நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம், தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இப்படம் 1960களில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்களை மையப்படுத்திய வரலாற்று அரசியல் நாடகமாக உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் ஒரு கல்லூரி மாணவராக நடித்துள்ளார், அவருடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம், டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது.bபடத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டதில் இருந்தே சில சர்ச்சைகள் எழுந்தன. படத்தின் மிகப்பெரிய சிக்கல் தணிக்கை வாரியத்தில் (CBFC) ஏற்பட்டது. நீண்ட இழுத்தடிப்பு செய்த பிறகு நேற்று தணிக்கை சான்று கிடைத்த நிலையில் பராசக்தி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் இதுவரை கிடைக்காமல் வழக்கு நடந்து வரும் நிலையில் நேற்று பராசக்தி படத்திற்கு U/A சான்று வழங்க உத்தரவு பிறப்பித்தது தணிக்கை வாரியம். இதன்பிறகு படம் இன்றும் ரிலீஸ் ஆனது. இந்த படம் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைத்து உள்ளார்.
இதையும் படிங்க: 'ஜனநாயகன்' இல்லைன்னா என்ன.. 'பராசக்தி' ரெடி ஆகிட்டிச்சே..! குறித்த நேரத்தில்.. திட்டமிட்டபடி.. உலகம் முழுவதும் ரிலீஸ்..!
இது அவரது 100 வது படம்… இது குறித்து பெருமையுடன் ஜி. வி. பிரகாஷ் கூறியுள்ளார். நீண்ட காலத்துக்குப் பிறகு, நமது தாய்மொழியைப் போற்றியும் உயர்த்தியும் பேசும் ஒரு திரைப்படம் என்று தெரிவித்தார். தமிழ் மீது கொண்ட பேரன்புடன், உங்களுக்காக பராசக்தி என்றும் என் 100வது திரைப்படம் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: 'ஜனநாயகன்' ரூட் கிளியர்.. 'பராசக்தி' என்ன பண்ணுமோ..! நெதர்லாந்தில் சிவகார்த்திகேயன் பட திரையிடல்கள் ரத்து..!