கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தில் இருந்து வந்த தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது நகை வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய வர்த்தகத்தின் படி, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,920 ரூபாய்க்கும், சவரன் 71,360 ரூபாய்க்கும் விற்பனையானது.
இதையும் படிங்க: இன்று சற்று உயர்ந்த தங்கம் விலை... எவ்வளவு தெரியுமா..?
தங்கம் விலை நிலவரம் (02/06/2025):
வாரத்தின் முதல் நாளான இன்றைய நிலவரப்படி, (திங்கள்கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 30 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 950 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து 71 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது மக்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 33 ரூபாய் அதிகரித்து 9 ஆயிரத்து 764 ரூபாய்க்கும், சவரனுக்கு 264 ரூபாய் அதிகரித்து 78 ஆயிரத்து 112 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலை நிலவரம்:
தங்கம் விலை அதிகரித்த நிலையில் வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்து, ஒரு கிராம் 111 ரூபாய்க்கும், கிலோவிற்கு ரூ.100 அதிகரித்து, ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

உயர்வுக்கான காரணம் என்ன?
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதனால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் உலக நாடுகள் மத்தியில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற நிலைமை, போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து இருப்பதே தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தொடர் சரிவில் தங்கம் விலை.. இல்லத்தரசிகள் ஹேப்பியா ஹேப்பி..!