சின்னத்திரையில் சென்சேஷனல் ஹீரோயினாக இருந்தவர் ஷிவானி நாராயணன்.

16 வயதிலேயே ஹீரோயினாக நடித்து, 18 வயதிலேயே காதல் சர்ச்சையில் சிக்கி விஜய் டிவி சீரியலுக்கு கும்பிடு போட்டுவிட்டு வெளியேறினார்.

இதையும் படிங்க: ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் ரசிகர்கள் மனதை சிறகடிக்க வைத்த ஷிவானி நாராயணன்!
பின்னர் ஜீ தமிழ் ஷிவானி நாராயணனுக்கு வாய்ப்பு கொடுத்து ஆதரித்தது.

இதை தொடர்ந்து, இன்ஸ்டாகிராமில் அதிக ஆர்வம் காட்ட துவங்கினார்.

5 மணி ஷிவானி என அழைக்கும் அளவுக்கு... தினம்தோறும் 5 மணிக்கு புதிய புதிய போட்டோசை களமிறக்கி ரசிகர்களை குஷி படுத்தினார்.

இதன் விளைவாக தற்போது, இவருக்கு சுமார் 3.9 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.

தன்னுடைய ஃபாலோவர்ஸ் கொடுத்த நம்பிக்கை காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கினார்.

ஓரிரு வாரத்திலேயே மூட்டையை கட்டும் நிலையில், இருந்த ஷிவானி எப்படியோ 90 நாட்களை கடந்து தாக்குப்பிடித்தார்.

பாலாஜி முருகதாஸுடன் சில காதல் கிசுகிசுவில் இவருடைய பெயர் அடிபட்டாலும்... தற்போது இவருவரும் நல்ல நண்பர்களாக பழகி வருகிறார்கள்.

இந்நிலையில், ஷிவானி இந்த ஆண்டு சித்திரா பவுர்ணமியை ஈஷா யோகா மையத்தில் கொண்டாடி உள்ளார்.

இதுகுறித்த சில புகைப்படங்களை ஷிவானி நாராயணன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: சல்வார் அணிந்த சொர்க்கமே..! பிங்க் சல்வாரில் பளீச் என மின்னிய ஷிவானி நாராயணன்!