தங்க நகைகள் இந்திய பெண்களின் இதயத்தில் என்றும் சிறப்பான இடம் பிடித்தவை. பாரம்பரிய மதிப்பு மற்றும் நவீன ஃபேஷனின் கலவையாக, தங்க நகைகள் பெண்களின் அழகை மிளிரச் செய்யும் முக்கிய அணிகலனாக உள்ளன. தற்போதைய காலகட்டத்தில், பெண்கள் தங்களின் தனித்துவமான பாணி மற்றும் தேவைகளுக்கு ஏற்ப பலவிதமான தங்க நகைகளை விரும்புகின்றனர். தங்க நகை விலை ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி அதை வாங்க மட்டும் பெண்கள் மறப்பதில்லை. எவ்வளவு விலை ஏறினாலும் அதை வாங்க ஒரு கூட்டம் உள்ளது. இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் தங்கம் வாங்குவது கனவில் தான் என்று இருக்கின்றனர் நடுத்தர மக்கள்.
இந்நிலையில் இந்திய தங்கச் சந்தையில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இன்றைய விலை உயர்வு. 22 கேரட் தங்கம் ஒரு சவரன் (8 கிராம்) ரூ.1,00,120-ஐ தொட்டுள்ளது, இது வரலாற்றில் முதல் முறையாக 1 லட்ச ரூபாய் அடையாளத்தைத் தாண்டியுள்ளது. இந்த உயர்வு, உலகளாவிய பொருளாதார நிச்சயமின்மை, டாலரின் வலிமை குறைவு மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக ஏற்பட்டுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
காலை வர்த்தகத்தில் தொடங்கிய இந்த உயர்வு, மாலை வரை தொடர்ந்து தங்க விலை புதிய உச்சத்தை எட்டியது. காலையில் சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.99,680-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது மாலையில் மேலும் அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,00,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று மாலை ஒரு சவரன் ரூ. 440 அதிகரித்து ரூ.1,00,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலையில் ஒரு கிராம் ரூ.90 அதிகரித்த நிலையில் மாலையில் மேலும் ரூ.55 அதிகரித்து ரூ.12,515-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை வரலாற்றில் புது உச்சம் தொட்டு இருப்பது நகை பிரியர்கள் மேலும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

தங்கம் விலையை போன்றே வெள்ளி விலையும் காலை, மாலை என இரு வேளைகளிலும் உயர்ந்துள்ளது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக வெள்ளி விலை உயர்ந்துள்ள நிலையில் இன்று மட்டும் கிராமுக்கு ரூ.5 அதிகரித்துள்ளது. காலையி; ரூ.3 உயர்ந்த நிலையில், மாலையிலும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 அதிகரித்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதனால் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.215-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை உயர்வுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
உலக அளவில், அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர், ரஷ்யா-உக்ரைன் மோதல் போன்ற புவிசார் பிரச்சினைகள் தங்கத்தை பாதுகாப்பான முதலீட்டு சொத்தாக மாற்றியுள்ளன. இந்தியாவில், ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் பண்டிகை கால தேவை அதிகரிப்பு ஆகியவை விலையைத் தூண்டியுள்ளன.
இதையும் படிங்க: வாரத்தின் முதல் நாளே ஷாக்..!! ஒரு லட்சத்தை நெருங்கும் ஒரு சவரன்.. எகிறிய தங்கம், வெள்ளி விலை..!!
இந்த உயர்வு சாமானிய மக்களை எவ்வாறு பாதிக்கும்?
திருமண சீசன் தொடங்கவுள்ள நிலையில், நகை வாங்குவோர் பெரும் சிரமத்தை எதிர்கொள்ளலாம். அதேசமயம், தங்க முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஆண்டு ஜனவரியில் ஒரு சவரன் ரூ.60,000-ஆக இருந்தது, இப்போது 67% உயர்வு கண்டுள்ளது.
அரசு மற்றும் ரிசர்வ் வங்கி இதை எவ்வாறு கையாளும்?
தங்க இறக்குமதி வரியை அதிகரிப்பது அல்லது உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனை உயர்வு, தங்கத்தின் மதிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. வருங்காலத்தில் விலை இன்னும் உயரலாம் என்பதால், முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: தடாலடியாக குறைந்த வெள்ளி விலை..!! அப்போ தங்கம்..?? நகைப்பிரியர்கள் நிம்மதி..!!