'டூரிஸ்ட் பேமிலி’ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பால் தியேட்டர்களில் அப்படத்தின் காட்சிகள் அதிகரித்திருப்பது படக்குழுவினரரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகிபாபு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. உழைப்பாளர் தினமான மே 1ஆம் தேதி சூர்யா நடிப்பில் வெளியான ‘ரெட்ரோ’ படத்துடன் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் வெளியானது. நகைச்சுவை, செண்டிமெண்ட்டை சம விகிதத்தில் கலப்து வெளியாகியுள்ள இப்படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. குடும்பப் படம் என்பதால் மக்கள் மத்தியில் இப்படத்துக்குப் பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது.

இப்படத்தைப் பார்ப்பவர்களின் மவுத் டாக் வழியாகவே இப்படத்துக்கு விளம்பரம் கிடைத்துள்ளது. இதனால் நாளுக்கு நாள் இப்படத்தின் காட்சிகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இப்படத்துக்கு மே 1 அன்று பெரிய திரையரங்குகளிலும் மல்டி பிளஸ் தியேட்டர்களிலும் குறைந்த காட்சிகளே ஒதுக்கப்பட்டன. முதலில் சில திரையரங்குகளில், சின்ன திரைகளே கிடைத்தன. தற்போது பெரிய திரைகளில் சில காட்சிகள் 'டூரிஸ்ட் ஃபேமிலி'க்கு கொடுக்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் 'ரெட்ரோ' படத்துக்கு காட்சிகள் சற்று குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதல் நாளில் சென்னை மாயாஜாலில் 15 காட்சிகள் மட்டுமே ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்துக்கு கொடுக்கப்பட்டன. தற்போது 30-க்கும் அதிகமான காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதேபோல பல்வேறு திரையரங்குகளிலும் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். படத்துக்கு கிடைத்துள்ள இந்த வரவேற்பினால் வசூலும் அதிகரித்து வருகிறது.
இதையும் படிங்க: ரெட்ரோவுக்கு கங்குவாவே மேல்.. சூர்யாவை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்..!
இதையும் படிங்க: கட்அவுட்டுக்கு பீர் அபிஷேகம்.. ‘சிங்கம்’ சூர்யாவை அசிங்கப்படுத்திய ரசிகர்..!