• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தமிழ்நாட்டில் நடப்பது திமிர் பிடித்த ஆட்சி... தவெக தலைவர் விஜய் கடும் விமர்சனம்!!

    தவெக பெண் நிர்வாகியை போலீஸார் பூட்ஸ் காலால் எட்டி உதைத்த சம்பவத்திற்கு அக்கட்சி தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    Author By Raja Tue, 27 May 2025 15:36:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay has condemned the incident in which the police kicked a female tvk executive with boots

    சென்னை வியாசர்பாடி, முல்லை நகர் பகுதியில் தீவிபத்து ஏற்பட்டது. இதை அடுத்து தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவெக பெண் நிர்வாகி உதவியதாக கூறப்படுகிறது. அவரை போலீஸார் பூட்ஸ் காலால் எட்டி உதைத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கிரையாகியுள்ளன. தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று செயல்பட்டதால், உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு, பல குடிசைகள் தப்பியுள்ளன. தீவிபத்தில் குடிசைகளை இழந்த மற்றும் முன்னெச்சரிக்கையாக அப்புறப்படுத்தப்பட்ட மக்கள், தற்காலிகமாக அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். இந்தத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் சென்று அங்கிருந்தவர்களுக்கு மனிதநேய அடிப்படையில் உடை, போர்வை, பாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் உணவும் வழங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களும் தாமாக முன்வந்து பெற்றுக்கொண்டனர். இதனைப் பார்த்த காவல் துறையினர், த.வெ.க. நிர்வாகிகளைத் தடுத்து நிறுத்தியதுடன், அவர்களை அங்கிருந்து செல்லுமாறு மிரட்டியுள்ளனர்.

    chennai

    காவல் துறையினர் வரம்பு மீறிப் பேசி, அத்துமீறிச் செயல்படுவதைப் பார்த்த கழகத்தின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கங்காவதி மக்களுக்கு உதவி செய்வதைத் தடுப்பது ஏன் என்று காவல் துறையினரை நோக்கிக் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது,காவல் துறையினர் கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி, கழக மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கங்காவதியின் வயிற்றில் எட்டி உதைத்து, கீழே தள்ளியுள்ளனர். மேலும், இதைத் தடுக்கச் சென்ற கழக மகளிரணியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வியின் ஆடையைக் காவல் துறையினர் பிடித்து இழுத்துத் தள்ளி விட்டுள்ளனர். காயமடைந்த கழக உறுப்பினர்கள், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிபத்தில் பாதிக்கப்பட்டு, குடிசைகளை இழந்து, தங்களின் அத்தியாவசிய உடைமைகளை இழந்து, நிர்க்கதியாய் நிற்கும் மக்களுக்கு உதவுவது என்பது காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட வேண்டிய மாபெரும் குற்றச் செயலா?. பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்வதோ, அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் கொடுத்து உதவுவதோ கூடாது என்று காவல் துறை சொல்கிறது என்றால், அவர்களின் உண்மையான நோக்கம் என்ன?.

    இதையும் படிங்க: நேற்று முளைத்த காளான்! பச்சா இன் பாலிடிக்ஸ்.. விஜயை தொடர்ந்து தாக்கும் திமுக அமைச்சர்கள்..!

    chennai

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியதைத் தடுத்து நிறுத்தியதற்காக, காவல் துறையினரைப் பார்த்து நியாயமான முறையில் கேள்வி கேட்ட த.வெ.க. பெண் நிர்வாகிகளை பூட்ஸ் காலால் வயிற்றில் எட்டி உதைப்பதையும், ஆடையைப் பிடித்து அந்த ஆடை கிழியும் அளவிற்கு அவர்களை இழுத்துத் தள்ளி விடும் காவல் துறையின் செயலை முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்றுக்கொள்கிறாரா?. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பெண்களை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தும், அவர்களின் ஆடையைக் கிழித்தும் அராஜகமாக இழிவாகத்தான் நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளாரா?. தற்போது தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல, அதிகாரத் திமிர் பிடித்த உண்மையான பாசிச ஆட்சியே என்பதற்கு இதைவிட சாட்சி தேவையா என்ன?. மக்களுக்கான ஆட்சி நடத்துகிறோம் என்று வெற்று விளம்பரம் செய்யும் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களது அரசின் இந்தக் காட்டுமிராண்டித்தனமான அராஜகப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    chennai

