பிரபல சமையல் கலைஞர் மற்றும் கேட்டரிங் நிறுவன உரிமையாளரான மாதம்பட்டி ரங்கராஜ் மீது திருமண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மாநில மகளிர் ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பி, நாளை (அக்டோபர் 15) விசாரணைக்கு நேரில் ஆஜராவதற்கு உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா தனது சமூக வலைதள பதிவுகளில், ரங்கராஜுடன் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் உறவு வைத்திருந்ததாகவும், அவரை கணவர் எனக் கருதி திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியிருந்தார். இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்ததாகவும், தனது வயிற்றில் உள்ள குழந்தைக்கு ரங்கராஜ்தான் தந்தை எனவும் அவர் வெளிப்படுத்தினார். இருப்பினும், இரண்டு மாதங்களுக்கு முன்பு ரங்கராஜ் தொடர்பை துண்டித்து, சந்திக்க முயன்றபோது அடித்து விரட்டியதாக ஜாய் குற்றம் சாட்டியுள்ளார். இது திருமண மோசடி என்பதோடு, அவர் தன்னைப் போன்று 10 பெண்களை ஏமாற்றியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என் குழந்தையோட சாபம் உங்கள சும்மா விடாது.. ஆவேசமாக பேசிய ஜாய் கிரிஸில்டா..!!
இந்தப் புகார் கடந்த மாதம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் முதலில் அளிக்கப்பட்டது. அதே மாதம், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் அலுவலகத்தில் ஜாய் ஆஜராகி, புகைப்படங்கள், செல்போன் உரையாடல்கள் உள்ளிட்ட ஆதாரங்களை சமர்ப்பித்தார். ரங்கராஜிடமும் முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்டது. அவர் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாகக் கூறினார். முதல்வரின் தனிப்பிரிவுக்கு ஆன்லைன் புகாரும் அளிக்கப்பட்டது. இருப்பினும், காவல் துறை நடவடிக்கை எடுக்காததாக ஜாய் குற்றம்சாட்டி, சமூக வலைதளங்களில் வெளிப்படையாக பதிவிட்டார்.
சமீபத்தில் சேப்பாக்கம் மாநில மகளிர் ஆணையத்தில் ஜாய் தனது வழக்கறிஞர் சுதாவுடன் ஆஜராகி, விரிவான விளக்கம் அளித்தார். புகாரில் காவல் துறை மீதும் நடவடிக்கை கோரப்பட்டது. இதன் அடிப்படையில், ஆணையம் ரங்கராஜுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அவர் ஆஜராகி விளக்கம் அளிப்பதன் மூலம் விசாரணை முன்னெடுக்கப்படும் எனத் தெரிகிறது. வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளதாகவும், போலீஸ் துணை ஆணையர் அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றப் பிரிவில் விசாரிக்கப்படுவதாகவும் தகவல்கள் உள்ளன.

இந்தச் சர்ச்சை ரங்கராஜின் தொழில்முறை வாழ்க்கையையும் பாதித்துள்ளது. அவரது கேட்டரிங் நிறுவனம் மற்றும் ஜாயின் வணிக நிறுவனங்கள் ரூ.12 கோடி இழப்பை சந்தித்ததாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ரங்கராஜின் முதல் திருமணம் மற்றும் இரண்டாவது திருமண சர்ச்சைகள் கடந்த மாதிரி சமூக ஊடகங்களில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்த விஷயத்தில் மகளிர் ஆணையத்தின் நடவடிக்கை பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. ரங்கராஜ் ஆஜரான பிறகு விசாரணை முடிவுகள் என்னாகும் என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: ரெட் ஹாட் உடையில் கவர்ச்சியூட்டும் நடிகை திவ்யபாரதி...!