இந்தியா மற்றும் பிரிட்டன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement - FTA) இன்று முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இந்தியாவின் விவசாயிகள், மீனவர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள் ஆகியோருக்கு புதிய சந்தை வாய்ப்புகள் உருவாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் அமலுக்கு வருவதற்கு முன்பு, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களுக்கு 70 சதவீதம் வரை, கடல்சார் பொருட்கள் மற்றும் பழங்களுக்கு 20 சதவீதம் வரை, தோல் மற்றும் காலணி பொருட்களுக்கு 16 சதவீதம் வரை, ஜவுளி பொருட்களுக்கு 12 சதவீதம் வரை, டீ மற்றும் காபிக்கு 10 சதவீதம் வரை ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டு வந்தது.
இதையும் படிங்க: அணுகுண்டு தாக்குதலை தடுத்தவர் பிரதமர் மோடி! புடின்கிட்ட அவ்ளோ செல்வாக்கு! போலந்து அமைச்சர் புகழாரம்!
அதேபோல் அலுமினியம், ரசாயனப் பொருட்கள், இயந்திரங்கள், எண்ணெய் வித்துக்கள், பிளாஸ்டிக், ரப்பர், மருத்துவ கருவிகள், நகைகள், மரப்பொருட்கள் உள்ளிட்ட பல துறைகளிலும் வரி நடைமுறையில் இருந்தது.

தற்போது இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததன் மூலம் மேற்கண்ட அனைத்து முக்கிய பொருட்களுக்கும் பிரிட்டன் சந்தையில் ஏற்றுமதி வரி பூஜ்யமாகியுள்ளது. இதனால் இந்திய பொருட்கள் போட்டித்தன்மையுடன் பிரிட்டன் சந்தையை எளிதாக அடைய முடியும் என்றும், ஏற்றுமதி அளவு அதிகரிக்கும் என்றும் தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த ஒப்பந்தம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில், இந்தியா – பிரிட்டன் உறவில் இது ஒரு முக்கிய மைல்கல் என குறிப்பிட்டுள்ளார். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும், விவசாயிகள், தொழில்முனைவோர், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு புதிய வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு அதிகரிப்பதுடன், திறமையான இந்தியர்கள் பிரிட்டனில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகளும் விரிவடையும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்த வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு முக்கிய ஊக்கமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி தூங்கமாட்டார்! அதிகாலையிலேயே போன் செய்த அதிபர் ட்ரம்ப் பாராட்டு!