• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 09, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஜெலென்ஸ்கி ஆட்சியைக் கவிழ்க்க சதி..! உக்ரைனுக்கு ரகசியக் குழுவை அனுப்பிய டிரம்ப்..!

    அமெரிக்க அதிபர்  டிரம்ப், நான்கு வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் ஜெலென்ஸ்கியின் பதவியை பறிக்க எதிர் கட்சி தலைவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர்.
    Author By Thiraviaraj Thu, 06 Mar 2025 17:42:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    trump-plots-zelensky-removal-us-officials-in-ukraine

    உக்ரைன் அதிபர் பதவியில் இருந்து  ஜெலென்ஸ்கியை நீக்க டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார். டிரம்ப் உத்தரவுப்படி அமெரிக்க அதிகாரிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இதற்காக டிரம் அமெரிக்காவை சேர்ந்த 4 வெளியுறவுக் கொள்கை நிபுணர்களை உக்ரைனுக்கு அனுப்பி வைத்துள்ளார். 

    உக்ரைனின் எதிர்க்கட்சித் தலைவரும், இரக்கமற்ற லட்சியவாதியுமான முன்னாள் பிரதமரான யூலியா திமோஷென்கோவுடன், டிரம்ப் அனுப்பி வைத்த தூததர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    ஜெலன்ஸ்கியை உக்ரைன் அதிபர் பதவியிலிருந்து நீக்கும் முயற்சியில் அமெரிக்க அதிபர்  டிரம்ப், நான்கு வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் ஜெலென்ஸ்கியின் பதவியை பறிக்க எதிர் கட்சி தலைவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர்.

    Trump

     மூன்று உக்ரைன் எம்.பி-க்கள் மற்றும் ஒரு அமெரிக்க அதிகாரியின் தகவல்படி, டிரம்பின் வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள், உக்ரைன் முன்னாள் பிரதமர், இரக்கமற்ற லட்சியம் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் யூலியா டைமோஷென்கோவர், ஜெலென்ஸ்கியால் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதியாக இருந்த பெட்ரோ பொரோஷென்கோவின் கட்சியின் மூத்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் ட்ரம்ப் அனுப்பி வைத்த வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள்.

    இதையும் படிங்க: 'பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் கொன்று விடுவேன்'..! ஹமாஸுக்கு டிரம்ப்பின் கடைசி எச்சரிக்கை

    உக்ரைனில் உடனே ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியுமா? என்பது குறித்து ஆழமாக விவாதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் இராணுவச் சட்டத்தின் கீழ் இருப்பதால், நாட்டின் அரசியலமைப்பின்படி அங்கு தேர்தல் நடந்த்துவது தாமதமாகி வருகிறது. தேர்தல்களை நடத்துவதை விமர்சிப்பவர்கள், அவை குழப்பமானதாகவும், ரஷ்யாவுக்கு சாதகமாகவும் இருக்கலாம் என்றும், போரில் பணியாற்றக்கூடிய அல்லது வெளிநாடுகளில் அகதிகளாக வசிக்கும் பல லட்சம் வாக்காளர்கள் வாக்காளர்கள் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

    Trump

    போர் தந்த அழுத்தம், பரவலான ஊழல் குறித்த பொதுமக்களின் விரக்தி காரணமாக ஜெலென்ஸ்கி  வாக்குகளை இழப்பார் என்று டிரம்ப் உதவியாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். உண்மையில், ஜெலென்ஸ்கி மீதான கணிப்புகள், மதிப்பீடுகள் பல ஆண்டுகளாக குறைந்து வருகின்றன. இருப்பினும் கடந்த வாரம் ஓவல் அலுவலக சண்டையைத் தொடர்ந்து அவை உயர்ந்துள்ளன. அப்போது உக்ரைன்  ஜனாதிபதியை டொனால்ட் டிரம்ப், துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸால் திட்டப்பட்டு மிரட்டி அனுப்பினர். இதன் பிறகான அனுதாபத்தால் ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் ஜெலென்ஸ்கி இன்னும் வசதியாக முன்னிலையில் இருப்பதைக் காட்டுகிறது.

