2025ம் ஆண்டு, உலகப் பொருளாதாரம் ஒரு அமைதியற்ற கடலில் மிதக்கும் போல் தோன்றுகிறது. மனித சமூகத்தின் பழமையான பாதுகாப்பு அடையாளமாக விளங்கும் தங்கம் வரலாற்று ரீதியாக இல்லாத உச்சங்களைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. ஜனவரி மாதத்தில் ஒரு அவுன்ஸுக்கு சுமார் 2,658 அமெரிக்க டாலர்களாகத் தொடங்கிய விலை, அக்டோபர் 24 வரை 4,381 டாலர்களைத் தாண்டி நிலைக்கிறது.
இது ஆண்டு முழுவதும் சுமார் 57% உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில், சென்னை போன்ற நகரங்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரு லட்ச ரூபாயை நெருங்கி வருகிறது. சற்று ஏற்ற இறக்கமான சூழல் இருந்தாலும், கடந்த சில மாதங்களில் உச்சத்தை தொட்டுள்ளது. தங்கத்தின் விலை உயர்வு, 2025ல் தொடங்கியதில்லை.

இது கடந்த சில ஆண்டுகளின் தொடர்ச்சி. உலகப் பணப்பொருளாதார சபைக் கூறுகிறது போல், 2025 முதல் காலாண்டில் மட்டும் மத்திய வங்கிகள் 244 டன்கள் தங்கத்தைச் சேர்த்துள்ளன. இந்த நிலையில் வரும் காலங்களில் தங்க விலை 2 லட்சம் வரை உயரும் என அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: அடடா..!! கேக்கும்போதே எவ்ளோ சந்தோஷம்..!! இன்றைய கோல்டு ரேட் என்ன..??
சர்வதேச அளவில் தங்கம் ஒரு அவுன்ஸ் 4100 அமெரிக்க டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சிறிதளவு வீழ்ச்சி கண்டிருந்தாலும், 2028ல் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 8000 அமெரிக்க டாலர்கள் வரை உயரும் என JP MORGAN என்ற நிறுவனம் கணித்திருக்கிறது.
இதன் அடிப்படையில், இந்தியாவில் ஒரு சவரன் தங்கம் 2 லட்ச ரூபாய் வரை உயரலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன. தங்கமே வேண்டாம் என மக்கள் தலை தெறித்து ஓடும் அளவுக்கு தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இறங்குமுகத்தில் தங்கம் விலை..!! அப்பாடா..!! நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்..!!