பெல்ஜியம் நாட்டில் ரெசிடென்டி கார்டு அதாவது இந்த கார்டை வைத்து 90 நாட்கள் வரை அந்நாட்டில் தங்கிக்கொள்ள முடியும். மெகுல் சோக்சியின் மனைவி ப்ரீத்தி சோக்சி பெல்ஜியத்தை பூர்வீகமாக்க கொண்டவர் என்பதால் அவருடைய கணவர் என்ற அடிப்படையில் மெகுல் சோக்சி தங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் பெற்று மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பியவர் வைரவியாபாரி மெகுல் சோக்சி.

கடந்த 2017ல் ஆன்டிகுவா மற்றும் பர்படாஸில் முதலீட்டுத் திட்டம் மூலம் குடியுரிமையை பெற்ற சோக்சி, 2018ம் ஆண்டு ஜனவரியில் மெகுல் சோக்சி குடும்பத்துடன் கரிபியன் தீவுக்குத் தப்பினார். அங்கு ஆன்டிகுவாவில் பர்படாஸ் நகரில் வசித்து வந்தார்.
இதையும் படிங்க: பாஜகவுடன் சேர்ந்து துரோகம்... நிதிஷ் குமாரை விரட்டியடித்த இஸ்லாமியர்கள்… இப்தார் விருந்தில் பரபரப்பு..!

கடந்த 2021ம் ஆண்டு மெகுல் சோக்சியை இந்தியா அழைத்துச் செல்ல இந்திய அதிகாரிகள் ஆன்டிகுவா அரசிடம் விண்ணப்பம் செய்திருந்தநிலையில் அங்கிருந்து கப்பல் வழியாக கியூபாவுக்கு மெகுல் சோக்சி தப்பியபோது போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
இருப்பினும் தன்னை இந்தியாவுக்கு நாடுகடத்த எதிர்ப்புத் தெரிவித்து மெகுல் சோக்சி தாக்கல் செய்த மனுவை ஏற்று அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில் பெல்ஜியத்தில் ஆன்ட்ரப் நகரில் மெகுல் சோக்சி வசித்து வருவதாக தற்போது அசோசியேட் டைம்ஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.

பெல்ஜியத்திலிருந்து மெகுல் சோக்சியை இந்தியா அழைத்துவர அதிகாரிகள் முயற்சித்து வருவதாக தகவல்கள் வந்தாலும் அதை யாரும் உறுதி செய்யவில்லை.மெகுல் சோக்சி போலியான ஆவணங்களை காண்பித்து, பொய்யான தகவல்களைக் கூறி பெல்ஜியத்தில் ரெசிடென்டி கார்டு பெற்று தங்கியுள்ளார்.
மெகுல் சோக்சி பூர்வீகத்தில் எந்தநாட்டைச் சேர்ந்தவர், அதன்பின் எந்தெந்த நாடுகளில் குடியுரிமை பெற்றார் என்ற விவரங்களை மறைத்து பெல்ஜியத்தில் தங்கியுள்ளார். பெல்ஜியத்தில் இருந்தவாறு அங்கிருந்து ஸ்விட்சர்லாந்துக்கு மருத்துவசிகிச்சைக்காக மெகுல் சோக்சி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மெகுல் சோக்ஸியின் கூட்டாளியும், கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலியான கடிதம் அளித்து ரூ13500 கோடி மோசடி செய்து லண்டனுக்குத் தப்பினார்.
அங்கு போலீஸாரல் கைது செய்யப்பட்டு தற்போது லண்டன் சிறையில் உள்ளார், இவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் பணியில் சிபிஐ, அமலாக்கப்பிரிவினர் தீவிரமாக இருக்கிறார்கள்
இதையும் படிங்க: ஏளனம் என்று வார்த்தையை விட்ட நிர்மலா சீதாராமன்.. எள்ளி நகையாடுவதா என்று கொந்தளிக்கும் கனிமொழி.!!