திருப்பதி திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் (வைகுண்ட துவாரம்) தரிசனத்திற்கு டிக்கெட்டுகள் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த ஆண்டு விழா டிசம்பர் 30, 2025 முதல் ஜனவரி 8, 2026 வரை 10 நாட்கள் நடைபெறும். குறிப்பாக, டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் சொர்க்கவாசல் தரிசனம் மிகுந்த பக்தர்கள் கூட்டத்துடன் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேவஸ்தானத்தின் அறிவிப்பின்படி, சொர்க்கவாசல் திறப்பு டிசம்பர் 30 காலை 3 மணிக்கு தொடங்கும். ஏகாதசி திதி அன்று காலை 7:50 மணிக்கு தொடங்கி, அடுத்த நாள் காலை 5 மணி வரை நீடிக்கும். இதனைத் தொடர்ந்து, ஜனவரி 1 அன்று சக்கர ஸ்னானம் காலை 5:30 முதல் 6:30 வரை நடைபெறும். மொத்தம் 8 லட்சம் பக்தர்களுக்கு தரிசன வாய்ப்பு வழங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 30, 31 தேதிகளில் தினசரி 1,000 பேரும், ஜனவரி 1 முதல் 8 வரை தினசரி 2,000 பேரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
இதையும் படிங்க: வைகுண்ட ஏகாதசி: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு..!! எப்போ தெரியுமா..??
டிக்கெட் முறைமை குறித்து விளக்கமளித்த தேவஸ்தான அதிகாரிகள், எலக்ட்ரானிக் லக்கி டிப் (DIP) முறையில் டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1 தேதிகளுக்கான டோக்கன்கள் ஆன்லைனில் வழங்கப்படும். இதற்கான பதிவு டிசம்பர் 25 காலை 10 மணி முதல் 27ம் தேதி வரை நடைபெறும். உள்ளூர் பக்தர்களுக்கு ஜனவரி 6 முதல் 8 வரை தினசரி 5,000 டோக்கன்கள் வழங்கப்படும், இதில் திருப்பதி, சந்திரகிரி, ரேணிகுண்டா பகுதிகளுக்கு 4,500 மற்றும் திருமலைக்கு 500 என பிரிக்கப்பட்டுள்ளது. இவை டிசம்பர் 10 அன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டன.
மேலும், ரூ.300 சிறப்பு நுழைவு டிக்கெட்டுகள் ஜனவரி 7 அன்று காலை 10 மணி முதல் மஹதி ஆடிட்டோரியத்தில் உள்ள இ-தரிசன் கவுண்டரில் வழங்கப்படும். இவை ஜனவரி 11 தரிசனத்திற்கானவை. டோனர் தரிசனத்திற்கு ரூ.1 கோடி அல்லது அதற்கு மேல் நன்கொடை அளித்தவர்களுக்கு தினசரி 125 இடங்கள், ரூ.1 லட்சம் முதல் 99 லட்சம் வரை நன்கொடை அளித்தவர்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இடங்கள் ஒதுக்கீடு. இவை டிசம்பர் 5 மாலை 5 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டன.
ஜனவரி 2 முதல் 8 வரை சர்வ தரிசனம் (இலவச தரிசன்) வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ்-2 வழியாக நேரடியாக அனுமதிக்கப்படும், ஆனால் காத்திருப்பு நேரம் 12 முதல் 24 மணி நேரம் அல்லது அதற்கு மேல் இருக்கலாம். இந்த காலகட்டத்தில் சிறப்பு தரிசனங்கள் (SED, SRIVANI) ரத்து செய்யப்பட்டுள்ளன. குழந்தைகள், முதியோர், ஊனமுற்றோர், ராணுவ வீரர்கள், என்ஆர்ஐகளுக்கான சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. விஐபி பிரேக் தரிசன் பிரோடோகால் அதிகாரிகளுக்கு மட்டும்.

டிசம்பர் 30 அன்று ஸ்ரீ மலையப்ப சுவாமி தங்க ரதத்தில் ஊர்வலம் நடைபெறும். பக்தர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான ttdevasthanams.ap.gov.in வழியாக டிக்கெட்டுகளை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பு பக்தர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது, ஆனால் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என தேவஸ்தானம் வலியுறுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி டிக்கெட்டுகள் இல்லாமல் வந்து பக்தர்கள் ஏமாற வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இனி ‘டீ’ன்னு சொல்லாதீங்க..!! FSSAI கொடுத்த விளக்கம் என்னனு தெரியுமா..??