    இந்த அராஜகச் செயலில் ஈடுபட்டு தவறிழைத்த காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மகளிருக்கு நாங்கள் தான் பாதுகாப்பு என்று சொல்லி, அவர்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த பின், அவர்களுக்கு உங்கள் கட்சிக்காரர்களிடமிருந்தே பாதுகாப்பில்லாத சூழல் இருப்பதைப் பல முறைகள் சுட்டிக் காட்டியுள்ளேன். ஆனாலும் காவல் துறை வாயிலாகவும் அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிடும் இந்தப் போக்கை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. காவல் துறை, ஆளுங்கட்சியின் ஏவல் துறையாக மாறி, அப்பாவிகள் மீது மிருகப் பலத்தைக் காட்டி, மக்களிடம் வெறுப்புகளைக் குவித்து வருகிறது. பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றி வரும் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான விளம்பர மாடல் அரசு, பெண்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களை வீதியில் போராட வைத்திருக்கிறது. இதேபோன்று மகளிருக்கு எதிரான அராஜக நிலை தொடர்ந்தால், தமிழக வெற்றிக் கழகம் சார்பாக மிகப் பெரிய மக்கள் போராட்டத்தையும், சட்டப் போராட்டத்தையும் முன்னெடுக்கத் தயங்க மாட்டோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: பச்சா பாலிடிக்ஸ்.. திமுகவை விமர்சிக்கும் விஜய்யை ஒரே வார்த்தையில் டேமேஜ் ஆக்கிய துரைமுருகன்!!

    மேலும் படிங்க
    வெடித்துச் சிதறிய கேஸ் சிலிண்டர்... தீயில் கருகி பாட்டி, பேரன், பேத்தி உடல் கருகி உயிரிழப்பு...!

    வெடித்துச் சிதறிய கேஸ் சிலிண்டர்... தீயில் கருகி பாட்டி, பேரன், பேத்தி உடல் கருகி உயிரிழப்பு...!

    இந்தியா
    தவெக ஆட்சியில் தலைவிரித்தாடுகிறதா லஞ்சம்?...சார் பதிவாளர் அலுவலகங்களில் கட்டுக்கட்டாய் சிக்கிய பணம்... எவ்வளவு தெரியுமா?

    தவெக ஆட்சியில் தலைவிரித்தாடுகிறதா லஞ்சம்?...சார் பதிவாளர் அலுவலகங்களில் கட்டுக்கட்டாய் சிக்கிய பணம்... எவ்வளவு தெரியுமா?

    தமிழ்நாடு
    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (05-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் ஓய்வு அவசியம்..!!

    இன்றைய ராசிபலன் (05-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் ஓய்வு அவசியம்..!!

    ஜோதிடம்
    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    இந்தியா
    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வெடித்துச் சிதறிய கேஸ் சிலிண்டர்... தீயில் கருகி பாட்டி, பேரன், பேத்தி உடல் கருகி உயிரிழப்பு...!

    வெடித்துச் சிதறிய கேஸ் சிலிண்டர்... தீயில் கருகி பாட்டி, பேரன், பேத்தி உடல் கருகி உயிரிழப்பு...!

    இந்தியா
    தவெக ஆட்சியில் தலைவிரித்தாடுகிறதா லஞ்சம்?...சார் பதிவாளர் அலுவலகங்களில் கட்டுக்கட்டாய் சிக்கிய பணம்... எவ்வளவு தெரியுமா?

    தவெக ஆட்சியில் தலைவிரித்தாடுகிறதா லஞ்சம்?...சார் பதிவாளர் அலுவலகங்களில் கட்டுக்கட்டாய் சிக்கிய பணம்... எவ்வளவு தெரியுமா?

    தமிழ்நாடு
    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    இந்தியா
    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    தமிழ்நாடு
    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share