தென்னிந்திய திரையுலகை கலக்கிய நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர்.

தன்னுடைய படிப்பை முடித்த கையேடு, நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன்படி பாலிவுட் திரையுலகில் இவர் அறிமுகமான முதல் படம் தடக். இந்த படத்தின் கதையை மகள் ஜான்விகாக தேர்வு செய்தவர் ஸ்ரீதேவி தான்.

இதையும் படிங்க: Trisha Photos: சுகர் பேபியாக மாறி... வெள்ளை புடவையில் சூடேற்றிய த்ரிஷா!
ஆனால் இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ஸ்ரீதேவி... மாரடைப்பு காரணமாக உயிரிழக்க நேர்ந்தது.

மிக குறுகிய காலத்தில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக மாறிய ஜான்வி தற்போது தென்னிந்திய மொழி படங்களிலும் நடிக்க துவங்கி உள்ளார்.

அந்த வகையில், தெலுங்கில் ஏற்கனவே ஜூனியர் என் டி ஆருக்கு ஜோடியாக 'தேவாரா' படத்தில் நடித்தார்.

இதை தொடர்ந்து, ராம் சரணுக்கு ஜோடியாக பெடி படத்தில் நடித்து வருகிறார்.

நட்சத்திர நிகழ்வுகளில் கலந்து கொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டும் ஜான்வி தற்போது, கேன்ஸ் 2025 பட விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

விதவிதமான கவர்ச்சி உடையில் ரெட் கார்ப்பெட்டில் பூனை நடை போட்டுவரும் இவர் தற்போது பேக் லெஸ் டாப் அணிந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

முதுகு முழுவதும் தெரியும்படி டிசைன் செய்யப்பட்ட லைட் கிரீன் கலர் கவுனில் ஜான்வி எடுத்து கொண்ட போட்டோஸ் இப்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: Kushboo Photos: ஸ்டைலிஷ் லுக்கில்... செல்ஃபி புள்ளையாக மாறிய குஷ்பு!