ரத்தம் கொடுத்த பாட்டி :
அதாவது ரோகினியை காப்பாற்றியாக வேண்டும் என்ற கட்டாயத்தால் சாமுண்டீஸ்வரிக்கு தெரியாமல் இரத்தம் கொடுப்பவரின் பெயரை மாற்றி பின்பக்கமாக பரமேஸ்வரி பாட்டியை ஹாஸ்பிடல் அழைத்துச் சென்று ரோகிணிக்கு ரத்தம் கொடுக்கின்றனர்.
உயிர் பிழைத்த ரோகினி :
இதனால் ரோகிணி உடல்நிலை தேறி இயல்பு நிலைக்கு வருகிறாள். பிறகு அவளை பரிசோதனை செய்த டாக்டர் டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என்று சொல்கிறார்.
இதையும் படிங்க: Karthigai Deepam: ஹாஸ்பிடலில் ரோகினி! உதவ வரும் பரமேஸ்வரி பாட்டி - தடுக்கும் சாமுண்டீஸ்வரி!

சந்திரகலாவின் கேள்விக்கு சாமுண்டீஸ்வரியின் பதில் :
அடுத்ததாக ரோகிணியை வீட்டுக்கு அழைத்து வந்ததும் கோவில் பூஜைக்கு செல்ல வேண்டும் என்பது குறித்து பேச சந்திரகலா கண்டிப்பாக இந்த கோவில் பூஜைக்கு போகணுமா என்று கேள்வி எழுப்புகிறாள். சாமுண்டீஸ்வரி கொடுத்த வாக்கை காப்பாற்றணும். அதனால் நிச்சயமாக போகணும் என்று சொல்கிறாள்.
ராஜராஜனின் சந்தேகம் :
இதையடுத்து ராஜராஜன் கார்த்தியை தனியாக அழைத்துச் சென்று ஊர்ல உங்களை எல்லாருக்கும் தெரியும் அப்படி இருக்கும்போது உண்மை தெரிந்து விடாதா என கேள்வி கேட்கிறார். கார்த்திக் என் பிரண்டை இளையராஜா எல்லா ஏற்பாட்டையும் பண்ணி வைத்திருக்கான்.. எதுவும் வெளியே தெரியாது என திட்டத்தை சொல்கிறான்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
இதையும் படிங்க: Karthigai Deepam: கார்த்தியிடம் நடந்த டீலிங்... துப்பாக்கியை கையில் தூக்கிய ரேவதி!