    அமெரிக்காவிலிருந்து அதிகாரப்பூர்வமாக 'உக்ரைனின் உள்நாட்டு அரசியலில் டிரம்ப் தலையிடவில்லை' என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த வாரம், வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தங்களது அதிபர் டிரம்ப்,  "உக்ரைன் அரசியலில் ஈடுபடவில்லை" என்று மறுத்தார். டிரம்ப் விரும்புவது அமைதிக்கான ஒரு கூட்டாளியை மட்டுமே என்று கூறினார்.

    Trump

    ஆனால் டிரம்ப் மற்றும் அவரது அதிகாரிகளின் நடத்தை இதற்கு நேர்மாறாக இருப்பதைக் காட்டுகிறது. ஜெலென்ஸ்கியை "தேர்தல்கள் இல்லாத சர்வாதிகாரி" என்று டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அதே நேரத்தில் தேசிய புலனாய்வு இயக்குனர் துளசி கப்பார்ட், ஜெலென்ஸ்கி தேர்தலை ரத்து செய்ததாக பொய்யாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    ஆனால், டிரம்ப் தரப்பு தேர்தலில் ஜெலென்ஸ்கியை மூழ்கடிக்கும் என்று நம்பினாலும், அவர் டைமோஷென்கோ, போரோஷென்கோவை விட மிகவும் பிரபலமாகி விட்டார். வெள்ளை மாளிகையில் நடந்த மிரட்டல் சந்திப்புக்குப் பிறகு இந்த வாரம் இங்கிலாந்து கருத்துக்கணிப்பாளர் சர்வேஷன் நடத்திய கருத்துக்கணிப்பில், 44 சதவீதம் பேர் ஜெலென்ஸ்கியை ஜனாதிபதி பதவிக்கு ஆதரிப்பதாகக் கூறியுள்ளனர்.

    அவரது நெருங்கிய போட்டியாளர், ஜெலென்ஸ்கியை விட 20 சதவீதத்திற்கும் அதிகமான புள்ளிகள் பின்தங்கியுள்ளார். முன்னாள் இராணுவத் தளபதியான வலேரி ஜலுஷ்னி, தற்போது இங்கிலாந்துக்கான    உக்ரைனின் தூதராக உள்ளார். சாக்லேட் மன்னர் என்று அழைக்கப்படும் போரோஷென்கோவை 10 சதவீதம் பேர் மட்டுமே ஆதரித்துள்ளனர். அவர் தனது மிட்டாய் வணிக சாம்ராஜ்யத்தால் சாக்லேட் மன்னர் என்று அழைக்கப்படுகிறார். டைமோஷென்கோ வெறும் 5.7 சதவீத ஆதரவை மட்டுமே பெற்றார்.

    Trump

    தற்காலிக போர் நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட்ட பின்னர், ஆனால் முழு அளவிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாகத் தொடங்குவதற்கு முன்பு, ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதே, பின்னோக்கி விவாதிக்கப்படும் அனைத்துத் திட்டங்களுக்கும் முக்கியமாகும். பல ஆண்டுகளாக ஜெலென்ஸ்கியை அகற்ற விரும்பிய கிரெம்ளின், முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான யோசனையையும் முன்மொழிகிறது.

    கியேவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோவைப் போலவே, டைமோஷென்கோவும், போரோஷென்கோவும் போர் முடிவதற்குள் தேர்தல்களை நடத்துவதைப் பகிரங்கமாக எதிர்த்துள்ளனர். இருப்பினும்கூட, “போரோஷென்கோவின் ஆதரவாளர்களும், யூலியாவும் டிரம்ப் தரப்பினருடன் பேசுகிறார்கள். தங்களை டிரம்பிற்கு ஏற்றவர்களாக நிலைநிறுத்திக் கொள்கிறார்கள். "ஜெலென்ஸ்கி ஒப்புக்கொள்ளாத பல விஷயங்களுக்கு அவர்கள் சம்மதிக்கிறார்கள்” என்று ஒரு உயர் குடியரசுக் கட்சியின்  பெயர் சொல்ல விரும்பாத வெளியுறவுக் கொள்கை நிபுணர்  கூறுகிறார்.

