• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "ஏட்டில் எழுதி நக்கினால் இனிக்காது"... கேரளாவை பார்த்து கத்துக்கோங்க ஸ்டாலின்... அன்புமணி ஆவேசம்...!

    வறுமை ஒழிப்பு என திமுக அரசு பேச்சில் மட்டுமே குறிப்பிட்டு வருவதாகவும், செயல்களில் எதையும் காட்டவில்லை என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
    Author By Amaravathi Thu, 23 Oct 2025 11:14:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pmk Anbumani slams Kerala eradicate Poverty

    தீவிர வறுமை ஒழிப்புத் திட்டம், பன்முக வறுமை குறியீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலமாக கேரளாவில் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அம்மாநிலம் தீவிர வறுமையை ஒழித்த முதல் இந்திய மாநிலமாக மாறியுள்ளது. அம்மாநில அரசு, உணவு, வீடு, சுகாதாரம், வருமானம் போன்ற பல காரணிகளை உள்ளடக்கிய ஒரு பன்முக அணுகுமுறையை கையாண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பல முக்கிய திட்டங்கள் மற்றும் அரசு சேவைகள், குறிப்பாக உரிமை ஆவணங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் போன்ற அவசர சேவைகள் 21,263 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 

    இதனை சுட்டிக்காட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி சமூகநீதி, வறுமை ஒழிப்பு என திமுக அரசு பேச்சில் மட்டுமே குறிப்பிட்டு வருவதாகவும், செயல்களில் எதையும் காட்டவில்லை என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். அதேபோல் தமிழகத்தில் சாதி வாரிய கணக்கெடுப்பை இப்போதாவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

    இதுகுறித்த தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: கேரளத்தில் கொடிய வறுமையில் வாடிய 64,006 குடும்பங்கள் வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டு இருப்பிடம், வாழ்வாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் இந்தியாவில்  கொடிய வறுமையை  ஒழித்த முதல் மாநிலம் என்ற பெருமையை  வரும் நவம்பர் ஒன்றாம் தேதி, கேரள மாநிலம் உருவாக்க நாளில், அம்மாநிலம் பெறவிருக்கிறது. இதற்காக கேரள அரசுக்கு பாராட்டுகள்.

    இதையும் படிங்க: சபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தி... பாரம்பரிய முறையில் நடந்த தேர்வு...!

    கேரள அரசின் இந்த சாதனைக்கு காரணமாகவும், ஆதாரமாகவும் இருந்தது அம்மாநிலத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு ஆகும்.  கேரளத்தில் கொடிய  வறுமையை ஒழிக்க முடிவு செய்த  அம்மாநில அரசு, அதற்கான காரணிகளை கண்டறிய  மாநிலம் முழுவதும் கணக்கெடுப்பு நடத்தியது. அந்தக் கணக்கெடுப்பில் மாநிலம் முழுவதும் 64,006 குடும்பங்கள் வறுமையில்  வாடுவதாகவும்,  அக்குடும்பங்களில் ஒரு லட்சத்து 3,099  பேர் இருப்பதும் தெரியவந்தது. அதனடிப்படையில் மைக்ரோ திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டதன் பயனாகத் தான் அங்கு வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது.

    கேரள அரசின் இந்த சாதனை தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய பாடத்தைக் கற்பித்திருக்கிறது.  தமிழ்நாட்டிலும் வறுமை தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. ஆனால்,  வறுமையை ஒழித்து வருவதாக  விளம்பரமும், ஆரவாரமும் மட்டுமே செய்யும்  திமுக அரசு, இன்று வரை  வறுமையை  ஒழிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. இன்னும் கேட்டால் தமிழ்நாட்டில் வறுமையில் வாடும் குடும்பங்கள் எத்தனை? என்ற புள்ளிவிவரம் கூட அரசிடம் இல்லை. அதற்குக் காரணம்  தரவுகளைத் திரட்ட எந்தக் கணக்கெடுப்பையும்    திமுக அரசு நடத்தாதது தான்.

    பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கண்டறிந்து தீர்வு காண பொருளாதாரக் கணக்கெடுப்பு அவசியம். அதைத் தான் கேரள அரசு செய்திருக்கிறது.  சமூக ஏற்றத்தாழ்வுகளைக் கண்டறிந்து  தீர்வு காண சாதிவாரி கணக்கெடுப்பு கட்டாயம். இவை அனைத்தையும் ஒன்றாக கண்டறிந்து  தீர்வு காண சாதிவாரி கணக்கெடுப்பு எனப்படும்  சமூக, பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையானத் தேவை ஆகும். அதைத் தான் தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதன் தேவையை உணர  திமுக அரசு மறுக்கிறது.

    அடிப்படையில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது சமூகத்தின் குறைகளையும், நோய்களையும் கண்டறிவதற்கான  ஆய்வு தான். அதைச் செய்யாமல் சமூகத்தின் நோய்களுக்கும், குறைகளுக்கும்  மருத்துவம் செய்ய முடியாது. அந்த அடிப்படையில் இந்த ஆய்வை மேற்கொள்ள வேண்டியது  தமிழக அரசின் கடமை.  ஆனால்,  அதை செய்தால் தங்கள் ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சமூக அநீதிகள் அனைத்தும் அம்பலமாகிவிடும் என்று அஞ்சுகிறது. அதனால் தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக அரசு மறுத்து வருகிறது.

    சமூகநீதி என்றாலும், வறுமை ஒழிப்பு என்றாலும் ஏட்டில் எழுதுவதால் பயனளிக்காது.  சீனி சக்கரை சித்தப்பா என்று  ஏட்டில் எழுதி நக்கினால் இனிக்காது. இந்த உண்மையை  திமுக அரசு உணர வேண்டும்.  உணர்ந்த பின், கடந்த நான்கரை ஆண்டுகளில் இழைக்கப்பட்ட சமூக அநீதிகளுக்கு  பரிகாரம் தேடும் வகையில் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த  திமுக அரசு முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: கேரளத்தில் காவு வாங்கிய கிணறு... தீயணைப்பு வீரர் உட்பட 3 உயிர்கள் பறிபோன சோகம்...!

    மேலும் படிங்க
    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    தமிழ்நாடு
    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    இந்தியா
    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா

    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    தமிழ்நாடு
    இங்கிலாந்தை 258 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா! முதல் ஒருநாள் போட்டியில் 259 ரன்கள் இலக்கு!

    இங்கிலாந்தை 258 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா! முதல் ஒருநாள் போட்டியில் 259 ரன்கள் இலக்கு!

    கிரிக்கெட்
    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    தமிழ்நாடு
    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    இந்தியா
    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    தமிழ்நாடு

    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    தமிழ்நாடு

    "பாஜகவின் வலுவான தூண் சாய்ந்தது!" ராமச்சந்திர கவுடா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share