பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமூக வலைதளம் வழியாக புகார் அளித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனக் குறிப்பிட்டு, தனக்கும் தனது குழந்தைக்கும் நீதி கோரி முதலமைச்சரை டேக் செய்து பதிவிட்டுள்ளார். ஜாய், தான் ஏழு மாத கர்ப்பிணி எனவும், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கர்ப்பமாக்கிவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜ், இந்தியாவின் புகழ்பெற்ற சமையல் கலைஞர், நடிகர் மற்றும் மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாவார். தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் உணவு சேவைத் துறையில் முன்னணியில் உள்ள இவரது நிறுவனம், 400-க்கும் மேற்பட்ட திருமணங்களுக்கும், பிரபல நிகழ்ச்சிகளுக்கும் உணவு வழங்கியுள்ளது. நடிகர் கார்த்தியின் திருமணம், பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்வுகள் உள்ளிட்டவற்றில் இவரது சமையல் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: குழந்தையின் பெயர் இதுதான்.. மாதம்பட்டி ரங்கராஜனின் 2வது மனைவி போட்ட பதிவு..!!
திரையுலகில், 2019-ல் ‘மெஹந்தி சர்க்கஸ்’ மூலம் நடிகராக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து ‘பென்குயின்’ (2020) மற்றும் ‘மிஸ் மேகி’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார். இதனிடையே மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜோய் கிரிசில்டாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இவருக்கு ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இருப்பினும், ஜாய் கிரிஸில்டாவுடன் 2023-ல் திருமணம் செய்ததாகவும், பின்னர் தன்னை புறக்கணித்ததாகவும் ஜாய் கூறுகிறார். அவர் வெளியிட்ட திருமண புகைப்படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. ரங்கராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜாயுடனான புகைப்படங்களை நீக்கியதாகவும், தன்னை தாக்கியதாகவும் ஜாய் குற்றம்சாட்டுகிறார்.

சென்னை காவல் ஆணையரிடம் அளிக்கப்பட்ட புகாரில், ரங்கராஜ் தன்னுடன் வாழ மறுப்பதாகவும், தன்னை சந்திப்பதை தவிர்ப்பதாகவும் ஜாய் தெரிவித்துள்ளார். மேலும், ரங்கராஜ் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், ஆதாரங்களை அழிக்க முயற்சித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜாய், தனது பார்வையற்ற தாயுடன் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்ததாகவும், ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் கூறியுள்ளார். முதலமைச்சரிடம் நீதி கோரியுள்ள ஜாய், ரங்கராஜுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: குழந்தையின் பெயர் இதுதான்.. மாதம்பட்டி ரங்கராஜனின் 2வது மனைவி போட்ட பதிவு..!!