'ரெட்ரோ' படம் பார்ப்பதற்கு பதில் வள்ளலார் தருமசாலையில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்தோம் என பழைய பேச்சுக்கு பழி வாங்கி வருகிறார்கள் பொதுமக்கள். ''இனி சூர்யாவுக்கு எதிர்காலமே இல்லை. படம் முழுவதும் படும் மொக்கை'' என பட பார்க்காதவர்கள் கூட வன்மத்தை கக்கி வருகிறார்கள்.
சூர்யா, ஜோதிகா, சிவகுமார், கார்த்தி போன்றோரின் ஆணவம் அடங்காத வரை, அவர்கள் படம் உருப்படியாக ஓடப்போவதில்லை. வன்னியர்களை சாதி வெறியர்களாக காண்பித்து சூர்யாவுக்கு முட்டுக் கொடுத்த யாரும் அவரின் பட தோல்விகளை வெற்றிகளாக மாற்ற முடியவில்லை'' எனக் கொத்தளித்து வருகிறார்கள். காரணம் ஜோதிகாவின் பழைய பேச்சும் சூர்யாவின் ஜெய்பீம் படத்தின் சர்ச்சையும் மட்டுமே.

நடிகை ஜோதிகா 2020-ல் தஞ்சை பெருவுடையார் கோவில் தொடர்பாக அவர் பேசிய கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. ஒரு தனியார் தொலைக்காட்சி விருது வழங்கும் நிகழ்ச்சியில், கோவில்களுக்கு செலவு செய்யப்படும் பணத்தை விட, மக்கள் நலனுக்காக மருத்துவமனைகள், பள்ளிகளுக்கு செலவு செய்வது முக்கியம் என்று அவர் கூறினார். இந்தக் கருத்து, சில அரசியல் கட்சிகள், இந்து அமைப்புகளால் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டது. குறிப்பாக அவரது மதத்தை முன்னிறுத்தி விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும், ஜோதிகா தனது கருத்தில் உறுதியாக இருந்து, பின்வாங்கவோ மன்னிப்பு கேட்கவோ இல்லை, இது ரசிகர்களிடையே ஆறாத வடுவாக மாறி விட்டது.
இதையும் படிங்க: மவனே... ரெட்ரோ-வை அரை மணி நேரம் தாண்டி பார்த்துட்டா நீ வீரன்டா..! குமுறும் ரசிகர்கள்..!
‘ஜெய்பீம்’ திரைப்படம், தமிழ்நாட்டில் நீதிக்காகப் போராடும் பழங்குடி மக்களின் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு 2021ம் ஆண்டு ரிலீசானது. இந்தப் படத்தில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு காவலர் எதிர்மறையாகச் சித்தரிக்கப்பட்டதாகக் கூறி, வன்னியர் சமூகத்தினர் மற்றும் பாமக உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

படத்தில் ஒரு காவலர் கதாபாத்திரம் (சப்-இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி) வன்னியர் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கருதப்பட்டது. இந்தக் கதாபாத்திரம் பழங்குடி மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்துவதாகக் காட்டப்பட்டது. குறிப்பாக, கதாபாத்திரத்தின் பின்னணியில் வன்னியர் சங்கத்தின் சின்னமான ‘அக்னி குண்டம்’ காட்டப்பட்டது. இது வன்னியர் சமூகத்தை நேரடியாக இணைப்பதாக விமர்சிக்கப்பட்டது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர், படம் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்துவதாகவும், தவறாகச் சித்தரிப்பதாகவும் குற்றம் சாட்டினர். வன்னியர்களை குற்றவாளிகளாகக் காட்டிவிட்டு, அவர்களின் நீதிக்கான போராட்டங்களை புறக்கணித்ததாக பாடலாசிரியர் தாமரை கருத்து தெரிவித்தார்.

சிலர், படத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இருளர் இனமல்ல, குறவர் இனமெனவும், இதனால் சமூகநீதி என்ற பெயரில் தவறான தகவல் பரப்பப்பட்டதாகவும் வாதிட்டனர். இயக்குநர் த.செ.ஞானவேல், நடிகர் சூர்யா ஆகியோர், படம் எந்த சமூகத்தையும் குறிவைக்கவில்லை என்றும், இது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும் விளக்கினர். இருப்பினும், சர்ச்சைக்கு பதிலாக மன்னிப்பு கோரப்படவில்லை. இது மேலும் விமர்சனங்களைத் தூண்டியது.
வன்னியர் சங்கம் சார்பில் படத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. படத்தில் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தியதாகக் கூறி, இழப்பீடு கோரப்பட்டது. 2021 நவம்பரில், சென்னை உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, படத்தின் குறிப்பிட்ட காட்சிகளை மறுபரிசீலனை செய்யுமாறு பரிந்துரைத்தது.

வன்னியர் சமூகத்தினர் இன்னும் இந்த சர்ச்சையை மறக்கவில்லை. நடிகர் சூர்யாவின் புதிய படங்களை வட தமிழ்நாட்டில் புறக்கணிக்க வேண்டுமென அழைப்பு விடுக்கின்றனர். சூர்யா மன்னிப்பு கேட்கவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்கிறது. அடுத்து வரும் அவரது படங்களின் வெற்றி வட தமிழ்நாட்டில் பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
கடந்த 2019ம் ஆண்டு பொது பொது நிகழ்ச்சியில் செல்ஃபி எடுக்க வந்தவரின் செல்போனை தட்டி விட்டார் சிவகுமார். இது பரவலாக விவாதிக்கப்பட்டது. அப்போது முதல் அவரை செல்தட்டி என பலரும் புனைப்பெயர் சூட்டி அழைக்கிறார்கள்.
இதையும் படிங்க: ரெட்ரோ படத்திற்கு சூர்யா ஹீரோ அல்ல.. இவர் தான்..! கார்த்திக் சுப்பராஜின் மாஸ் அப்டேட்..!