புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே 10 வயது சிறுமியை பாலியல் தாக்குதல் செய்ய முயற்சித்த 64 வயது முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கும் சம்பவங்கள் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வயது முதிர்ந்த நபர்கள் சாக்லெட் வாங்கித் தருகிறேன், பொம்மை தருகிறேன் எனக்கூறி சிறுமிகளை தங்களது வீட்டிற்கோ அல்லது ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கோ அழைத்துச் சென்று சீரழிக்கும் பகீர் சம்பவங்கள் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. இதில் சில விவகாரங்கள் மட்டுமே காவல்நிலையம் வரை சென்று வழக்காக பதிவு செய்யப்படுகிறது.
அந்த வகையில் புதுக்கோட்டையில் தனது 10 வயது மகளுக்கு ஏற்பட்ட கொடுமையைக் கண்டு வெகுண்டெழுந்த தாய் ஒருவர் காவல்நிலையம் சென்று தைரியமாக புகார் கொடுத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள காசிம் புதுப்பேட்டை பள் ளிவாசல் தெருவை சேர்ந்த 64 வயது முதியவர் அப்துல் கபூர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமியை அவரது வீட் டின் உள்ளே அழைத்து காசு தருவதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழகமே அதிர்ச்சி... காப்பகத்தில் 9 வயது சிறுமியை மாறி, மாறி சீரழித்த மிருகங்கள்... ஆண், பெண் வார்டன்கள் கைது...!
தன்னிடம் தாத்தா தவறாக நடந்து கொள்வதை அறிந்து அதிர்ச்சியான சிறுமி அலறி அடித்துக் கொண்டு, அந்த முதியவரிடமிருந்து தப்பி தனது வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் சிறுமியின் தாயிடம் தனக்கு நடந்தவற்றை கண்ணீருடன் எடுத்துக் கூறியுள்ளது.
இதனை அடுத்து ஆத்திரமும் அதிர்ச்சியுமடைந்த சிறுமியின் தாயார் இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரைப் பெற்ற ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மணமல்லி விசாரணை மேற்கொண்டு முதியவர் அப்துல் கபூரை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
இதையும் படிங்க: ச்சீ... தமிழ் பேராசிரியர் செய்யுற காரியமா இது?... ஆசைக்கு இணங்கும் படி மாணவிகளிடம் செல்போனில் ஆபாச பேச்சு...!