பெண்கள் தங்கள் கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டி வரலக்ஷ்மி நோன்பு, காரடையான் நோன்பு எனப்பல்வேறு விரத முறைகளை பின்பற்றி வரும் அதே வேளையில் மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நோன்புக்கு சிறப்பு பலன்கள் உண்டு. மார்கழி மாதம் முடியும் தருவாயில் வரும் பௌர்னமியுடன் திருவாதிரை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளில் இந்த நோன்பு கடைபிடிக்கப்படும். நடராஜர் திருவுருவத்தில் காட்சித் தரும் அனைத்து திருத்தலங்களில் இந்த விழா கோலாகலமாக ஆருத்ரா தரிசனமாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசனம் திருவாதிரை நோன்புத் திருநாள் ஜன.13ம் தேதி நடைபெறுகிறது. திருவாதிரை கலி படையலுடன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெறும். திருவாதிரை கலிக்கு உள்ள கதையை நாம் இந்நாளில் அறிந்து கொள்வது சிவபெருமானின் அருளாசியை எளிதில் கிடைக்கச் செய்யும்.
இதையும் படிங்க: புதிய ஹீரோ கிளாமர் பைக் நல்ல மைலேஜுடன் அறிமுகம்.. விலை எவ்வளவு தெரியுமா?

திருவாதிரை களியும் நாம் அறிய வேண்டிய வரலாறும் ;
முன்னொரு காலத்தில் சிதம்பரதிலுள்ள பட்டினத்தார்களிடம் கணக்குப் பிள்ளையாக பணியாற்றிய சேந்தனார் ஒரு சிவ பக்தர் ஆவார். அவருக்கு திருமணமாகி மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தாலும் ஒரு கட்டத்தில் துறவறத்தை ஏற்று தன்னிடம் இருந்த சொத்துக்களை இல்லாததவர்களுக்கு பிரித்து கொடுத்து அனைத்தையும் துறந்து துறவி வாழ்க்கையை ஏற்றார்.
மிகவும் ஏழ்மையான வாழ்க்கை வாழத் தொடங்கிய சேந்தனார் விறகு வெட்டி அதில் வரும் பணத்தை வைத்து பிழைப்பு நடத்தி வந்தார். இருந்தாலும் கூட தினம் ஒரு சிவன் அடியாருக்கு உணவளித்து வருவதை அவர் தொடர்ந்து பின்பற்றி வந்தார்.
ஒரு நாள் விடாது பெய்த மழையால் விறகுகள் அனைத்தும் நனைய அதனை யாரும் வாங்க ஆள் இல்லாமல் விற்க முடியாமல் போயிற்று. இதனால் காய்கறி வாங்க வழியில்லாமல் போக அன்றைக்கு வெறும் கையுடன் வீட்டுக்கு வந்தார்.
ஏற்கனவே, சிவ பக்தையான இவரின் மனைவி நடந்ததை புரிந்து கொண்டு வீட்டில் எஞ்சியிருந்த உளுந்தை உடைத்து களி செய்துள்ளார். ஆனால், துளியும் சமாதானம் ஆகாமல் இருந்த சேந்தனார் இந்த களியை சாப்பிட யார் வருவார்கள்...? என எண்ணி புலம்பிக் கொண்டிருந்தார். அப்போது விடாது பெய்த மழைக்கு ஒதுங்க வந்த ஒரு சிவனடியார் தனக்கு பசிக்கிறது...ஏதாவது சாப்பிட கொடுப்பீர்களா?...என்று கேட்க, வந்தது யார் என்று அறியாத சேந்தனார் இன்புற்று அந்த களியை பரிமாறியுள்ளார்.

இதனை சாப்பிட்ட அவர் இது போன்றதொரு களியை தன் வாழ்நாளில் இது வரை சாப்பிட்டதேயில்லை என்று மனதார வாழ்த்தி, மீதமிருந்த களியையும் கேட்டு வாங்கிச் சென்றார். சிவனடியார் உருவத்தில் வந்தது சிவபெருமான் என்று சேந்தானாருக்கு அப்போது தெரியாது. இதனை உலக அறிய செய்ய நினைத்த சிவபெருமான், அன்றைய தினம் இரவு சிதம்பரம் பகுதியை ஆட்சி செய்து வந்த அரசனின் கனவில் தோன்றி தான் களி உண்ணுவது போன்றதொரு காட்சியை காட்டியுள்ளார்.
மறுநாள் விடியற்காலையில் சிதம்பரம் கோயிலைத் திறந்த அர்ச்சகரோ மிகப் பெரிய காட்சியைக் கண்டு அதிர்ந்து போனார். அவர் பார்த்த காட்சி என்னவென்றால், நடராஜ பெருமானின் வாய் மற்றும் தரை பகுதிகளில் களி சிதறிகடந்த காட்சி.

இது குறித்த செய்தி ஊர் முழுவதும் பரவ ஆரம்பிக்க அங்கே அனைவரும் கூடினர். சேந்தனாரும் அரசரும் வர, இது குறித்து விசாரணைத் தொடங்கியது. அப்போது தன் வீட்டில் தான் களி செய்ததாகவும் அதனை ஒரு சிவனடியாருக்கு வழங்கியதாகவும் சேந்தனார் சொல்ல அரசர் மெய்சிலிர்த்துப் போனார். இப்போது தான் அரசருக்கு அவர் கண்ட கனவு குறித்து புரிந்தது. சிவபெருமானே சேந்தனாரின் பக்திக்கு களி வாங்கி சாப்பிட்டதை எண்ணிய அரசர், சேந்தனார் காலில் விழுந்து வணங்கி தொழுதார். அன்றிலிருந்து சேந்தனார் புகழ் ஊர் முழுக்க பரவத் தொடங்கியது. ஒன்றுமே அறிந்திடாத சேந்தனாரோ,தன் மேல் இறைவன் வைத்த கருணையை எண்ணி கண்ணீர் ததும்ப வேண்டி நின்றார். இவ்வாறு தான், ஒவ்வொரு திருவாதிரை பொழுதும் நோன்பு வைத்து களி செய்து சிவபெருமானுக்கு படைப்பது வழக்கமாக பின்பற்றபட்டது.
சிவபெருமான் நடராஜ கோலத்தில் காட்சித் தரும் அனைத்து கோவில்களிலும் ஆருத்ரா தரிசனமாக கொண்டாப்படுகிறது.
இதையும் படிங்க: பணப்புழக்கம் அதிகரிக்கணுமா? படிகாரம் உதவியா இருக்கும்