலாகும் ரொமான்டிக் போட்டோஸ்!

முன்னதாக விஷால் பேசுகையில், நானும் தன்சிகாவும் பல வருடங்களாக காதலித்து வருகிறோம் விரைவில் திருமணம் செய்ய உள்ளோம் என தெரிவித்தார். அவரைப் போல் பேசிய நடிகை தன்ஷிகா, விஷாலைப் பார்த்து, 'என்ன..? பேபி சொல்லிடலாமா' எனக் கூறிவிட்டு, தானும் விஷாலும் காதலிப்பதாகவும், தன்னுடைய எல்லா கஷ்டமான சூழ்நிலைகளிலும் அவர் தனக்கு உறுதுணையாக இருந்ததாகவும், உண்மையில் அவருடைய குணம் குழந்தைத்தனமானது என்றும் முதலில் நண்பர்களாக பேச ஆரம்பித்த நாங்கள் காலப்போக்கில் எங்கள் மனதை ஒருவருக்கொருவர் பறிகொடுத்துக்கொண்டோம் என தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் வருகின்ற ஆகஸ்ட் 29ஆம் தேதி எங்களுக்கு திருமணம் நடைபெற உள்ளது என கூறி இனிப்பான செய்தியும் கொடுத்துவிட்டு சென்றார்.

இவர்களைத் தொடர்ந்து பேசிய நடிகர் ராதாரவி, ரசிகர்களின் பல வருட கேள்விக்கு இன்று விடை கிடைத்திருக்கும் என நம்புகிறேன். விஷால் மற்றும் தன்ஷிகா இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக இந்த மேடையில் பகிரங்கமாக அறிவித்துள்ளனர். இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். விஷாலின் இத்தனை வருட கால காத்திருப்புக்கு கிடைத்த பலன் தான் தன்ஷிகா. அவருக்கு ஏற்ற ஒரு வாழ்க்கை துணையை அவர் தேர்வு செய்து இருக்கிறார்.

எனக்கு முன்பாக பேசிய ஆர் பி உதயகுமார் கூறியதைப் போல் விஷால் ஒன்றும் குழந்தை இல்லை அவரைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். பார்க்க ஒன்றும் தெரியாத வரை போல் இருப்பார் ஆனால் எல்லா விஷயங்களையும் தெரிந்து வைத்துக் கொள்வார். தனக்குத் தெரியும் என காண்பித்துக் கொள்ளாதவர். அந்த அளவிற்கு பார்க்க கரடு முரடான ஆளை போல் இருந்தாலும் குணத்தில் குழந்தையாகவே இருக்கிறார். உங்கள் இருவரையும் பார்க்கும் பொழுது சந்தோஷமாக உள்ளது. இருவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். என இந்த வேளையில் உங்களை ஆசிர்வதிக்கிறேன்.

அதுமட்டுமில்லாமல், உடலில் உள்ள சில பிரச்சினைகள் காரணமாக 6:30 மணிக்கு எல்லாம் மாத்திரை போட்டு தூங்கி விடுவதால், இந்த நிகழ்ச்சியில் நீண்ட நேரம் என்னால் இருக்க முடியாது. ஆதலால் இந்த நிகழ்ச்சி நடக்கும்பொழுது நான் கிளம்பி விடுவேன். இதனை காரணம் காட்டி, ராதாரவிக்கும் விஷாலுக்கும் உள்ள பிரச்சினையால்தான் அவர் கிளம்பி சென்றார் என யாரும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: காதலில் விழுந்த விஷால்.. சாய் தன்ஷிகாவோடு டும் டும் டும்..! எப்போ தெரியுமா..?