15 வயதிலேயே தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி கோலிவுட் படங்களுக்கு வலை விரித்தவர் தான் யாஷிகா ஆனந்த்.

சந்தானத்துக்கு இரண்டாவது நாயகியாக நடிக்க கமிட் ஆன படத்தில், அந்த படத்தின் காஸ்டிங் மேனேஜருடன் ஏற்பட்ட பிரச்சனையால் யாஷிகா வெளியேற்றப்பட்டார்.
இதையும் படிங்க: நடிகை யாஷிகா ஆனந்தின் "எக்ஸ்ரே கண்கள்" படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு..!

காஸ்டிங் மேனேஜர் மீது தவறு இருந்தும், அறிமுக நாயகி என்கிற காரணத்தால் இவரை வெளியேற்றியதாக கூறப்பட்டது.

இதை தொடர்ந்து, நோட்டா, துருவங்கள் பதினாறு போன்ற படங்களில் நடித்தார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில்... ஓவர் கவர்ச்சியில் நடித்ததால் அடல்ட் நாயகி என இவர் மீது முத்திரை குத்தப்பட்டது.

இதில் இருந்து வெளியேற யாஷிகா தேர்வு செய்த களம் தான் பிக்பாஸ்.

இந்த நிகழ்ச்சியில் யாஷிகா திறமையாக விளையாடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தபோதிலும் நட்பு வட்டத்தில் சிக்கி ஃபைனலுக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் யாஷிகாவுக்கு பட வாய்ப்புகள் வரிசை கட்ட துவங்கிய நிலையில், இவரும் ஓய்வின்றி நடித்து வந்தார்.

அந்த சமயத்தில் தான், யாஷிகா தன்னுடைய தோழியுடன் பார்ட்டிக்கு சென்றுவிட்டு திரும்பி கொண்டிருந்த கார் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் இருந்து மீண்டு, தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க அடுத்தடுத்த வாய்ப்பை தேடி வருகிறார்.

அந்த வங்கியில் தற்போது யாஷிகா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணை பறிக்கும் அழகில் விதவிதமான உடையில் போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருவதை பார்க்க முடிகிறது.
இதையும் படிங்க: மாசாணியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்..! "பராசக்தி" படப்பிடிப்பின் போது சுவாரஸ்யம்..!