தோல் நோய்கள் வர முக்கியமான காரணமே நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை சில உணவுகளாலோ அல்லது சில பொருட்களாலோ தூண்டப்படுவது தான். அவ்வாறு தூண்டப்படு்ம் போது அது தோலில் அரிப்புகள், அலர்ஜிகளை ஏற்படுத்தி எச்சரிக்கையை தெரிவிக்கிறது. தூக்கத்திலும் சரி, நல்ல நினைவில் இருக்கும் போதும் சரி நம்மை கட்டுப்படுத்தாமல் சொரிந்து விடுவோம். இது நாளடைவில் மிகப் பெரிய நோயாக மாறி உடல் முழுக்க பரவிவிடும். எந்தெந்த உணவுகளை நம் உடல் ஏற்றுக் கொள்கிறது என்பதை கண்டறிவது மிகவும் அவசியம். ஒவ்வொரு உணவையும் நாம் தனி தனியே உட்கொண்டு பரிசோதிக்க வேண்டும். இது ஒரு நபருக்கும் மற்றோரு நபருக்கும் மாறுபடும். அதுபோல எந்தெந்த சூழ்நிலையில் அரிப்பு ஏற்படுகிறது என்பதையும் கண்டறிய வேண்டும். உணவுப் பொருட்களில் உள்ள ஏதோ ஒரு மூலக்கூறு நம் நோய் எதிர்ப்பு சக்திக்கு மாறாக செயல்பட்டு ஒவ்வாமை ஏற்பட காரணமாக உள்ளது.

பால் பொருட்கள் ;
பாலில் லாக்டோஸ் என்கிற சக்கரை சத்தை உடல் உரிய லாக்டேஸ் என்கிற வேதிப் பொருளை உற்பத்தி செய்யும். இது பிறந்த குழந்தைகளுக்கு இயற்கையாகவே மிகுதியாக இருக்கும். எனவே, பால் செரிமானம் ஆகிவிடும். ஐந்து வயதுக்கு மேல் சிலருக்கு பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள் ஜீரணிக்க முடியாமல் போனால் அது வாந்தி, வயிற்றுப போக்கு, தோல் அலர்ஜியை ஏற்படுத்தும். இதனை தான் லாக்டோஸ் இண்டோலரன்ஸ் என்கிறார்கள். பெரும்பாலும் பால், தயிர், மோர், சீஸ், பன்னீர் மற்றும் பால் சேர்த்து செய்த உணவுகள், இனிப்புப் பண்டங்கள் சாப்பிடும் பொது இது ஏற்பட வாய்ப்புண்டு. .
இதையும் படிங்க: முகத்திலுள்ள கரும்புள்ளிகள் நீங்க உருளைக்கிழங்கு போதும்...இது சாத்தியமா?

நட்ஸ் வகைகள் ;
நாம் உட்கொள்ளும் உணவுகளில் நிக்கல் மற்றும் கோபால்ட் என்ற வேதிப்பொருட்கள் இருந்தால் அது அழற்சியை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் வாந்தி, வயிற்றுப்போக்கு, உடல் சிவந்து போவது, தடிப்புகள், அரிப்புகள் ஏற்படும். எனவே நிக்கல், கோபால்ட் நிறைந்துள்ள நட்ஸ் வகைகள், பாதாம், நிலக்கடலை, வால்நட்ஸ் தவிர்ப்பது நலம் பயக்கும். சோயாவிலும் இது உள்ளதால் அதனை சோதித்து பயன்படுத்திடுவது நல்லது.

க்ளுட்டன் உணவுகள்;
க்ளுட்டன் பொருட்கள் முழு தானியங்களில் நிறைந்துள்ளது குறிப்பாக கோதுமையில் அதிகமாக உள்ளது. இது தோல் அரிப்பு, எக்ஸீமா, காய்ச்சல், தோல் சிவந்து போகுதல் உள்ளிட்ட பாதிப்புகள் வரும் வாய்ப்பு உண்டு. எனவே கோதுமை மற்றும் கோதுமை சார்ந்த உணவுப் பொருட்களான மைதா, ஆட்டா, ரவை, பிரட் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. சில நேரங்களில் சிறு தானியங்களான சாமை, குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு கூட ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இதிலும் சிறிய அளவிலான க்ளுட்டன் உள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.
பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சமைத்த உணவுகள்;
நூடுல்ஸ், பிஸ்கட், ஊறுகாய், பதப்படுத்திய மீன், இறைச்சி, டின்னில் அடைக்கப்பட்ட சோடா, குளிர் பானங்கள் ஆகியவற்றில் சேர்க்கப்படும் ரசாயங்கள் உணவை கெட்டுப் போகாமல் அப்படியே வைத்திருக்கும் பண்பு கொண்டது. இந்த பதப்படுத்தும் ரசாயனங்கள் நம் உடலில் அழற்சியை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம். எனவே, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. அப்பளம், வடகம், தோல் அரிப்பை ஏற்படுத்தி அலர்ஜியை தூண்டி விடுகிறது.

காய்கறிகள், அசைவ உணவுகள், கருவாடு ;
கத்திரிக்காய், கருணைக்கு கிழங்கு, மொச்சை பயிறு இவை மூன்று காய்கறிகளும் தோல் சார்ந்த பிரச்சினைகளை தூண்டிவிட அதிக வாய்ப்பு உண்டு. பிராய்லர் கோழி, ஆட்டிறைச்சி, அதன் உறுப்புக்களான குடல், ஈரல், கல்லீரல் மீன், கடல் சார்ந்த உணவுகள், கருவாடு தோல் நோயை அதிகரிக்கும் தன்மை கொண்டது.
வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ள ஆரஞ்சு, நெல்லிக்காய், ஆப்பிள், கொய்யா தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. திரிபலா சூரணம் காலை உணவுக்கு பின் சூடான தண்ணீரில் 1 தேக்கரண்டி சாப்பிட்டு வருவது ரத்தத்தை சுத்தப்படுத்த உதவும். கீரைகளில் சில வகை அரிப்பு ஏற்படுத்த வாய்ப்புண்டு ஆகையால் அதனையும் சோதனை முறையில் சாப்பிட்டு பார்த்து தவிர்ப்பது நல்லது.
இதையும் படிங்க: ஆவாரம் பூவில் இத்தனை நன்மைகளா? - எப்படி பயன்படுத்தலாம்