இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் "ரெட்ரோ" படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார் நடிகர் சூர்யா. இப்படம் சூர்யாவின் 44வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்து இருந்தது. இப்படி இருக்க, படம் வெளியாவதற்கு முன்பு இந்த ரெட்ரோ படத்தை குறித்து பேசியிருந்த கார்த்திக் சுப்புராஜ், அதில், 'ரெட்ரோ' என்பது ஒரு காலகட்டத்தை குறிக்கும் சொல்.
இந்தப் படத்தின் கதையும் 1990களில் நடக்கின்ற ஒரு 'காதல் கதை' என்பதால் இப்படத்திற்கு இந்த தலைப்பை வைத்துள்ளோம். இது நீங்கள் நினைப்பதை போல் கேங்ஸ்டர் படம் அல்ல. அழகான காதல் படம். ஆதலால் இப்படத்தில் ஆக்ஷனும் உண்டு, மகிழ்ச்சியான தருணங்களும் உண்டு. மேலும், ரெட்ரோ படத்தில் சூர்யா, "பாரிவேல் கண்ணன்" என்ற கேரக்டரில் நடிக்கிறார். கதை பல இடங்களில் நடப்பதால் பல தோற்றங்களில் அவர் வருவார்.

படத்தில் கோபம், அடிதடி என்று வாழ்ந்து, தனக்கான இலக்கு என்ன என்று தெரியாமல் ஓடும் இளைஞன் வாழ்க்கையில் ஒரு பெண் வரும்போது, அந்தப் பெண்ணின் அன்பாலே அவன் தன்னை முற்றிலும் மாற்றிக் கொள்வதும், அந்தப் பெண்ணுக்காக வரும் பெரிய பிரச்சனையை தீர்த்து வைப்பதுமான மிரளவைக்கும் கதை. அதுமட்டுமல்லாமல், இப்படத்தில் பூஜாவின் கேரக்டர் பெயர் ருக்மணி. படத்தின் பெரும்பாலான கதை அந்தமானில் நடக்கிறது.
தினமும் பல மைல் தூரம் படகில் சென்று ஆளே இல்லா தனி தீவில் தான் இந்த காட்சிகளை படம் ஆக்கினோம். ஒரு சில படப்பிடிப்பு வாரணாசியிலும் நடந்தது. மேலும், இந்த படம் நிச்சயமாக நான் இதுவரை எடுத்த கதைகளை போல் அல்லாமலும், சூர்யாவின் நடிப்பில் மக்கள் பார்க்காத முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகவும் இருக்கும் என்றார்.
இதையும் படிங்க: காதலை மையமாக வைத்து உருவான படம் தான் "ரெட்ரோ"..! கார்த்திக் சுப்பராஜ் ஓபன் டாக்..!

இதை எல்லாம் பார்த்து மக்கள் சூர்யாவின் இந்த ரெட்ரோ படம் கங்குவா படத்தை போல் இல்லாமல் நன்றாக இருக்க வேண்டும் என கூறி வந்த நிலையில் மே 1ம் தேதி வெளியான ரெட்ரோ வை பார்த்து விட்டு இதனைவிட கங்குவாவே மேல் என கூறி சென்றனர். இப்படி இருக்க இப்படத்தை குறித்து பிரபல சினிமா ரிவியூவரான ப்ளூ சட்டை மாறன் பேசுகையில் " சினிமாவில் நல்ல அனுபவம் வாய்ந்த கதை ஆசிரியர்களும் எழுத்தாளர்களும் கூறுவது என்னவென்றால் ஒரு அருமையான கதைக்குண்டான சீன்களை அதுவே வாங்கிக் கொள்ளும் அப்படி என்றால் தான் ஒரு நல்ல கதை அமையும்.

