வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தங்கம் மற்றும் வெள்ளி

கொஞ்சம் நிம்மதியாகிக்கோங்க மக்களே.. சற்று குறைந்த தங்கம் விலை..!

தாறுமாறாக அதிகரித்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது நகை வாங்க காத்திருப்போருக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. 

நேற்றைய வர்த்தகத்தின் படி, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,975 ரூபாய்க்கும், சவரன் 71,800 ரூபாய்க்கும் விற்பனையானது.

இதையும் படிங்க: இனி நகை வாங்குவது கனவு தான்…! ஏறுமுகத்தில் தங்கம் விலை.. கலக்கத்தில் இல்லத்தரசிகள்..!

தங்கம் விலை நிலவரம் (23/05/2025): 

இன்றைய நிலவரப்படி, (வெள்ளி கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 35 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 940 ரூபாய்க்கும், சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து 71 ஆயிரத்து 520 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. இருப்பினும் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது மக்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 38 ரூபாய் குறைந்து 9 ஆயிரத்து 753 ரூபாய்க்கும், சவரனுக்கு 304 ரூபாய் குறைந்து 78 ஆயிரத்து 024 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

வெள்ளி விலை நிலவரம்:

தங்கம் விலை குறைந்தது போல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 1 ரூபாய் குறைந்து 111 ரூபாய்க்கும், கிலோவிற்கு ரூ.1000 குறைந்து ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

சரிவுக்கான காரணம் என்ன?

அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்துள்ளது.

இதையும் படிங்க: தடாலடியாக உயர்வு.. காலையிலேயே தலைசுற்ற வைக்கும் தங்கம் விலை..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी