திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அதிகாரியாக வேலை பார்க்கும் வடமாவட்டத்தை சேர்ந்த ஒருவர், அங்குள்ள அணு நகரிய குடியிருப்பில் குடும்பத்துடன் வசிக்கிறார். சம்பவத்தன்று பீரோவில் வைத்திருந்த நகைகளை எடுத்து பார்த்தார். நிறைய நகைகளை காணவில்லை. மொத்தம் 32 பவுன் மிஸ் ஆகி இருந்தது.
நகைகளை மர்ம நபர்கள் வீடு புகுந்து திருடியதாக கூடங்குளம் போலீசில் புகார் செய்தார். குடியிருப்பில் உள்ள சிசிடிவி, கைரேகைகள் மற்றும் இதர தடயங்களை சேகரித்து போலீசார் விசாரித்தனர்.வீட்டுக்குள் வேறு நபர்கள் வந்து திருடியதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை. அதிகாரி மீதே போலீசுக்கு சந்தேகம் வந்தது. அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். ஆனால் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை என்பது தெரிந்தது.

அடுத்ததாக, பத்தாம் வகுப்பு மாணவியான அவரது 14 வயது மகள் மீது போலீசுக்கு சந்தேகம் வந்தது. சிறுமி அடிக்கடி செல்போனும் கையுமாகவே இருந்திருக்கிறாள். அவளிடம் விசாரித்த போது தான் அதிர்ச்சி தகவல் வெளியானது. அவளுக்கு இன்ஸ்டாகிராமில் அக்கவுன்ட் இருந்தது. அதன் மூலம் திருச்சியை சேர்ந்த 22 வயதான அப்துல் ரகுமான், முகமது சுகி என்ற இரண்டு இளைஞர்களின் அறிமுகம் கிடைத்து இருக்கிறது.
இதையும் படிங்க: புத்தம் புது ஐபோன் ரூ.7000 மட்டுமே..! இன்ஸ்டாவில் அளந்துவிட்ட டூபாக்கூர்கள்.. சோஷியல் மீடியாவில் அரங்கேறும் அவலம்..!
இளைஞர்கள் இருவருமே நண்பர்கள். சிறுமியை ஏமாற்றி மிகவும் நெருக்கமாக பழக ஆரம்பித்தனர். சிறுமியும் அடிக்கடி அவர்களிடம் சாட் செய்து வந்தார். செல்போனிலும் அவ்வப்போது பேசி வந்தார். நன்கு நெருக்கமான பிறகு இளைஞர்கள் இருவரும் தங்கள் புத்தியை காட்டினர். சிறுமியின் தந்தை அணு மின் நிலைய அதிகாரி என்பதால், அவரிடம் நிறைய பணம் இருக்கும் என்று நினைத்தனர்.

சிறுமி மூலம் அதை கறக்க பார்த்தனர். தாங்கள் மிகவும் கடனில் இருப்பதாக கூறி அவளிடம் பணம் கேட்டனர். சிறுமியும் வீட்டுக்கு தெரியாமல் பணம் கொடுக்க ஆரம்பித்தார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டில் இருந்த நகைகளையும் எடுத்து கொடுத்தாள். சிறுமியை சந்திக்க வருவது போல், கூடங்குளம் வந்து நகை பணத்தை இளைஞர்கள் 2 பேரும் அபேஸ் செய்து வந்தனர்.

இப்படியே 7 மாதத்தில் பணம் மற்றும் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை சிறுமியை ஏமாற்றி வாங்கியது தெரியவந்தது. இதை உறுதி செய்த போலீசார் இளைஞர்கள் அப்துல் ரகுமான், முகமது சுகியை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு பவுன் நகைகளை கூட மீட்க முடியவில்லை. சிறுமியை ஏமாற்றி பிடுங்கிய நகைகளை விற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாக இளைஞர்கள் 2 பேரும் கூறினர்.

அப்துல் ரகுமானும் முகமது சுகியும் சிறுமியை போல் வேறு யாரையும் ஏமாற்றி பணம் பறித்தார்களா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். 14 வயது மாணவி இன்ஸ்டா நட்பு மூலம் 25 லட்சம் ரூபாய் நகைகளை இழந்த சம்பவம் நெல்லை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அதிகாலையில் கேட்ட பயங்கர சப்தம்.. வீட்டு வாசலில் வெடித்த பெட்ரோல் குண்டு.. திமுக நிர்வாகிக்கு அச்சுறுத்தல்..!