நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற தண்டு மாரியம்மன் கோவிலானது அமைந்துள்ளது. இந்த நிலையில் இன்று இரவு சுமார் 12 மணி அளவில் கோவில் அருகில் நள்ளிரவில் இன்று இருசக்கர வாகனத்தில் ஒரு ஜோடி துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்துள்ளனர்.

அப்போது கோவில் வளாகத்தின் அருகே இருசக்கர வாகனத்தை சாலையில் நிறுத்தியை அந்த ஆண் நபர் துப்பாக்கியை எடுத்து சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அக்காட்சியில் இரு சக்கர வாகனத்தில் ஆண் நபர் அமர்ந்து கொண்டு சாலையில் சுடும் நிலையில் பின்னர் மீண்டும் துப்பாக்கியில் புல்லட்டை லோடு செய்யும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: நள்ளிரவில் வீடு புகுந்த மர்ம கும்பல்.. ரத்த வெள்ளத்தில் அலறித்துடித்த மனைவி.. இந்து முன்னணி நிர்வாகிக்கு அதிர்ச்சி..

மேலும் மர்ம நபர் சாலையில் சுற்றி திரியும் நாய்களை சுடும் நோக்கில் சுட்டாரா?அல்லது வேறு ஏதேனும் சுடுவதற்காக துப்பாக்கியை பயன்படுத்தினார ? என்பது தெரியாத நிலையில் ராசிபுரம் காவல்துறையினர் விசாரணை செய்த பிறகு தெரியவரும்,மேலும் நள்ளிரவில் ஒரு ஜோடி இருசக்கர வாகனத்தில் துப்பாக்கியுடன் வலம் வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
இதையும் படிங்க: எல்லையில் தினமும் துப்பாக்கிச்சூடு.. 4 வது நாளாக தொடரும் பதற்றம்.. இந்தியா பதிலடி தீவிரம்..!