• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    வங்கதேசம்: நாளை நாடாளுமன்ற தேர்தல்..!! நிலவும் பதற்றம்..!! கள நிலவரம் என்ன..??

    வங்கதேசத்தில் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
    Author By Shanthi M. Wed, 11 Feb 2026 13:15:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bangladesh-election-2026-What-happens-when-what’s-at-stake?

    வங்கதேசத்தில் நாளை (பிப்ரவரி 12, 2026) நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல், நாட்டின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான தருணமாக அமைந்துள்ளது. 2024 ஆகஸ்ட் மாதம் மாணவர் தலைமையிலான பெரும் போராட்டத்தால் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்த பின்னர், இது முதல் பொதுத் தேர்தலாகும். அவரது 15 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த அந்த மாணவர் எழுச்சி, நாட்டை புதிய அரசியல் பாதையில் திருப்பியுள்ளது.

    Bangladesh

    ஷேக் ஹசீனா ஆட்சியின் போது இந்தியாவுடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தார். ஆனால் 2024 ஜூலை-ஆகஸ்ட் காலகட்டத்தில் மாணவர்களின் வேலைவாய்ப்பு கொள்கைக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது. ஆகஸ்ட் 5-ஆம் தேதி உச்சக்கட்டத்தை அடைந்த இந்தக் கலவரத்தில் பலர் உயிரிழந்தனர். இதனால் ஹசீனா பதவி விலகி, இந்தியாவுக்கு தஞ்சமடைந்தார். இதைத் தொடர்ந்து நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

    இதையும் படிங்க: வங்கதேசத்துடன் புதிய வர்த்தக ஒப்பந்தம்..!! 19% வரி குறைப்பு.. அமெரிக்கா அதிரடி..!!

    இந்த அரசு, அரசியல், தேர்தல், நீதித்துறை உள்ளிட்ட துறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு, நம்பகமான தேர்தலை நடத்துவதற்கான அடித்தளத்தை அமைத்தது. இப்போது நடைபெறவுள்ள தேர்தலில் கடும் பதற்றம் நிலவுகிறது. நாடு முழுவதும் சுமார் 43,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 24,000-க்கும் மேற்பட்டவை (50 சதவீதத்துக்கும் அதிகம்) உயர் அல்லது மிதமான அளவில் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

    தலைநகர் டாக்காவில் மட்டும் 2,131 சாவடிகளில் 1,614 பதற்றமானவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது – இது வங்கதேச வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு. பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்பை விட பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. 90 சதவீத வாக்குச்சாவடிகள் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். டாக்காவில் காவல்துறையினர் உடல் கேமராக்கள் அணிந்து பணியாற்றுவர். ராணுவம் வழக்கத்தை விட அதிக அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    மொத்தம் 12.77 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் சுமார் 3.58 சதவீதம் பேர் முதன்முறையாக வாக்களிக்க உள்ளனர் – பெரும்பாலும் இளைஞர்கள். இத்தேர்தலுடன் இணைந்து, ஜூலை தேசிய சாசனம் (July National Charter) அடிப்படையிலான 84 அம்ச சீர்திருத்த முன்மொழிவுகள் குறித்த பொது வாக்கெடுப்பும் (ரெஃபரண்டம்) நடைபெற உள்ளது. இது அரசியல் அமைப்பு, தேர்தல் முறை, நீதித்துறை போன்றவற்றில் மாற்றங்களை கொண்டுவரும் முயற்சியாகும்.

    முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆளும் அவாமி லீக் கட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டி முக்கியமாக இரு பெரும் கூட்டணிகளுக்கு இடையே உள்ளது. ஒன்று, கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பங்களாதேஷ் தேசிய கட்சி (BNP) தலைமையிலான கூட்டணி. மற்றொன்று, ஜமாத்-இ-இஸ்லாமி தலைமையிலான 11 கட்சிகள் கூட்டணி – இதில் 2024 போராட்டத்தை தொடங்கிய மாணவர்களால் உருவாக்கப்பட்ட நேஷனல் சிட்டிசன் பார்ட்டி (NCP) இணைந்துள்ளது.

    Bangladesh

    BNP கட்சி பல கருத்துக்கணிப்புகளில் முன்னிலை வகிக்கிறது. ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி மத அடிப்படைவாத கொள்கைகளுடன், பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டதாக கருதப்படுகிறது. இது இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமையலாம் என அஞ்சப்படுகிறது. தேர்தல் முடிவில் புதிய அரசு அமைந்தால், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால ஆட்சி முடிவுக்கு வரும். இத்தேர்தல் வங்கதேசத்தின் ஜனநாயக பயணத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைதியான, நியாயமான வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் விரும்புகின்றனர்.

    இதையும் படிங்க: வங்கதேசத்திற்கு ஜாக்பாட்: டி20 உலக கோப்பையில் விளையாடாவிட்டாலும் ஐசிசி-யின் அதிரடி சலுகைகள்!

    மேலும் படிங்க
    இதுதான் தவெக சொன்ன மாற்றமா?... நிலத்தகராறில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்...!

    இதுதான் தவெக சொன்ன மாற்றமா?... நிலத்தகராறில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்...!

    தமிழ்நாடு
    தூத்துக்குடியில் பயங்கரம்.. இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மோஹித் உள்பட 3 பேர் கைது!

    தூத்துக்குடியில் பயங்கரம்.. இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மோஹித் உள்பட 3 பேர் கைது!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தமிழ்நாடு
    ஈரானுடன் ஒப்பந்தம் வேண்டுமெனில் இஸ்ரேலை அங்கீகரியுங்கள்! சவுதி, பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் நிபந்தனை!

    ஈரானுடன் ஒப்பந்தம் வேண்டுமெனில் இஸ்ரேலை அங்கீகரியுங்கள்! சவுதி, பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் நிபந்தனை!

    தமிழ்நாடு
    தொகுதி பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தொகுதி பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அரசியல்

    செய்திகள்

    இதுதான் தவெக சொன்ன மாற்றமா?... நிலத்தகராறில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்...!

    இதுதான் தவெக சொன்ன மாற்றமா?... நிலத்தகராறில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்...!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தமிழ்நாடு
    ஈரானுடன் ஒப்பந்தம் வேண்டுமெனில் இஸ்ரேலை அங்கீகரியுங்கள்! சவுதி, பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் நிபந்தனை!

    ஈரானுடன் ஒப்பந்தம் வேண்டுமெனில் இஸ்ரேலை அங்கீகரியுங்கள்! சவுதி, பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் நிபந்தனை!

    தமிழ்நாடு
    தொகுதி பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தொகுதி பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அரசியல்
    2026 பத்ம விருதுகள் பெற்ற 13 தமிழர்கள்.. சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கினார் குடியரசுத் தலைவர்!

    2026 பத்ம விருதுகள் பெற்ற 13 தமிழர்கள்.. சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கினார் குடியரசுத் தலைவர்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share