அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கூட்டணி குறித்த கேள்விக்கு, அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், கூட்டணியை டெல்லியில் பாஜகவும், தமிழ்நாட்டில் EPS தான் முடிவு செய்வார் என்றார்.
OPS, TTV அண்ணாமலையை சந்தித்தது குறித்த கேள்விக்கு, தேர்தல் நேரங்களில் பாராட்டுவதும், விமர்சிப்பதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது என்பதை காட்டுகிறது. அவர் அவருக்கு தெரிந்த செய்தியை அவரவர் பாணியில் பாராட்டிக் கொள்கிறார்கள், இதை குற்றச்சாட்டாக சொல்ல முடியாது. அதிமுக பாஜக கூட்டணியை கண்டு ஆளும் திமுக நடு நடுங்கி போய் உள்ளது. தேர்தல் நேரங்களில் வரும் பாட்டுகளுக்கும், விமர்சனங்களுக்கும் பூதக்கண்ணாடி வைத்து தேதி பார்த்து அரசியல் காரணங்களை சொல்லிக் கொண்டிருக்க முடியாது.
எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் மக்களுக்கு சேவை செய்யும் கட்சிகள், ஒத்த கருத்துடைய கட்சிகள் அதிமுக பாஜக கூட்டணியில் இணைவதை உறுதி செய்யும் வகையில் தான் பொதுக்குழு தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிச்சயமாக அது நிறைவேறும், தை பிறந்தால் வழி பிறக்கும்.
இதையும் படிங்க: "போதும்... போதும்....லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது..." - ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த ஆர்.பி.உதயக்குமார்...!
விஜய் கூட்டணி வருவார் என்று நம்புகிறீர்களா? என்ற கேள்விக்கு, யார் யார் கூட்டணிக்கு வருவார்கள் என்று ஜாதகம் பார்க்க முடியாது. திமுக வை எதிர்ப்பவர்கள் அதிமுகவில் EPS தலைமையிலான கூட்டணியில் இணைந்தால் மக்கள் அவர்களை வரவேற்க தயாராக உள்ளார்கள். விஜய்யை முதலவராக்குவேன் என KAS தெரிவித்தது குறித்த கேள்விக்கு, அதனை நான் பார்க்கவில்லை என பதிலளித்தார்.
செங்கோட்டையன் வந்த பின் தவெக வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, னநாயக நாட்டில் தேர்தல் திருவிழாவின் போது வருவார்கள், போவார்கள். யாரையும் வர வேண்டாம் என்று சொல்ல முடியாது. சாமி யாருக்கு வரம் தரப்போகிறது என மக்கள் முடிவு செய்வார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றார்.
பாஜக 80 தொகுதிகளை உறுதி செய்து விட்டதா என்ற கேள்விக்கு, தலைமை செய்வதை தொண்டர்கள் வரவேற்க தான் முடியும். அது குறித்த விவாதிக்க முடியாது, பொறுத்திருந்து பாருங்கள்.
2026 தேர்தலில் திமுக எதிரியா ? தவெக எதிரியா? என்ற கேள்விக்கு, அதிமுக ஒரே எதிரி திமுக, திமுக, திமுக தான். 54 வருடங்களாக எங்களுக்கு எதிரி திமுக தான். ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும், ஒரு லட்சம் உதயநிதி ஸ்டாலின் வந்தாலும் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும் என்றார்.
இதையும் படிங்க: “சங்கிகளின் பருப்பு தமிழ்நாட்டில் வேகாது” - எடப்பாடி, அமித் ஷா பற்றி ஏடாகூடமாக வார்த்தையை விட்ட உதயநிதி ஸ்டாலின்...!