    இப்போதைக்கு, டிரம்பின்  அமெரிக்காவுடன் முழுமையாக உடன்படாவிட்டால், ஜெலென்ஸ்கி ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். உக்ரைனின் பெரிய சலுகைகளை உள்ளடக்கியிருந்தாலும், போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்டத்தை அவர்கள் செயல்படுத்தவில்லை.

    Trump

    கடந்த வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் நடந்த வெடித்த மோதலுக்குப் பிறகு, உக்ரைன் அதிபரின் உள்நாட்டு அரசியல் எதிரிகள் அமெரிக்காவுடனான உக்ரைனின் உறவுகள் மிகவும் முக்கியமானவை என்றும் அவை மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றும் பகிரங்கமாக, நுட்பமாகச் சுட்டிக்காட்டியதன் மூலம், ஜெலென்ஸ்கி வெளியேற வேண்டும் என்ற அழுத்தம் மேலும் தீவிரமடைந்துள்ளது. கடந்த வாரத்தின் கடுமையான மோதலுக்கு வருந்துவதாகவும், அமைதியை நோக்கி டிரம்புடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் கூறிய ஜெலென்ஸ்கியின் மறைமுகமான விமர்சனமாக இது  பார்க்கப்படுகிறது.

    Trump


    இந்த வாரம் உக்ரைனுக்கு இராணுவ உதவியை நிறுத்த டிரம்ப் எடுத்த முடிவு, இங்கு அரசியல் அச்சத்தை மேலும் அதிகரித்தது. டிரம்ப் உலகத்துடன் உக்ரைன் அரசியல்வாதிகளின் பின்னோக்கிச் செல்லும் போக்கை அதிகரித்தது.

    திங்களன்று, தன்னை திருப்திப்படுத்தும் ஒரு சமாதான ஒப்பந்தத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால், ஜெலென்ஸ்கி "நீண்ட காலம் இருக்க மாட்டார்" என்று டிரம்ப் உறுமினார். "எங்களை சமாளிக்கவும், இறுதியில் ரஷ்யர்களை சமாளிக்கவும், இந்த போரை முடிவுக்குக் கொண்டுவரவும் கூடிய ஒரு தலைவர் அமெரிக்காவுக்குத் தேவை" என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் கூறினார்.

    Trump

    தான் பதவி விலகப் போவதாக கூறப்படும் கருத்தை ஜெலென்ஸ்கியே நிராகரித்து, வார இறுதியில் லண்டனில் செய்தியாளர்களிடம், இந்த ஆண்டு தேர்தல்கள் நடத்தப்பட்டாலும், தான் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று நகைச்சுவையாகக் கூறினார். "நீங்கள் என்னை தேர்தலில் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும்," என்று அவர் கூறினார், முன்பு செய்தது போல், உக்ரைன் நேட்டோ உறுப்பினர் பதவியைப் பெற்றால் மட்டுமே ராஜினாமா செய்வேன் என்று பரிந்துரைத்தார்.

    மேலோட்டமாகப் பார்த்தால், டிரம்பின் தாக்குதல்கள் ஜெலென்ஸ்கியை பலவீனப்படுத்தவில்லை. அவர் ஆரம்பத்தில் ஓவல் அலுவலகத்தில் தனது நிலைப்பாட்டில் நிலைத்து நின்றதற்காக பரவலான பாராட்டுகளைப் பெற்றார். விமர்சகர்களிடமிருந்தும் கூட.

    இதையும் படிங்க: தானோசாக மாறிய டிரம்ப்...கலக்கத்தில் இந்தியா!!

    மேலும் படிங்க
    கண்குத்தி பாம்பாக கண்காணிக்கும் போலீஸ்! மால்களுக்கு பலத்த பாதுகாப்பு...

    கண்குத்தி பாம்பாக கண்காணிக்கும் போலீஸ்! மால்களுக்கு பலத்த பாதுகாப்பு...

    தமிழ்நாடு
    நீங்களே செத்து விடுங்கள்... எங்களை இழுக்காதீர்கள்..! பாகிஸ்தானுக்கு தலிபான் தலைவர் எச்சரிக்கை..!

    நீங்களே செத்து விடுங்கள்... எங்களை இழுக்காதீர்கள்..! பாகிஸ்தானுக்கு தலிபான் தலைவர் எச்சரிக்கை..!

    உலகம்
    இந்தியா-பாக். சண்டையால் விபரீத முடிவெடுத்த நடிகர் கமல்ஹாசன்..! பயத்தில் ரசிகர்கள்..!

    இந்தியா-பாக். சண்டையால் விபரீத முடிவெடுத்த நடிகர் கமல்ஹாசன்..! பயத்தில் ரசிகர்கள்..!

    சினிமா
    பாக். மீது என்ன தப்பு இருக்கு..! எல்லா தவறும் இந்தியா மீது தான்.. நடிகையின் பேச்சால் பரபரப்பு..!

    பாக். மீது என்ன தப்பு இருக்கு..! எல்லா தவறும் இந்தியா மீது தான்.. நடிகையின் பேச்சால் பரபரப்பு..!

    சினிமா
    அதிமுககாரங்களுக்கு இயல்பாவே அது அதிகம்... பளீச்சென பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி!

    அதிமுககாரங்களுக்கு இயல்பாவே அது அதிகம்... பளீச்சென பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி!

    அரசியல்
    பால்கனியில நிக்காதீங்க.. வீட்டை விட்டு வெளியே வராதீங்க..! வான்வழி தாக்குதலுக்கு தயாராகும் ராணுவம்..!

    பால்கனியில நிக்காதீங்க.. வீட்டை விட்டு வெளியே வராதீங்க..! வான்வழி தாக்குதலுக்கு தயாராகும் ராணுவம்..!

    இந்தியா

    செய்திகள்

    கண்குத்தி பாம்பாக கண்காணிக்கும் போலீஸ்! மால்களுக்கு பலத்த பாதுகாப்பு...

    கண்குத்தி பாம்பாக கண்காணிக்கும் போலீஸ்! மால்களுக்கு பலத்த பாதுகாப்பு...

    தமிழ்நாடு
    நீங்களே செத்து விடுங்கள்... எங்களை இழுக்காதீர்கள்..! பாகிஸ்தானுக்கு தலிபான் தலைவர் எச்சரிக்கை..!

    நீங்களே செத்து விடுங்கள்... எங்களை இழுக்காதீர்கள்..! பாகிஸ்தானுக்கு தலிபான் தலைவர் எச்சரிக்கை..!

    உலகம்
    அதிமுககாரங்களுக்கு இயல்பாவே அது அதிகம்... பளீச்சென பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி!

    அதிமுககாரங்களுக்கு இயல்பாவே அது அதிகம்... பளீச்சென பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி!

    அரசியல்
    பால்கனியில நிக்காதீங்க.. வீட்டை விட்டு வெளியே வராதீங்க..! வான்வழி தாக்குதலுக்கு தயாராகும் ராணுவம்..!

    பால்கனியில நிக்காதீங்க.. வீட்டை விட்டு வெளியே வராதீங்க..! வான்வழி தாக்குதலுக்கு தயாராகும் ராணுவம்..!

    இந்தியா
    அடிபட்ட பாம்பாய் சீரும் பாகிஸ்தான்... இந்தியாவுக்குள் நிகழ்த்தத் துடிக்கும் படுபாதகச் செயல்..!

    அடிபட்ட பாம்பாய் சீரும் பாகிஸ்தான்... இந்தியாவுக்குள் நிகழ்த்தத் துடிக்கும் படுபாதகச் செயல்..!

    இந்தியா
    இந்திய ராணுவம் உங்களை அவ்வளவு சீக்கிரமா விட்டுவிடாது.. அசீம் முனீருக்கு பீதியை கிளப்பும் வார்னிங்!!

    இந்திய ராணுவம் உங்களை அவ்வளவு சீக்கிரமா விட்டுவிடாது.. அசீம் முனீருக்கு பீதியை கிளப்பும் வார்னிங்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share