விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான சின்னத்திரை நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன், தற்போது பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான புகாரால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திருநங்கை ஒருவர் அளித்த புகாரில், நாஞ்சில் விஜயன் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, கடந்த ஐந்து ஆண்டுகளாக காதல் உறவில் இருந்ததாகவும், பாலியல் ரீதியாகப் பயன்படுத்தி ஏமாற்றிவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்தப் புகார், பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாஞ்சில் விஜயன், “கலக்கப்போவது யார்”, “வள்ளி திருமணம்” போன்ற நிகழ்ச்சிகளில் தனது நகைச்சுவை மற்றும் பெண் கெட்டப்பில் நடிப்பால் புகழ் பெற்றவர். 2023ஆம் ஆண்டு மரியா என்பவரை திருமணம் செய்த இவருக்கு, சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், திருநங்கை தனது புகாரில், நாஞ்சில் விஜயனின் குடும்பத்தினருக்கு தங்களது உறவு தெரிந்திருந்ததாகவும், ஆனால் அவரது திருமணத்திற்குப் பிறகு தன்னை ஒதுக்கியதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் மீண்டுமா..!! ராப் பாடகர் வேடன் மீது மேலும் 2 பெண்கள் பாலியல் புகார்..!!
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய திருநங்கை, நான் வில்லிவாக்கம் வீட்டில் தனியாகத்தான் வசித்து வந்தேன். அந்த வீட்டிற்கு நாஞ்சில் விஜயன் எப்போதும் வந்து செல்வார். நாங்கள் இருவரும் காதலிப்பது அவர்களுடைய குடும்பத்திற்கு நன்றாகவே தெரியும். அவருக்கு திருமணமாவதற்கு முன்பு வரை, அவரின் குடும்பத்தினர் என்னிடம் நன்றாகத்தான் பேசி வந்தார்கள். ஆனால், அவருக்கு திருமணமானதும், என்னிடம் யாருமே பேசுவது இல்லை. என்னை ஒதுக்கிவிட்டார்கள்.
திருமணமான பிறகும் என்னுடன் பழகிக்கொண்டு தான் இருந்தார். கடந்த ஆறு மாதத்துக்கு முன் நாங்கள் இருவரும் ரெசாட் சென்று இருந்தோம். அதன் பின் திடீரென ஒரு நாள், வீட்டில் அடிக்கடி சண்டை வருகிறது. குழந்தை இருக்கிறது. இதற்கு மேல் நாம் பழக வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இதனால், நான் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். நான் திருநங்கை என்பதை தெரிந்துதான், என்னை காதலித்தார். ஆனால், இப்போது என்னை திருநங்கை என்ற காரணத்தை காட்டு ஒதுக்கும்போது மனம் மிகவும் வேதனை அடைகிறது என்று கூறியுள்ளார்.
இதற்கு நாஞ்சில் விஜயன் தரப்பில், குற்றச்சாட்டு செய்தவரைத் தனக்குத் தெரியாது என மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2022ஆம் ஆண்டு சூர்யாதேவி என்ற பெண்ணின் புகாரின் அடிப்படையில், நாஞ்சில் விஜயன் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த புதிய புகார் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த சம்பவம், சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. நாஞ்சில் விஜயனின் எதிர்கால தொலைக்காட்சி திட்டங்கள் மற்றும் அவரது பொது இமேஜ் இந்த குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்படலாம் என கருதப்படுகிறது. மேலும், இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணை முடிவுகள் குறித்து பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: அழகில் பாரபட்சம் காட்டாத நடிகை தமன்னா..! சூப்பர் ஹிட் போட்டோஸ் ரிலீஸ்..!