வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தொலைக்காட்சி

சரக்கால் சிக்கிய வெங்கடேஷ்… வேட்டையாட தயாரான சண்முகம்! அண்ணா சீரியலின் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா சீரியலின் இன்றைய அப்டேட்.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பேரணிக்கு வெங்கடேஷ் மீது சந்தேகம் எழுந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, கோவிலுக்கு வந்த சண்முகம் என் தங்கச்சி மீதான களங்கத்தை போக்கணும்.. யார் இப்படி பண்ணது என்பதை கண்டு பிடிக்கணும், எனக்கு ஒரு வழியை காட்டு என முருகனிடம் வேண்டுகிறான். 

மறுபக்கம் பரணி வெங்கடேஷ் மீது சந்தேகப்பட்டு அவனை பின்தொடர்ந்து வந்த நிலையில் முகமூடி அணிந்து முகத்தை மூடியபடி சரக்கு வாங்கி கொண்டு அந்த டீ கடையில் வேலை செய்தவனை சந்திக்கிறான். இதனால் இது அனைத்தும் வெங்கடேஷின் வேலை என்பது தெரிய வருகிறது. 

உடனே சண்முகம் மற்றும் முத்துபாண்டிக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி உடனே இங்கு வர சொல்கிறாள். இது எதுவும் தெரியாத வெங்கடேஷ் சாதாரணமாக வீட்டிற்கு சென்று விடுகிறான். இசக்கிக்கு போன் செய்து வெங்கடேஷை வெளியே விடாதீங்க என்று சொல்கிறாள். 

இதையும் படிங்க: ரத்னாவுக்காக ஷண்முகம் எடுத்த சபதம்! வெங்கடேஷ் சிக்க போவது எப்படி? அண்ணா சீரியல் அப்டேட் !

வெங்கடேஷ் வீட்டில் சாதாரணமாக இருக்க சண்முகத்தின் தங்கைகள் அவனை வெளியே விட கூடாது என கவனமாக இருக்க வெங்கடேஷ்க்கு சந்தேகம் வந்து வீட்டில் இருந்து தப்பிக்க திட்டம் போடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

இதையும் படிங்க: இசக்கியிடம் சிக்கிய வெங்கடேஷ்; அசிங்கப்பட போகும் ரத்னா! இன்றைய அண்ணா சீரியல் அப்டேட்!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी