• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கடமை தவறிய தமிழக அரசு.. இதுவரை 81 பேர் பலி.. தேவை உடனடி தடை.. சூதாட்ட செயலிக்கு எதிராக ராமதாஸ் போர்க்கொடி..!

    ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்து பல குடும்பங்கள் வீதிக்கு வருவதைத் தடுப்பது தான் அரசின் பணியாக இருக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Sat, 22 Mar 2025 18:32:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    online-gambling-ramadoss-slams-tamilnadu-government

    பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதா? இதுவரை 84 பேர் சாவு - உடனடி தடை தேவை!

    தமிழ்நாட்டில் 2019-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து 47 பேர் மட்டும் தான் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. 2019-ஆம் ஆண்டில் தொடங்கி இன்று வரை குறைந்தது 84 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் எண்ணிக்கையை கிட்டத்தட்ட பாதியாகக் குறைத்துக் காட்ட தமிழக அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது.

    CM MK Stalin

    ஆன்லைன் சூதாட்டங்களை ஒழுங்குபடுத்த நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை எதிர்த்து சிலர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த போது தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் இந்தத் தகவலை தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. தவறான புள்ளிவிவரங்களை வெளியிடுவதன் மூலம் ஆன்லைன் சூதாட்டத் தீமையின் அளவை குறைத்துக் காட்ட தமிழக அரசு முயல்கிறது. மக்களைக் காக்க வேண்டிய அரசு, சூதாட்ட நிறுவனங்களைக் காக்க முயல்வது நியாயமானது அல்ல.

    இதையும் படிங்க: தமிழக அரசு தூங்குவது போல் நடிக்கிறது.. சாதிவாரி கணக்கெடுப்பை சுட்டிக்காட்டி ராமதாஸ் விமர்சனம்..!

    CM MK Stalin

    தமிழ்நாட்டில் 2014-ஆம் ஆண்டிலேயே ஆன்லைன் சூதாட்டம் நுழையத் தொடங்கியது. ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் முதல் தற்கொலை கடந்த 2016-ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. அப்போதிலிருந்தே ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். 2019-ஆம் ஆண்டில் ஆன்லைன் சூதாட்டம் தீவிரமடையத் தொடங்கியது.

    2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊடரங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட போது தான் ஆன்லைன் சூதாட்டம் உச்சத்தை அடைந்தது. பா.ம.க.வின் வலியுறுத்தலை ஏற்று அந்த ஆண்டு நவம்பர் 21-ஆம் தேதி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

    CM MK Stalin

    அதுவரை 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் சுமார் 10 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டனர். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் செல்லாது என்று 2021 ஆகஸ்ட் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அன்று தொடங்கி 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ஆம் நாள் புதிய ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் இயற்றப்படும் வரை 29 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

    அந்த சட்டத்தை ஆளுனர் திரும்பி அனுப்பியதைத் தொடர்ந்து அதே சட்டம் 2023-ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி மீண்டும் இயற்றப்பட்ட போது, ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்திருந்தது. அந்த சட்டத்திற்கு அதே ஆண்டின் ஏப்ரல் 10-ஆம் தேதி ஆளுனர் ஒப்புதல் அளித்த போது 50 பேர் தற்கொலை செய்து கொண்டிருந்தனர்.

    CM MK Stalin

    திமுக ஆட்சியில் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் செல்லாது என 2023-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு இதுவரை 24 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் இதுவரை 3 காலக் கட்டங்களில் 84 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கும் நிலையில், தவறான தகவல்களை அரசு அளிப்பதை ஏற்க முடியாது. ஆன்லைன் சூதாட்டத்தில் தமிழக மக்கள் பணத்தை இழப்பதைத் தடுக்க ஆன்லைன் சூதாட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான் ஒரே தீர்வு ஆகும். ஆனால், தீர்ப்பளிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகப்போகும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசால் தடை பெற முடியவில்லை.

    CM MK Stalin

    ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்து பல குடும்பங்கள் வீதிக்கு வருவதைத் தடுப்பதும், தற்கொலை செய்து கொள்வதைத் தடுப்பதும் தான் அரசின் பணியாக இருக்க வேண்டும். ஆனால், அந்தக் கடமையை செய்ய தமிழக அரசு தவறி விட்டது. இந்த விவகாரத்தில் தவறான தகவல்களை தெரிவிப்பதை விடுத்து, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

    தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

    இதையும் படிங்க: உங்க மொழிக் கொள்கை உறுதியை காட்ட 'ரூ' தேவையில்ல.. இதை செய்யுங்களேன்.. ராமதாஸ் பொளேர்.!

    மேலும் படிங்க
    வெடித்துச் சிதறிய கேஸ் சிலிண்டர்... தீயில் கருகி பாட்டி, பேரன், பேத்தி உடல் கருகி உயிரிழப்பு...!

    வெடித்துச் சிதறிய கேஸ் சிலிண்டர்... தீயில் கருகி பாட்டி, பேரன், பேத்தி உடல் கருகி உயிரிழப்பு...!

    இந்தியா
    தவெக ஆட்சியில் தலைவிரித்தாடுகிறதா லஞ்சம்?...சார் பதிவாளர் அலுவலகங்களில் கட்டுக்கட்டாய் சிக்கிய பணம்... எவ்வளவு தெரியுமா?

    தவெக ஆட்சியில் தலைவிரித்தாடுகிறதா லஞ்சம்?...சார் பதிவாளர் அலுவலகங்களில் கட்டுக்கட்டாய் சிக்கிய பணம்... எவ்வளவு தெரியுமா?

    தமிழ்நாடு
    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (05-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் ஓய்வு அவசியம்..!!

    இன்றைய ராசிபலன் (05-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் ஓய்வு அவசியம்..!!

    ஜோதிடம்
    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    இந்தியா
    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வெடித்துச் சிதறிய கேஸ் சிலிண்டர்... தீயில் கருகி பாட்டி, பேரன், பேத்தி உடல் கருகி உயிரிழப்பு...!

    வெடித்துச் சிதறிய கேஸ் சிலிண்டர்... தீயில் கருகி பாட்டி, பேரன், பேத்தி உடல் கருகி உயிரிழப்பு...!

    இந்தியா
    தவெக ஆட்சியில் தலைவிரித்தாடுகிறதா லஞ்சம்?...சார் பதிவாளர் அலுவலகங்களில் கட்டுக்கட்டாய் சிக்கிய பணம்... எவ்வளவு தெரியுமா?

    தவெக ஆட்சியில் தலைவிரித்தாடுகிறதா லஞ்சம்?...சார் பதிவாளர் அலுவலகங்களில் கட்டுக்கட்டாய் சிக்கிய பணம்... எவ்வளவு தெரியுமா?

    தமிழ்நாடு
    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    இந்தியா
    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    தமிழ்நாடு
    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share