• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சென்னை மக்களே உஷார்... ஒரே நேரத்தில் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் ஏற்பட்ட திடீர் மாற்றம்...!

    புயல் காரணமாக கன மழையால் நீர் வரத்து அதிகரிக்க கூடும் என்பதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இருந்து திறக்கப்பட்டு வரும் உபரி நீர் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
    Author By Amaravathi Sat, 29 Nov 2025 08:56:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    due-to-ditwah-heavy-rains-chennai-lake-water-outflow

    கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புழல் ஏரியில் இருந்து திறக்கப்பட்டு வந்த உபரி நீர் 400கன அடியில் இருந்து 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உபரிநீர் கால்வாய் ஓரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2792 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் நீர்மட்டம் 18.91 அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 246 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. சென்னை குடிநீருக்காக 184 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    கன மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடப்பாண்டில் மீண்டும் 5வது முறையாக நேற்று முன்தினம் முதல் புழல் ஏரியிலிருந்து 400 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. புயல் காரணமாக ஏரிக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் பாதுகாப்பு கருதி புழல் ஏரியிலிருந்து திறக்கப்பட்டு வந்த உபரி நீர் அளவு 400கனஅடியில் இருந்து 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ‘டிட்வா’ புயல் எதிரொலி..!! தமிழகத்திற்கு 'ரெட் அலர்ட்'..!! இன்று 54 விமானங்கள் ரத்து..!!

    புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் சுமார் 13.5 கிலோ மீட்டர்கால்வாய் வழியே எண்ணூர் கடலில் சென்று சேரவுள்ளது. நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்டலைன், சாமியார்மடம், தண்டல்கழனி, பாபாநகர், வடபெரும்பாக்கம், வடகரை, மணலி, கொசப்பூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் வழியே உபரிநீர் செல்ல உள்ளதால் உபரிநீர் கால்வாய் ஓரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவுறுத்தி உள்ளார்.

    உபரிநீர் கால்வாய் அருகில் சென்று வேடிக்கை பார்ப்பதோ, செல்பி எடுப்பது, ரீல்ஸ் பதிவிடுவது, குளிப்பது, துணி துவைப்பது போன்ற எந்த செயல்களிலும் ஈடுபட வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் உபரிநீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம் மற்றும் பூண்டி நீர் தேக்கத்தில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    திருவள்ளூர் மாவட்டத்திற்கு  கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருப்பதால் முன்னெச்சரிக்கையாக பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திலிருந்து  கொசஸ்தலை ஆற்றுக்கு திறக்கப்பட்ட உபரி நீர்  1500 கன அடியிலிருந்து 2500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதனால் கொசஸ்தலை  ஆற்றின் கரையோர பகுதிகள் உள்ள  நம்பாக்கம்,கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம்,ஒதப்பை,நெய்வேலி, எறையூர்,வெள்ளியூர், பீமன் தோப்பு கொரக்கந் தண்டலம், சோமதேவன்பட்டு,மெய்யூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம் ஆத்தூர் பண்டிகாவனூர், ஜெகநாதபுரம், புது குப்பம், கன்னிப்பாளையம், வண்ணிப்பாக்கம், ஆசூவன் பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர்
    சடையான்குப்பம், எண்ணூர் ஆகிய 30 கிராமங்களுக்கு நீர்வளத்துறை முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது

    இதையும் படிங்க: இலங்கையை புரட்டிப் போட்ட 'டிட்வா' புயல் - மழை வெள்ளம், மண் சரிவில் சிக்கி 40 பேர் பலி...! 

    மேலும் படிங்க
    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    தமிழ்நாடு
    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    இந்தியா
    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா

    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    தமிழ்நாடு
    இங்கிலாந்தை 258 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா! முதல் ஒருநாள் போட்டியில் 259 ரன்கள் இலக்கு!

    இங்கிலாந்தை 258 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா! முதல் ஒருநாள் போட்டியில் 259 ரன்கள் இலக்கு!

    கிரிக்கெட்
    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    தமிழ்நாடு
    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    இந்தியா
    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    தமிழ்நாடு

    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    தமிழ்நாடு

    "பாஜகவின் வலுவான தூண் சாய்ந்தது!" ராமச்சந்திர கவுடா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share