நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ திரைப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகியிருக்கிறது. பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், கருணாகரன், வித்யா சங்கர், தமிழ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாரயாணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படத்தின் முதல் பாடல் கண்ணாடி பூவே ஏற்கனவே வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

தமிழ் நாட்டில் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். இப்படத்தின் வெளியீட்டை டீஜே இசைக் கச்சேரியுடன் ஆட்டம் பாட்டத்துடன், மேள தாளம் முழங்க விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். தியேட்டர் வளாகம் முழுவதும் ரெட்ரோ பட பிளக்ஸ் மற்றும் பேனர்கள் வைத்து கொண்டாடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தியேட்டர்களிலும் திரைப்படங்கள் வெளியிடப்பட்டது. நெல்லை ஜங்ஷன் உடையார்பட்டி ராம் முத்துராம் தியேட்டரிலும் திரையிடப்பட்டது. இந்த படத்தை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் காலை முதல் குவிந்த வண்ணம் இருந்தனர். இதையடுத்து தியேட்டர்கள் முன்பு பட்டாசுகள் வெடிக்கப்பட்டு ரசிகர்கள் ஆரவாரத்துடன் படத்தை கண்டு களித்தனர்.

இதையும் படிங்க: ரெட்ரோ படம் குறித்து சூர்யா சொன்ன அந்த வார்த்தை..! நெகிழ்ச்சி பொங்க பேசிய கார்த்திக் சுப்புராஜ்..!
படத்தை பார்த்து விட்டு வெளியே வந்த ரசிகர்கள் படம் மிகவும் சிறப்பான படமாக இருப்பதாகவும், காதல் காட்சிகள், சண்டை காட்சிகள் தனித்துவமாக இருப்பதாகவும், குடும்பத்துடன் வந்து படத்தை கண்டு களிக்கலாம் எனவும் தெரிவித்தனர். கார்த்திக் சுப்புராஜ் - சூர்யா கூட்டணியில் நல்ல கதையோடு மிரட்டியிருக்கிறார்கள். ரொம்ப நாட்களுக்கு நல்ல எண்டர்டெயின்மெண்ட் படமாக சூர்யாவுக்கு அமைந்துள்ளதாக சோசியல் மீடியாக்களில் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது.
இதையும் படிங்க: Karthigai Deepam: ஹாஸ்பிடலில் ரோகினி! உதவ வரும் பரமேஸ்வரி பாட்டி - தடுக்கும் சாமுண்டீஸ்வரி!