அவங்க சொல்லாத ஒரு விஷயம் ஒன்னு இருக்கு அதேபோல ஒரு மொக்க கதை அதுக்கு தேவையான மொக்கை மொக்கையான கதைகளை வாங்கி சொருவி சொருகி நம்மளை எல்லாம் மொத்தமா சொருகி விட்ட படம் தான் ரெட்ரோ. இந்த மாதிரியான படங்களில் வில்லன் கேரக்டர்கள் என்பது சுத்தமாக தாங்காது இந்த படத்தில் வில்லன் ஜோவியல் ஜார்ஜ் என நாம் அனைவரும் நினைத்திருப்போம் ஆனால் படத்தில் வில்லனுக்கே மிகப்பெரிய குழப்பம் தான் பிரகாஷ்ராஜ் வில்லனா அல்லது ஜோவில் ஜார்ஜா அல்லது நாசரா அல்லது அவரது மகனா என படத்தில் யார் வில்லன் என்பதை கண்டுபிடிப்பதற்கு முன்பாக படமே முடிந்து விட்டது.

வில்லன் யார் என்பது தெரியாத படத்தில் வில்லன் கேரக்டர் எவ்வளவு ஸ்ட்ராங்காக இருக்கும் என்பதை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். தூத்துக்குடியில் ஆரம்பித்த கதை எங்கெங்கோ செல்கிறது. குறிப்பாக தூத்துக்குடியில் இருக்கக்கூடிய அம்மாவை எதற்காக காசிக்குச் சென்று அடக்கம் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. பின்பு அப்படியே திரும்பி பார்த்தால் படம் ஆப்பிரிக்காவிற்கு செல்கிறது. அங்கிருந்து எதற்காக அந்தமானுக்கு சென்றார்கள் என தெரியவில்லை. அப்படியே அந்தமானுக்கு சென்றாலும் வில்லன் என்ன செய்கிறார் என்று பார்த்தால் அடிமைகள் எல்லோரையும் வைத்து சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்.

கிளாடியேட்டர் படத்தின் காட்சிகளைப் போல இரண்டு பிரிவுகளாக இருக்கும் நபர்களை வைத்து சண்டை போட வைக்கும் சைக்கோ வில்லனை காண்பித்து அவனது இடத்தில் கிணற்றில் இருக்கக்கூடிய முதலைகளையும் காண்பிக்கின்றனர். முதலைகள் இருக்கும் அந்த கிணற்றில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தள்ளிவிட்டு கொல்கின்றனர்.
படத்தில் காமெடிக்கு சிரிப்பு வரவில்லை என்றாலும் பரவாயில்லை சிரிப்பு தரப்பி என்று சொல்லி காண்பிக்கும் காட்சியில் நமக்கே சிரிப்பு வரவில்லை. உண்மையில் படத்தில் காமெடி ஆக இருந்தது சூர்யாவுக்கு கேங்ஸ்டர் கெட்டப் போடுகிறேன் என சொல்லி ரெடின் கிங்ஸ்லி கெட்டப் போட்டது பார்க்க நகைச்சுவையாக இருந்தது.

படத்தில் நிறைய விஷயங்களை எடுத்தாலும் அதனை வேண்டாம் என நிராகரித்து விட்டார்கள் என்பதைப் போல பிரகாஷ்ராஜ் வந்து சென்ற சீன்கள் இருந்தது. மேலும் கருணாகரன், சிங்கம் புலி, எதற்கு வந்தார்கள் என சுத்தமாகத் தெரியவில்லை. மொத்தத்தில் இந்த படம் எப்படி இருக்கு என பார்த்தீர்கள் என்றால், சூர்யாவின் ரெட்ரோ படத்தை பார்த்துவிட்டு உண்மையில் இதற்கு முன்பு வெளிவந்த கங்குவா படமே நன்றாக உள்ளது எனக் கூறி வருகின்றனர்.
நாளை ரெட்ரோ படம் அருமையான படம் என சொல்ல சூர்யாவின் அடுத்த படம் தேவைப்படுகிறது அந்தப் படத்தை பார்த்தால் ரெட்ரோவே நன்றாக உள்ளது என சொல்வார்கள். ஒயின் எப்படி பழையதாக மாற மாற விலைமதிப்பில்லாததாக மாறுகிறதோ அதேபோல சூர்யாவின் படங்களும் பழையதாக மாற மாற தான் நன்றாக இருக்கும். 200 வருடங்களுக்குப் பின்பு தான் ரெட்ரோப்படும் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் சொல்வார்கள்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: ரெட்ரோ படத்திற்கு சூர்யா ஹீரோ அல்ல.. இவர் தான்..! கார்த்திக் சுப்பராஜின் மாஸ் அப்டேட்..!