திமுகவின் அரசியல் சுவடுகள், தமிழ்ப் பெண்களால் துடைத்தெறியப்படும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மழலை முதல் மூதாட்டி வரை கண்ணில் படுபவர்களை எல்லாம் பாலியல் வேட்டையாடும் மிருகங்களைத் தீனி போட்டு வளர்த்துவிட்ட திமுக எனும் தீயசக்தியை எம் தமிழ்ப் பெண்கள் அவ்வளவு எளிதில் மன்னித்துவிடுவார்களா அல்லது “திமுககாரர்” என்ற போர்வையின் மறைவில் நின்று கொண்டு உடன்பிறப்புகள் செய்த அட்டூழியங்களை எம் தமிழ்ப் பெண்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடுவார்களா என்று கேள்வி எழுப்பி உள்ளது.
திமுக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கையும், திமுகவினரால் பாதிக்கப்பட்ட பெண்களின் அலறல்களையும் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்ற விளம்பர விழாவைக் கொண்டு பூசி மெழுகிட முடியுமா என்றும் தாயுள்ளம் கொண்ட தமிழ்ப் பெண்கள் தன்மையானவர்களே தவிர ஏமாளிகள் அல்ல எனவும் கூறப்பட்டு உள்ளது.

எனவே தான், தங்கள் தகப்பன்களை மதுவிற்கும், தமையன்களைப் போதைக்கும், தம்பிகளைக் கஞ்சாவிற்கும் பழக்கப்படுத்தி, பாதி பெண்களுக்குக் “கைம்பெண்” என்ற பட்டத்தையும் மீதி பெண்களுக்கு “ஆதரவற்றோர்” எனும் புனைப்பெயரையும் பரிசளித்து மகிழ்ந்த “திமுக” எனும் அரக்கனின் அழிவிற்கான தேதியை எம் தமிழ்ப் பெண்கள் எப்போதோ குறித்துவிட்டனர் என்றும் கூறியது.
இதையும் படிங்க: விடாமுயற்சிக்கு வெற்றி..!! கீழடி அறிக்கையை வெளியிட வைப்போம்... முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!!
அதனை நோக்கிய அவர்களது அடுத்த அடி தான், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உள்ள வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் நடந்தேறிய கண்டன ஆர்ப்பாட்டங்கள் என்றும் இனி தேர்தல் நெருங்க நெருங்க தமிழ்ப் பெண்களின் கரங்கள் வலுவாகும், திமுகவின் மீதான பிடி இறுகும், தமிழகத்திற்கான நல்ல காலம் பிறக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: யாருக்கும் அழுத்தம் கொடுக்குற அவசியம் இல்ல... தமிழிசை சௌந்தரராஜன் திட்டவட்டம்..!!